Sunday, February 27, 2022

எண்ணப்பறவை_23

எண்ணப்பறவை_23

'ஏக்கேண்ணா, அம்மா என்ன சொன்னா?'

'அடப்போடா.  உனக்காக பேசப் போய் நானும் பவானியும் இப்ப உனக்கு வரன் பார்க்க முழு மூச்சா இறங்கிட்டோம்.  உனக்கு கல்யாணத்த பண்ணி குஜராத் அனுப்பறதுன்னு முடிவே பண்ணிட்டோம்.'

அவன் அம்மாவிடம் பேசியதை அரவிந்திடம் கூறுகிறான்.

'நான் சொல்றத கேளு.  எல்லா அம்ஸமும் இருந்து உடனே கல்யாணத்துக்கு தயாரா இருக்கற வரனா வந்தா பார்ப்போமே.  ஏன் இதையே நெனச்சு கவலப் பட்டுண்டு இருக்கே?'

'அதுக்கு இல்ல ஏக்கேண்ணா.  ஒருவேளை நான் ஆனந்துக்கு போகறதுக்கு முன்னாடி பொண்ணு கிடைக்கலைனா அம்மா நான் அங்க போறதுக்கு ஒத்துக்க மாட்டாளே.  எப்படி சமாளிச்சி தப்பிச்சு போறது.'

'ஏய்.  மொதல்ல ஆர்டர்லாம் கைக்கு வரட்டும்.  இப்பவே எதுக்கு அதப் பத்தியெல்லாம் பேசிண்டு.'

'என்னவோ நீங்களாச்சு என் அம்மாவாச்சு.  மொத்தத்துல ஒருத்தனோட கேரியர் உங்களுக்கெல்லாம் பெரிசா தெரியல.'

'அரவிந்தா அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே.  பவானியோட சித்தியோட மச்சினன் பொண்ணு ஒருத்தி இருக்காளாம்.  நேத்திக்கு எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வழியா பேசிட்டோம்.  அவ ஃபோட்டோவும் ஜாதகமும் நாலு நாளுல வந்துடும்.  உமான்னு பொண்ணு பேரு.'

'இது வேறையா..?'

ஆஃபீஸில் வேலை பார்த்துக் கொண்டே இவ்வளவு சம்பாஷணைகள்.

மதியம் அரவிந்திற்கு ஒரு ஃபோன்.  லக்ஷ்மணன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு.

'சார், அமுல் கம்பெனியிலிருந்து பேசறேன்.  நுங்கம்பாக்கம் ஹை ரோடுல உள்ள எங்க ப்ராஞ்சுக்கு கொஞ்சம் வரமுடியுமா?  முடிஞ்சா இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு கட்டாயமா?'

'எஸ் மிஸ்டர் லக்ஷ்மணன்.  ஷ்யூர்.'

'ஏகேண்ணா...'

'என்ன வண்டி வேணும் அதானே.  இந்தா சாவி.  நீ பேசும்போது கேட்டேன்.  புரிஞ்சுண்டேன்.  ஆல் தி பெஸ்ட்.'

'பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட் சூரியை நாலு மணிக்கு வர சொன்னேன்.  அவர  நாலரைக்கு வரச் சொல்றேளா?'

'கவலப் படாம போடா.  நான் பார்த்துக்கறேன்.'

அமுல் கம்பெனி நுங்கம்பாக்கம் ரோட் ப்ராஞ்ச்.  பர்சனல் மேனேஜர் லக்ஷ்மணன் குரலுக்காக அரவிந்த் வெயிட்டிங்.

'வாங்க மிஸ்டர் அரவிந்த்.  நீங்க எங்க ஜிஎம் நடத்திய இன்டர்வ்யூல ஸீனியர் அக்கௌண்டண்டா செலக்ட் ஆகியிருக்கீங்க.  வாழ்த்துக்கள்'

'த்தேங்க் யூ சார்.'

'ஆக்ச்சுவலா உங்க போஸ்டிங் எங்களோட ப்ரொபோஸ்ட் ஸெகண்ட் யூனிட் ஆனந்துல.  ஆனா ப்ராஜக்ட் ஃபோர் ஆர் ஃபைவ் மன்த்ஸ் டிலே ஆகும் போல இருக்கு.'

அரவிந்த்தின் முக மாற்றத்தை லக்ஷ்மணன் சற்றென்று பார்த்து விட்டார்.

'கம் ஆன் மிஸ்டர் அரவிந்த்.  நான் இன்னும் முடிக்கல.'

கொஞ்சம் ஆர்வம் இப்போது தலையெடுத்தது அரவிந்திற்கு.

'உங்களோட நடத்திய இன்ட்ர்வ்யூ இம்ப்ரெஸிவா இருந்ததா எங்க ச்சீஃப் ஜென்ரல் மேனேஜர் ஃபீல் பண்றார்.  அதனால தற்காலிகமா உங்கள மெட்ராஸ் ஆஃபீஸ்லேயே போஸ்டிங் போடலாம்னு ஃபீல் பண்றாங்க.  உங்க கன்ஃபர்மேஷனை கொடுத்தீங்கன்னா, அதுக்கு தகுந்த மாதிரி அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் இஷ்யூ பண்ணிடலாம்.'

'ஏதாவது சம்பளத்தில டிஃபரன்ஸ் இருக்குமா?'

'பெரிசா ஒண்ணும் இருக்காது.  இன் ஃபேக்ட் கொஞ்சம் கூடுதலா இருக்கலாம் மெட்ராஸ் மெட்ரோபோலிடனா இருக்கறதால.'

'இன் தட் கேஸ், ஐ அக்ரி.'

'நான் நாளைக்கு சாயந்திரம் அஹமதாபாத் போறேன்.  நானே CGM ஓட பேசி உங்களுக்கஆர்டரையும் கையோட வாங்கிண்டு வந்துடறேன்.  மெட்ராஸ் வந்தோண்ண உங்களுக்கு ஃபோன் பண்றேன்.'

'தேங்க் யூ சார்.'

'விஷ் யூ குட் லக்.'

ஆஃபீஸ் வந்தான்.  வரும்போதே ஒரு தம்ப்ஸ் அப் வெளிப்பாடோடு அனந்த கிருஷ்ணனின் எதிர்பார்ப்பு.

'சூரி நாளைக்கு வரேன்னு போயிட்டான்.  அது கிடக்கட்டும்.  போன காரியம் என்ன ஆச்சு?'

அமுல் பேச்சு வார்த்தைக்ளை விவரமாக சொன்னான்.

'நான் சொல்லல.  ஊப்பர்வாலா லேசு பட்டவர் இல்ல.  உனக்கு கல்யாணத்த பண்ணி குஜராத் அனுப்பணும்னு அவன் முடிவு பண்ணிட்டான்.  அம்மாவோட கண்ணீருக்கு பதில் கிடைக்காம இருக்குமா என்ன?'

மனதுக்குள் சிரித்துக் கொண்டான் அரவிந்த்.  'ஏக்கேண்ணா எங்க சொன்னார்?  சொல்லியிருப்பார்.  நாம தான் காதுல சரியா வாங்கல போல இருக்கு.'

தொடரும்....

No comments:

Post a Comment