Monday, February 21, 2022

வடபழனி முருகனும் பின்னே மோருஞ்சாதமும்

 வடபழனி முருகனும்  பின்னே மோருஞ்சாதமும்..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பாபிஷேகம் முடிஞ்சு 45 நாட்ளுக்குள்ள தரிசனம் பண்றது விசேஷம்ங்கறதால இன்னிக்கு ( சண்டே 20 பிப்ரவரி )  மெட்ரோல டிராவலாகி வடபழனில எறங்கினோம்.

கோயில் வாசல்லயே செம கூட்டம்.

100 , 50 கட்டண சிறப்பு தரிசன க்யூவ தாண்டி இலவச வரிசைல நின்னோம்.

கிட்டத்தட்ட ₹50 டிக்கெட் க்யூவும் எங்க க்யூவும் ஒருசேரதான் மெதுவா நகர்ந்தது ! - ஒன்றரை மணிநேரம் க்யூவுல நின்னு ஒருவழியா முருகன தரிசிச்சோம்.

‘ முருகனுக்கு அரோகரா..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..கோஷங்கள்.

பிரகாரங்கள சுத்தி முடிச்சோம்.

கோயில்ல பிரசாத ஸ்டால்ங்கள காணோம்.

வெளில வந்து நடந்தோம். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால இங்க வந்ததுதான். அப்புறம் வர சந்தர்ப்பம் அமையல..!.

முன்னலாம் கோயில் இருக்கற தெருல ஒரு கடைல நாம சொல்ற  காய்ங்கள நம்ம எதிர்க்கயே நறுக்கி கல்லமாவு கரைசல்ல தோச்செடுத்து கொதிக்கற எண்ணெ மிதக்கற வாணலில போட்டு சூடான பஜ்ஜிய குடுப்பாங்க. 

அத ஊதி ஊதி சாப்டறதுலேயும் ஒரு அலாதி சந்தோஷம்தான் !.

இப்ப அந்த கடையலாம் காணோம். நெறய மாறிப்போய்ருக்கு. சரவணபவன் இருந்த பில்டிக் இப்ப ஆர்த்தி ஸ்கேன் சென்ட்டரா அவதாரம் எடுத்துருக்கு !.

பக்கத்து ஜூஸ் கடைல ஜில்லுனு பாதாம் மில்க குடிச்ட்டு மெட்ரோ  ட்ரெய்ன்ல ஏறி…

ஒருவழியா எட்டு மணிக்கு வூடு வந்து சேர்ந்தோம்.

“ ஏங்க , என்ன சாப்ட போறீங்க..? “

“ நல்லா கொழைவா சாதம் வடிச்டுமா. மோர் சாதம் சாப்ட்டுர்வோம்..”.

“ நெஜம்மாவா.. மோருஞ்சாதம் மட்டும் போறுமா..!?.”.

“ ம் , அதுக்கு முன்னாடி…”.

 அதுக்கு முன்னாடி..? “.

“ உருளக்கிழங்கு , வெங்காயத்த எடுத்துக்குடு. நா பொடிசா நறுக்கித்தர்றேன்..”.

“ அது என்னத்துக்கு..? “.

“ ரெண்டு பச்ச மொளகாயும் எடு..நறுக்கி குடுத்துடறேன். நீ வதக்கி  மசால ரெடி பண்ணு..கொஞ்சமா கல்லமாவ உப்பு போட்டு கரைச்சுடு. நா உருட்டி போண்டா போட்டுடறேன். நீ மோர் சாதத்த பெசஞ்சுடு..! “.

“ அதான பார்த்தேன் – என்னடா மனுஷன் வெறும் மோர் சாதம்னு ஆரம்பிக்றாரேனு..சர்தான்..அவ்ளவ்தானா ..வேற எதாவது பாக்கி இருக்கா..? “.

“ அந்த மோர் சாதத்த  பெசஞ்சதும் அதும்மேல கொஞ்சமா , ஆனா தாராளமா இட்லி மொளகாப்பொடிய தூவிடுமா. இன்னிக்கு டின்னர் உருளக்கிழங்கு போண்டா + மோருஞ்சாதத்தோட போறும் ..!.”.

“ ஆஹா !. பேஷ்..அப்டியே செஞ்சுட்டாப் போச்..!.”.

 --மடிப்பாக்கம் வெங்கட்.



No comments:

Post a Comment