Tuesday, February 22, 2022

ஆரோக்கியமான காலை உணவின் அவசியம்

 ரோக்கியமான காலை உணவின் அவசியம்

 தினசரி காலையில் பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், தேங்காய்த் துருவல் அதாவது, பப்பாளிப்பழம் 300 கிராம், பேரீச்சம்பழம் 6 பழம், அத்திப்பழம் 4 பழம், தேங்காய் துருவல் 50 கிராம் இதனுடன் தினசரி ஒரு டம்ளர் பால் இதை காலை உணவாக சாப்பிட்டு வர எலும்பு, நரம்பு, தசை மண்டலக் கோளாறுகள் அனைத்தும் முழுமையாக தீரும்.

காலை உணவை பெரும்பாலும் பழ உணவாகவோ, கீரை உணவாகவோ, பருப்பு உணவாகவோ, பயறு உணவாகவோ, உணவு சுழற்சி செய்கிற பொழுது இன்னும் நல்ல பலனைப் பெற முடியும். காலை உணவில் அடிப்படையில் ஒரு நாளைக்கு பப்பாளி உணவை எடுக்கலாம். அடுத்த நாள் இரண்டு ஆப்பிள் பழத்தை நன்றாக தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கூடவே 10லிருந்து 20 வரை முந்திரிபருப்பு சேர்த்து சூடான பாலில் போட்டு வைத்து அதை தினசரி சாப்பிடுவது இதை ஒரு நாள் சாப்பிடலாம். ஆப்பிள், முந்திரி, பால் கலவை காலை உணவாக எடுக்கும் பொழுது சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். சதைக்கட்டு உண்டாகும், நரம்புகள் இறுகும், அதேபோல் எலும்பு நன்றாக வன்மையுறும். எலும்புக்குத் தேவையான வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைய கிடைக்கும்.

புளிப்பு மாவில் செய்யக்கூடிய தோசையைக் கூட முடக்கத்தான் கீரையையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து தோசையாக செய்து சாப்பிடும் பொழுது அந்த புளிப்புத்தன்மை முழுமையாக சரியாகக்கூடிய தன்மை உண்டு. அதே நேரத்தில் அந்த தோசையை மருந்தாக்கக்கூடிய தன்மையை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

காலை உணவாக முருங்கைக்கீரை கூட்டைக் கூட சாப்பிடலாம். ஒரு சிலருக்கு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடக்கூடிய பழக்கம் இருக்கும். அந்த மாதிரி இருக்கக்கூடியவர்கள் முருங்கைக்கீரை, நாட்டுக்கோழி முட்டை, மிளகு தூள் இதை சேர்த்து வைத்து தொடர்ந்து விடாமல் 48 நாட்கள் சாப்பிடுகிற மூன்று மண்டலங்களையும் ஒழுங்காகக் முறையாகக் கட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் நல்ல சீரான உடலமைப்பைப் பெற முடியும்.

No comments:

Post a Comment