கிரீன் தோசை
👉தோசைகளில் பலவகை உள்ளது. அதில் ஒரு வகை தான் கிரீன் தோசை. இப்போது கிரீன் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பாசிப் பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
👉 முதலில் பாசிப் பயறை இரவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.
👉 பிறகு காலையில், ஊறவைத்த பாசிப் பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், முந்திரி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும்.
👉 அதன் பின்பு தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்து கொள்ளவும்.
👉 பிறகு சூடான தவாவில், மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
👉 சுவையான கிரீன் தோசை தயார்.
No comments:
Post a Comment