Saturday, February 26, 2022

திருப்பதி முதல் திருமலை பகுதி 1.

 🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு

By சுஜாதா &வெங்கடேசன்

பகுதி 1. கோவிந்தா app மூலம் கோவிந்த தரிசனம்

நான் சுஜாதா பேசறேன். நீங்க 90% பேர் திருப்பதி போயிருப்பேள். அதுல 90%பேர்  பஸ்லயோ கார்லயோ ஏன் ஃப்ளைட்லயோ கூட போய் கூட்டத்துலயோ சொகுசாவோ பெருமாளை சேவிச்சதே போதும்னு திரும்பி இருப்பேள்

கோயில் போகற வழில கோயிலுக்கு உள்ள பார்க்க வேண்டியதை பார்க்க நேரமும் உடம்பில் சக்தியும் தீர்ந்து போய் திரும்பி இருப்பேள். 

உங்களுக்காக இந்த பயணக்கட்டுரையில் ஒவ்வொரு இடத்தோட தாத்பர்யம் நாங்க பார்த்தத படித்தத (கூகுள் துணையோடதான்) பகிர்ந்துண்டு வரேன்.  மறுபடியும் போகும் போது நெனவு வச்சுண்டு பார்த்துட்டு வாங்க

இவர் ஊர்ஊரா என்னை அலைய விட்டு அழச்சிண்டு போனாலும் நான் குல தெய்வக்கோயிலான திருப்பதிக்கு கூப்பிட்டா மட்டும் அவ்ளோ ஈசியா  ஒத்துக்க மாட்டார். உன்னை 1000 கிமீ க்கு அந்தண்ட மலை மேல குக்ராமத்துல இருக்கற கோயிலுக்கு கூட அழச்சிண்டு போறேன். போறது கஷ்டம்னாலும் எவ்ளோ நேரம்னாலும் எத்தனை தடவைன்னாலும் தரிசனமும் புது புது அனுபவமும் கிடைக்கும் ஆனா திருப்பதி கூட்டத்துல இடிபட்டு ரூம் கிடைக்காம நாள் கணக்கா காத்திருந்து நாம அனுபவிச்ச கஷ்டம் மறந்து போச்சாம்பார்.

 அதுவும் கொரானா வந்தப்பறம் அங்க ரொம்ப கெடுபிடின்னு தள்ளி போட்டுண்டே வந்தார். 

திடீர்னு இந்த பிப்ரவரில 1-15 ம்தேதி 300/- டிக்கட்க்கு ஜனவரி 28 ல கார்த்தால 9.00 மணிக்கு online slot open ஆறதுன்னு வாட்சப் மெசேஜ் பார்த்துட்டு இவர கேக்காமலேயே என் போன்ல “கோவிந்தாங்கற “app download பண்ணின்டு 8.45 லேர்ந்து வெய்ட் பண்ணி பெருமாளை ப்ரார்த்தனை பண்ணின்டு ரெண்டு பேரோட ஆதார் கார்ட் ,டெபிட் கார்ட் எடுத்து வச்சிண்டு அந்த  ஆப்ஐ தொட்டு தொட்டு பார்த்துண்டிருந்தேன். 

என்னைப்போல லட்சக்கணக்குல ஜனங்க தொட்டதுனாலயோ என்னவோ அது ஆட்டம் காட்டி ஒரு வழியா ஓபன் ஆனதும் கடகடன்னு இவர்ட்ட சொல்லாமலேயே என் பேர் இவர் பேர் ஆதார் நம்பர்லாம் டைப் பண்ணி அது தப்பு தப்புன்னு சொல்ல மறுபடி மறுபடி முயற்சி பண்ணி திறந்து அலாட் ஆகி பணம் கட்ட என் டெபிட் கார்டு போட்டா ஓடிபி தப்பாகியோ என்னவோ பாங்ல ரிஜக்ட் ஆகி மாத்தி மாத்தி டெபிட் கார்டு போட்டு ஒரு எட்டு நிமிஷம் பயங்கர ஸ்பீடா போராடி 3 பிப்ரவரி மத்யானம் 4.00 ஸ்லாட்ல அலாட் ஆகி மெசேஜ் வரது. 

சர்ப்ரைஸா இவர்ட்ட சொன்னதும் ரொம்ப சமத்துதான் ,தரிசனம்  கிடைச்சா போதுமா.?

தங்கறதுக்கு ரூம் உங்க அப்பாவா கட்டி வச்சிருக்கார் ரூம் புக் பண்ணிட்டு சொல்லுங்கறார்.. அந்த app ல Accomadation ங்கறதை அழுத்தி அழுத்தி பார்த்தா அது திறக்கவே இல்லை. அப்பறம் இவர் கீழ எதையோ படிச்சுட்டு 29 ஜனவரி தர்ம தரிசனம் அலாட்மண்ட் முடிஞ்சி அன்னிக்கு 4.00 மணிக்குதான் அந்த பட்டன் திறக்கும்கறார். 

எதுக்கும் தர்ம தரிசனமும் ட்ரை பண்ணாலாமேன்னு காலை 8.45 க்கு ஞாபகப்படுத்த சொல்ல மறந்து போய் 9.15 க்கு திறந்தா திறக்கவே இல்லை. (மறுநாள் இவர் பேப்பர் பார்த்துட்டு ஆப்ஓபன் ஆன பத்து நிமிஷத்துல தினம் பத்தாயிரம்னு 15 நாளைக்குள்ள ஒன்றரை லட்சம் பேர் பதிவாயிட்டதுங்கறார்)

எதோ ஒரு தரிசனமாவது கொடுக்கறியேப்பா அக்காமடேஷனும் வாங்கிக்கொடு பெருமாளேன்னு சாய்ங்காலம் 3.30 லேர்ந்து தவம் கிடந்து ரெண்டு பேர் போன்லயும் மாத்தி மாத்தி ட்ரை பண்ணி 2ந்தேதி 12 டு 6 னு எதோ அலாட் ஆகி 100+100 பணம் கட்ட சொல்றது. 

ஆனா பணம் கட்டற சமயத்துல எதோ தப்புன்னு அஞ்சாறு தடவை ஆட்டம் காட்டி வெறுப்பேத்தறது….   சரி நமக்கு கொடுப்பினை அவ்ளோதான். வழக்கப்படி கீழ திருப்பதில ரூம்தான்னு மனசை தேத்திண்டு கடைசியா ஒரு தரம் ட்ரை பண்றேன். 

கருணை காட்டுன்னு  வேண்டிண்டு தொட்ட உடனே பணம் கட்ட சொல்றது. ….நாளை

 குறிப்புகள்

திருப்பதி என்றாலே அதோடு சேர்ந்து வரக்கூடியது ஏழுமலை, ஏழுமலையான், வெங்கடாசலபதி, பாலாஜி

7 மலைகளையும் , அவற்றில் வீற்றிருக்கக்கூடிய 5 ஸ்ரீனிவாசன்களின் பெருமைகளையும் அறிந்து கொண்டால் வியந்து போவீர்கள்.

ஏழுமலைகள் என்னென்ன?

1. வேங்கட மலை (வேங்கடாத்ரி)

வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாக்குதல், நீக்குதல் என்று பெயர். பாவங்களை நீக்கக்கூடிய, போக்கக்கூடிய மலை. இந்த மலையில் வெங்கடாஜலபதியாக மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

ஏழு மலைகளை தாண்டி இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பதால் அந்த பெருமாளை ‘ஏழுமலையான்’ என்று அழைக்கின்றோம். பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த ஏழு மலைகளுடன் சேர்த்து மற்ற ஏழு சிறப்புகளை பற்றியும், ஏழு மலைகளுக்கு உண்டான மந்திரத்தை பற்றியும் அடுத்தடுத்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வேங்கடாத்ரி:

வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி – னூங்கு
திருவும் எழிலுடனும் தெய்வீகமும் சேரும்
ஒருபதியும் உண்டோ உரை.


No comments:

Post a Comment