தூள்வடகம் உப்புமா
▶️🔰தேவை
அரிசி வடகம் (முறுக்கு வடகம்) - 10,
மோர் _ ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,
மல்லித்தழை - சிறிதளவு.
▶️🔰செய்முறை:
golden🕐
🔰வடகத்தை சிறு துண்டுகளாக ஒடித்துக்கொள்ளவும்.
🔰அவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி.. பிறகு, 20 நிமிடம் மோரில் ஊறவிடவும்
🔰(வடகத்தூள் மூழ்கும் வரை மோர் விட்டால் போதும்).
🔰பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை போட்டு வறுத்து, ஊறின வடகத்தை போட்டு வதக்கி, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கவும்.
🔰அவசரத்துக்கு செய்ய அருமையான உப்புமா.
▶️🔰குறிப்பு: வடகத்திலேயே உப்பு இருப்பதால், தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கலாம்.
No comments:
Post a Comment