🌹🙏திருப்பதி முதல் 🏞திருமலை வரை...
ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 2 App களுடன் போராட்டம்.
Govinda Appமூலம் திருமலையில் ரூம் கிடைச்சும் ஏழெட்டு டெபிட் இருந்தும் சிலது தகராறு பண்றது. மறுபடி ஒரு டெபிட் கார்டோட போராடி பணம்கட்டி அலாட்மெண்ட் மெசேஜ் வந்து இவர்ட்ட காட்டறேன்..
பேஷ் பேஷ் 100/- க்கு திருமலைல ரூம் ரொம்ப சமத்து தான் ..முத நாளே கீழ திருப்பதி போகணுமே. அங்க எங்க தங்கறதாம்கறார்.
கோவிந்தா ஆப்ல திருப்பதிக்கு புக் பண்ண ப்ரவிஷன் இல்லையேன்னு அன்னிக்கு முழுக்க ராத்திரி 12 மணி வரைக்கும் போராடி நேர திருமலைக்கே போயிடலாம்னு முடிவு பண்றேன்.
இவர் வழில சோளிங்கர்ல முதல்நாள்தங்கி மலை மேல ஏறி பெருமாள் சேவிச்சுட்டு அடுத்த நாள் அங்கேர்ந்து திருமலை போகலாமேங்கறார்.
அந்த ஊர்ல லாட்ஜும் கேட்டு வைக்கறார்
அப்படியே திருச்சானூர் நாகலாபுரம் சித்தூர் னு என்னென்னவோ ஆப்ஷன் சொல்லி குழப்பறார். எனக்கு கீழ திருப்பதிலேயே சாண் இடம் கொடுக்க சொல்லி பெருமாளை வேண்டிக்கறேன்.
மறுநாள் TTD Info ன்னு இன்னொரு ஆப் Download பண்ணி அவசர அவசரமா போராடி அது 2 ந்தேதி 6.00 டு 12 ன்னு எதோ டயத்துல புக் பண்ண சொல்ல டெபிட் கார்டு போட்டு 200+200 கட்ட சொல்றது. ஶ்ரீனிவாசம் காம்ளெக்ஸ் ல 12 மணிக்குள்ள ரிபோர்ட் பண்ணனும். இவர் கார்த்தால கூடு வாஞ்சேரில கிளம்பி 12 மணிக்குள்ள ஶ்ரீனிவாசம் தேடிண்டு போய் ஒரு வேளை நேரமாயிட்டா accomadation cancel னு போட்டிருக்கு பார்னு குண்டை தூக்கி போடறார்.
எல்லாம் கார்த்தால 4.00 க்கெல்லாம் எழுந்து கரெக்டா போயிடலாம்கறேன். இவர் காஞ்சிபுரம் போய்ட்டா திருப்பதி பஸ் கிடைக்கும் கறார்.
4.00 மணிக்கு எழுந்துண்டேனே தவிர இவர் ரெடியாகி கத்தகத்த வழிக்கு மோர்ஞ்சாதம் பிசைஞ்சு எடுத்துண்டு ரூமெல்லாம் பூட்டி ஆத்தை விட்டு கிளம்ப 5.30 ஆகி செங்கல் பட்டு 6.30 க்கு போய் காஞ்சிவரம் 8.45 க்கு போறோம். பாதரூம் போய்ட்டு ஓட்டல் ல ரெண்டு இட்லி பிச்சி வாய்ல போட்டுண்டு வந்தா ஒரு ப்ரைவேட் பஸ் 8.20 க்குங்கறான்.
பக்கத்துல கவர்மண்ட் பஸ் 8.40 க்குன்னு அதுலதான் சீட் வசதியாயிருக்கும்னு ஏற சொல்றேன். இவர் கத்திண்டே ஏறி எப்ப போய்சேரும்னு கண்டக்டர்கிட்ட கேக்க அவன் 12 ஆகும்னு சொல்ல அதுக்குள்ள ப்ரைவேட்பஸ் கிளம்ப மறுபடி அதுல கூட்டத்துல ஏறிக்கறோம்.
அது அங்கங்க நின்னு வழி டிக்கட் ஏத்திண்டு போறது...நான் இவரை திட்டறேன்..அரக்கோணம் வந்து நல்ல எடமா கிடைக்கறது. 12 க்குள்ள போய்ச்சேர்ந்து எடம் கிடைக்கணுமேன்னு பெருமாளை த்யானம்பண்ணின்டுவரேன்.
இவரோ புத்தூர்நகரில ரோஜா (அவ தொகுதியாம்)கட் அவுட்ல ஜெகன் மோகனுடன் ஜெகன் மோகினியா நிக்கறா பாருடின்னு வேடிக்கை பார்த்துண்டு வரார்.
குறிப்புகள்
2. சேஷ மலை
பெருமாளின் அவதாரம் ஆதிசேஷன். இவர் மலையாக அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் ‘சேஷ மலை’ என்று அழைக்கப்படுகிறது.
சேஷாத்ரி:
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம்*
– *சீர்பெற்றிம்
மண்ணிலுறை வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.*
திருப்பதியில் தினமும் மண் பானையில் தயிர்சாதம் மட்டும் தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறதாம்!
Govinda App - Tirumala Tirupati Devasthanams app provides services to devotees of Lord Sri Venkateswara, Tirumala. A pilgrim can avail services like Accommodation, Special Entry Darshanam, Hundi, Seva and can be involved in various trusts and schemes that are part of Tirumala Tirupati Devasthanams.
The new App aims to provide pilgrims with better user experience in availing the Services. Pilgrim registration with valid e-mail ID is a prerequisite for booking of Seva/Accommodation/Darshanam . Registration OTP will be sent to the registered mobile number for verification & activation. Please complete all this process well in advance to avail online services.
No comments:
Post a Comment