மாங்காய் தொக்கு
🍱 தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 3 எண்ணம் (புளிப்பில்லாதது)
2. காய்ந்த மிளகாய் - 12 எண்ணம்
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
6. நாட்டுச் சர்க்கரை - 2 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - 100 மி.லி
8. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
2. காய்ந்த மிளகாய் - 12 எண்ணம்
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
6. நாட்டுச் சர்க்கரை - 2 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - 100 மி.லி
8. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
🍴 செய்முறை:
1. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை இலேசாக வறுத்து, அதில் வெந்தயம், கடுகு, இரண்டையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
2. பிறகு, அதனைச் சிறிது நேரம் ஆறவைத்து. அதன் பின்பு மிக்ஸியில் மென்மையாகப் பொடிக்கவும்.
3. ஒரு வாணலியில் 5 மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெயை விட்டு, அதில் தோல் சீவி, மெலிதாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
4. மாங்காய் நன்றாக வெந்ததும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்கவும்.
5. பொடித்த பொடி, பெருங்காயம் இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.
6. சூடாக இருக்கும்போதே மீதியுள்ள எண்ணெயைச் சேர்க்கவும்.
No comments:
Post a Comment