l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்
தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏
....சிவ சிவ நமசிவாய சிவயநம திருச்சிற்றம்பலம்
தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்
சோழநாடு :- காவிரி தென்கரைத்தலங்கள்
.107.திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
சிவஸ்தலம் பெயர்:-திருவலம்புரம் (தற்போது மேலப்பெரும்பள்ளம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்:-வலம்புரநாதர்.
இறைவி பெயர்:-வடுவகிர்க்கண்ணியம்மை,
பத்மநாயகி.
தல விருட்சம்:-ஆண்பனை.
தீர்த்தம்:-பிரம்ம தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம்,
சிவகங்கை தீர்த்தம்.
புராண பெயர்:-திருவலம்புரம்
ஊர்:-மேலப்பெரும்பள்ளம்
தேவாரப் பாடல்கள்:-
"சம்பந்தர்"
1. கொடியுடை மும்மதி
"அப்பர்"
1. தெண்டிரை தேங்கி
2. மண்ணளந்த மணிவண்ணர்
"சுந்தரர்"
1. எனக்கினித் தினைத்தனைப்
🍁எப்படிப் போவது🍁
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.சீர்காழியில் இருந்து சுமார் 16 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.
🍁ஆலய முகவரி🍁
மேலப்பெரும்பள்ளம்
மேலையூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609 107.
🍁திருவிழா🍁
தை பரணியில் பிட்சாடணர் திருவிழா
பங்குனி உத்திரம், கார்த்திகை
சோமவாரம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம், தை, ஆடி, மகாளய அமாவாசை, திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🍁தல சிறப்பு🍁
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 107 வது தேவாரத்தலம் ஆகும்.
🍁பொது தகவல்🍁
உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் வீற்றிருக்கிறார். இங்கு தலப்பதிகக்
கல்வெட்டு உள்ளது.
🍁கோவில் அமைப்பு🍁
மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும். கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் விற்றிருக்கின்றார்.அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளன.கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் மூலவர் வலம்புரிநாதர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.உள் பிராகாரத்தில் சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் மிகச் சிறப்பாக உள்ளது. நடராசர் சபையும் மகாமண்டபத்தில் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன.தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.
🍁பிரார்த்தனை🍁
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி (பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் அவை நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
🍁நேர்த்திக்கடன்🍁
பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு வந்து மணியடித்து அன்னதானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
🍁தலபெருமை🍁
திருமால் சிவனைக்குறித்து தவம் செய்ய போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக சக்ராயுதமும், கதையும் பெற்றார்.அதன் பின் இங்கு வந்து, அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார்.
கோயிலாக உள்ளது.சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று
வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து
காட்சி கொடுத்துள்ளார்.இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது.எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகு சட்டம் சாத்தப்படுகிறது.அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் "மேலப்பெரும்பள்ளம்" ஆனது.
தந்தையின் ஆசைப்படி இத்தலத்தில் அஸ்தியை கரைத்து விட்டான்.எனவே இத்தலத்தை காசியை விட புனிதமானது என புராணங்கள் கூறுகிறது.தட்சனும் அவனது மனைவியும், தங்கள் மகளாக தாட்சாயினி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள பிட்சாடனர் பேரழகுடன் இருப்பவர்.இதை அர்த்தநாரீஸ்வர பிட்சாடனர் என்பர்.
🍁தல வரலாறு🍁
அவர்கள், மன்னா! திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும் என்றனர்.மன்னனும் அதன்படி செய்து வந்தான்.ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி
தோன்றி, அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும்.அப்போது மன்னனின் தோஷம் விலகும் என கூறியது.
🍁சிறப்புகள்🍁
ஏரண்ட முனிவர் வலஞ்சுழியில் காவிரியில் இறங்கி, இவ்வூரில் கரையேறியதாகக் கூறப்படுகிறது. இங்கு அம்முனிவருக்கு கோயிலுள்ளது.
இக்கோயில் மாடக் கோயிலாகும்.
இங்கு ஏரண்ட முனிவர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
கருவறை சிற்ப வேலைப்பாடுடையது. தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.
விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் "இராசராச வளநாட்டு ஆக்கூர் நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம்" என்றும்; சுவாமி "வலம்புரி உடையார் " என்றும் அம்பாள் "தடங்கண் நாச்சியார் " என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுச் செய்தி ஒன்று "பண்டைநாளில் கோயில்களுக்கு ஆண்களை விற்கும் பழக்கம் இருந்ததாக" தெரிவிக்கின்றது.
காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது.ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார்.அதனால் இத்தலம் "திருவலம்புரம்" ஆனது.ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது.
🙏சிவாயநம🙏
சிவ சிவ
திருநாவுக்கரசர் நாயனார் தேவாரம்
திருவலம்புரம்
தெண்டிரை தேங்கியோ தஞ் சென்றடி வீழுங் காலைத் ( நான்காம் திருமுறை )
பாடல் எண் : 1 விளக்கம்
எங்கும் வண்டுகள் தேனை வயிறாரப் பருகும் வலம்புரத்திலுள்ள பெருமான் கடலிலுள்ள தெளிந்த அலைகள் செறிந்து தம் திருவடிகளில் விழுந்து அலசும்போது , தொண்டர்கள் தம்மை அழைத்தவண்ணம் தொழுது அடியின் கண் வணங்கித் தம்மை உள்ளத்திலும் , தம் சிறப்பை உரையிலும் கொண்டு பாடும் வண்ணம் இருந்தாவாறென்னே !
பாடல் எண் : 2 விளக்கம்
மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் , மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகைளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே , தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் இருந்தவாறென்னே !
பாடல் எண் : 3 விளக்கம்
தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவனானேன் .
பாடல் எண் : 4 விளக்கம்
வலம்புரப்பெருமான் இளைய பெரிய பன்றியின் மூங்கில் முளைபோன்ற பற்களை அணிகலனாக மார்பில் பூண்டு , செறிந்த சடைகள் தாழ , வளைந்த பற்களை உடைய பாம்பினை இடைக்குப் பொருந்த இறுக்கிக்கட்டி , துதிக்கையை உடைய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து , கங்கையையும் பிறையையும் சடையிற் சூடி வளையல்களை அணிந்த மகளிர் தோத்திரிக்குமாறு அமைந்துள்ளார் .
பாடல் எண் : 5 விளக்கம்
இரா வேளையில் நெற்பயிர்க்குள் விரவி அதற்கு வளர்ச்சிதரும் சந்திரன் , மலைச்சிகரம் போல முடியப்பெற்ற தமது சுருண்ட சடையிலே நுழைந்து பளிங்கு போன்ற ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க , தம் அருளை அடைய விரும்பிய அடியார் எல்லோரும் அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நிற்க , அவர் பாடுகிற குறிஞ்சி யாழ்த்திறமான மருள் எனும் பண்ணிசை பொருந்திய பாடல்களைத் திருச்செவி சாத்தியவராய் உள்ளார்
பாடல் எண் : 6 விளக்கம்
நீண்ட சிவந்த சடையை உடைய வலம்புரத்துப் பெருமானே ! அபிடேகத்துக்குரிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து உம்மை அன்போடு முறையாக அபிடேகித்து நற்கதியைச் சேர வல்லேன் அல்லேனாய்ப் பொய்மையைப் பெருக்கி வாழும் அடியேன் , அச்செயல்களை மனத்தினால் நினைத்துப் பார்க்கின்றேனன்றி மெய்ம்மையைப் பொருந்த வல்லேனல்லேன் . இனி , யான் எனக்குச் செய்து கொள்ளக் கூடியது யாதோ அறியேன் .
பாடல் எண் : 7 விளக்கம்
செங்கயல்களும் , சேல்களும் தீங்கனியைப் பெற நாடித் தமது நீர்நிலைகளிலிருந்து பாய்ந்து போய் , பெரும் பொய்கையை அடைந்து நின்று கொங்கையழகியரான மகளிர் முழுகும் போதில் அவர் கொங்கைகளைக் கனியென்று கருதிப் பற்றுதலால் வருந்தும் அம்மங்கையரின் மனைமாட்சி நிலவும் மனைகளால் மிக்க நிறையும் வலம்புரத்தார் ( எம் ) அடிகள் ! ( மிக்கு + ஆர் - மிக்கு நிறையும் .)
பாடல் எண் : 8 விளக்கம்
ஊரின் அருகில் எல்லாம் செந்நெற்பயிர்களும் அப் பயிர்களின் இடையே பூத்த குவளை ஆம்பல் நெய்தல் என்ற பூக்களும் உள்ளன . தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் உள்ளன . மனைக்கொல்லைகளிலெல்லாம் பழங்கள் விழுகின்றன . அவ்வூரில் பறவை இனங்கள் கூடி ஒலித்து இறகுகளை உலர்த்தித் தங்கும் இடங்கள் பல உள்ளன . இத்தகைய வளங்கள் சான்ற வலம்புரத்திலே எம்பெருமான் உகந்தருளி உறைகின்றார் .
பாடல் எண் : 9 விளக்கம்
கரிய மலை போன்ற திருமேனியை உடைய கடல் நிறத்தவனாகிய திருமாலும் , திருமகள் தங்குவதற்கு என்று வரையறுக்கப்பட்ட தாமரைப்பூ மேல் உறையும் பிரமனும் காண முடியாதவராய் , ஒப்பற்ற கயிலைமலையின் உச்சியில் மேம்பட்டு உறையும் பெருமான் தம் அருமையை எளிமையாக்கிக் கொண்டு வந்து திருவலம்புரத்திறைவனாக உள்ளார்.
பாடல் எண் : 10 விளக்கம்
தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் வாய்கள் ( தலைகள் ) பத்தும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு , சிரித்துக் கொண்டே , தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர் .
🙏🏻 திருச்சிற்றம்பலம் 🙏🏻
சுந்தரர் தேவாரம்
திருவலம்புரம் திருப்பாட்டு
குறிப்பு: "மேலப்பெரும்பள்ளம்" என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் "மேலையூர் சட்ரஸ்" என்ற இடத்தில் இருந்து தெற்கே பிரியும் சாலையில் 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது
நெய்தலும் மருதமும் மயங்கும் காவிரிக்கரையோரம் அமைந்துள்ள இத்தலத்தில் இன்றும் பனைமரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன இதையொட்டி சுந்தர மூர்த்தி சுவாமிகள் "பனைக்கனி பழம்படு பரவையின் கரை", "பனைபழம் படுமிடம்" என்றும் பனம்பழம் மரத்திலிருந்து விழுமோசையான "சடசட" என்ற ஒலிக்குறிப்புடன் இதனை "சடசட விடுபெணை பழம்படும் இடம்" என்றும் குறித்திருப்பது எண்ணி மகழத்தக்கதாம்
திருவலஞ்சுழியில் பிலத்துவாரத்தில் புகுந்த காவிரியை உயிர்தியாகம் செய்து வெளிப்படுத்திய "ஹேரண்ட மகரிஷி" வழிபட்ட தலம் இது
திருமால் பூசித்து, சங்கு பத்மம் கதை உள்ளிட்டவற்றை பெற்றார். இத்தலத்து இறைவர் "திருமுடியில் கை நுழையும் அளவிற்கு இரண்டு துளைகள் உண்டு, இதுபற்றியே பெரும்பள்ளம் எனப்பட்டது என்பாரும் உளர்" இவருக்கு புனுகு சாம்பிராணி தைலம் சார்த்தி குவளை கவசமிட்டு அபிசேகம் செய்வர்
அரசன் ஒருவன் தான் விளையாட்டாக சொன்ன பொய்யால் மனைவியிறந்த தோஷம் நீங்க நாள்தோறும் ஆயிரம்பேருக்கு அன்னதானம் செய்து வந்தான், வானில் எழுந்த அசரீரி "எப்போது ஒரு மகான் வந்து உணவு உண்கிறாரோ அப்போது ஆலய மணி ஒலிக்கும் அப்போது உன் தோஷம் நீங்கும்" என்றது
தினம் நடந்த அன்னதானத்தில் ஒருநாள் உணவு தயாராகும் முன்னரே "பட்டினத்தடிகள்" வந்து உணவு கேட்கவே, பரிசாரகர்கள் இல்லை என்று கூறிவிட்டனர், புழக்கடையில் வழிந்தோடிய சோறுவடித்த கஞ்சியை அள்ளிப்பருகினார் பட்டினத்தடிகள். அப்போது ஆலயமணி ஒலிக்கவே அன்னதானமே தொடங்காமல் மணி ஒலித்தது கண்டு ஆச்சர்யப்பட்ட மன்னர் பட்டினத்தடிகளை அறிந்து போற்றினார்
இவ்வைதீக விழா இன்றும் இங்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது, மூவர்தேவாரமும் பெற்றுள்ள தலம் இது
அப்பர்சுவாமிகளின் தாண்டகப்பாடல்கள் மிகவும் சுவைமிக்கதாக அமைந்திருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகப்பாடல்கள் இவை
பண் : காந்தாரம்
பாடல்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி அவன்தமர்க்கு இனியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே
கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே
பொருள்
எனக்கு இனியவனும் , தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும் , எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம் , பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள , ` திருவலம்புரம் ` என்னும் தலமே . இதனை அறிந்தேனாகலின் , எனக் கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந் தேனாயினேன் .
திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும் , புதியவனும் , மரவுரியையும் புலித்தோலையும் அரை யிற் பொருந்தியவனும் , பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும் , இரவின்கண் தீயில் நின்று ஆடுப வனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே
நீறணிந்த மேனியை யுடையவனும் , சினங் காரண மாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும் , பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும் , நீரை அணிந்த , ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய , இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே
🌷சிவாயநம🌷
🌷திருச்சிற்றம்பலம்🌷
🙏🐚எம்பிரான் திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்🐚🙏
🥀நான்காம் திருமுறை🥀
131.🔱திருவலம்புரம்
- திருநேரிசை🔱
🌴தெண்டிரை தேங்கி ஓதஞ்
தொண்டிரைத் தண்டர் கோனைத்
தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்
வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
குழகர்தாம் இருந்த வாறே.🌴.1
வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்
பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித்
தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
வலம்புரத் திருந்த வாறே.🌴.2
திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு
அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்
வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று
நல்வினைப் பயனுற் றேனே.🌴.3
பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்
வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகைய போர்வை போர்த்துப்
புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்
வலம்புரத் தடிகள் தாமே.🌴.4
றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்
அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
வலம்புரத் தடிக ளாரே.🌴.5
நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்
கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
இனிவலம் புரவ னீரே.🌴.6
தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து
தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்
கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
வலம்புரத் தடிக ளாரே.🌴.7
அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்
பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே
கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்
வலம்புரத் தடிக ளாரே.🌴.8
🌴கருவரை யனைய மேனிக்
கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்
திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி
ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்
அவர்வலம் புரவ னாரே.🌴.9
வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்
தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்
அவர்வலம் புரவ னாரே.🌴.10
🌷சிவ சிவ🌷
🌷திருச்சிற்றம்பலம்🌷
No comments:
Post a Comment