Sunday, February 20, 2022

பாம்பே ரவா தோசை

 பாம்பே ரவா தோசை

 🍱 தேவையான பொருட்கள்: 

1. பாம்பே ரவா - 3 கப்
2. அரிசி மாவு - 2 கப்
3. கோதுமை மாவு - 1 கப்
4. பச்சை மிளகாய் - 6 எண்ணம் (நறுக்கிக் கொள்ளவும்)
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. பெருங்காயம் - சிறிது
8. மோர் - 2 கப்
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தோசை வார்க்க

🍴 செய்முறை: 

1. ஒரு பெரிய பத்திரத்தில் பாம்பே ரவா, அரிசிமாவு, கோதுமை மாவு எல்லாவற்றையும் போட்டு, உப்பு போடவும்.

2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் எல்லாம் தாளித்து மாவுடன் சேர்க்கவும்.

3. மாவை நன்கு கையால் கலந்து, மோர் விட்டுக் கட்டிகளில்லாமல் கரைக்கவும்.

4. அரைமணி வைத்திருந்து அதன் பின்பு, தோசைக்கல்லில் தோசைகளாய் வார்த்து எடுக்கவும்.



No comments:

Post a Comment