சமையல் குறிப்பு.
கோபி 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* காபிஃப்ளவர் - 1 (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
மாவிற்கு...
* மைதா - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* சோள மாவு - 1/8 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1/8 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து, பின் நீரை முற்றிலும் வடிகட்டி விட வேண்டும்.
* பின்னர் ஒரு பெரிய பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் காலிஃப்ளவரை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் உதிர்த்துவிட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கோபி 65 தயார்.
குறிப்பு:
* காலிஃப்ளவரை எண்ணெயில் பொரிக்கும் போது, எண்ணெயை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் காலிஃப்ளவர் அதிக எண்ணெயை உறிஞ்சும்.
* காலிஃப்ளவருக்கு தயாரிக்கும் 65 மாவு அதிக நீராகவோ, அதிக கெட்டியாகவோ இல்லாமல், மிதமான பதத்தில் இருந்தால் தான், மாவு காலிஃப்ளவரில் ஒட்டும்.
* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக, காஷ்மீரி மிளகாய் தூளைப் பயன்படுத்தினால் நல்ல சிவப்பு நிறத்தில் கோபி 65 இருக்கும்.
* பேக்கிங் சோடா சிறிது சேர்த்தால், கோபி 65 கடினமாக இல்லாமல் மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஊற வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
* விருப்பமுள்ளவர்கள், மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment