Monday, February 21, 2022

எண்ணப்பறவை_12

எண்ணப்பறவை_12

'என்ன மேடம் இவ்வளவு சீக்கிரம்?  இன்னிக்குதான் லீவாச்சே.  மொள்ள வந்திருக்கலாமே.'

உள்ளே நுழையும்போதே ஆர்டர்லி அறிவழகனின் கரிசனம்.

'ஐஜி எத்தனை மணிக்கு வரார்னு ஏதாவது சொன்னாரா?'

'ஐயா எட்டு மணிக்கே வரதா சொன்னாங்க.  அதனால நான் ஏழு மணிக்கெல்லாம் வந்து அவர் ரூமை தொடச்சு ரெடி பண்ணிட்டேன்.  இப்ப வந்துடுவாருன்னு நெனைக்கிறேன்.'

'பரந்தாமன் சார் வந்தவுடனே என்ன பார்க்க சொல்லு, என்ன?'

'சரிங்க மேடம்.  நீங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் ப்ரியா மேடம் ஃபோன் பண்ணினாங்க.  பதினோரு மணிக்கு வராங்களாம்.  ஸி.ஏ.ஓ.  வரச் சொல்லியிருக்காங்களாம்.'

'ஓ.  ஐ ஸி'

பஸ்ஸில் அங்குமிங்கும் கலைந்து போயிருந்த கூந்தலை சரி செய்து கொள்ள வாஷ் ரூம் சென்று விட்டு ஸீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது நாற்பது.

ஹால்டா டைப்ரைட்டரின் மேல் படிந்திருந்த தூசுகளை துடைத்தாள்.  ரிப்பன் ஃபேdட் ஆகியிருந்ததால் புது ரிப்பனை போட்டாள்.

நேற்று வரை தயாரித்து வைத்திருந்த விவரங்களை ஒரு க்ளான்ஸ்.

கற்பழிப்புலேந்து ஆரம்பிக்கலாமா?  ப்ர்க்ளரிலேந்து ஆரம்பிக்கலாமா?  அல்லது வழிப்பறிலேந்து ஆரம்பிப்போமா?

எந்த டிஸ்ட்ரிக்டை முதல்ல எடுக்கலாம்?  கன்யாகுமரிலேந்து?  ச்சே ச்சே நம்ம ஊர் திருச்சி ஸைடுலேந்து ஆரம்பிப்போம்.

யாரும் அருகில் இல்லையென்றால் அவள் ச்சேரில் சம்மணம் போட்டுக் கொண்டு டைப் அடிப்பாள்.  அப்படி அடிக்கிறாள் என்றால் டைப்ரைட்டரின் வேகமும் கூடும்.

'மேடம் டீ சொல்லிட்டு வரட்டுமா?  அய்யா வந்துட்டாங்க.  நீங்க வந்துட்டீங்களான்னு கேட்டாரு அய்யா?  வந்துருக்கீங்கன்னு சொன்னேன்.'

'டீ நானே சித்த பொறுத்து கேண்டீனுக்கு போய் குடிச்சிக்கறேன்.  பரந்தாமன் சார் வந்துட்டாரா?'

'வந்தவுடனே சொல்றேன் மேடம்.'

வேலையில் மும்மரம்.  பாதி முடிந்து விட்டது பரந்தாமன் வருவதற்குள்.

'சாரி மேடம்.  கொஞ்சம் லேட் ஆயிடுத்து.  பையனுக்கு நேத்திலேந்து ஜுரம்.  டாக்டர்கிட்ட அழச்சிட்டு போனதுல கொஞ்சம் நேரமாயிடிச்சு.'

'சரி இந்த மூணு டிஸ்ட்ரிக்ட் டீடெய்ல்ஸ் இங்க வெச்சிருக்கேன்.  இதை முடிச்சிடுங்க.  நான் கொஞ்சம் கேன்டீன் வரைக்கும் போயிட்டு வரேன்.  வரும்போது உங்களுக்கு ஏதாவது வாங்கிண்டு வரட்டுமா?'

'வேண்டாம் மேடம்.  நீங்க போயிட்டு வாங்க.'

கேண்டீனுக்கு சென்ற போது அங்கே ப்ரியா டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

'ஹாய் ப்ரியா.  குட் மார்னிங்.  வத்தலு வர சொல்லிடுச்சாக்கும்.'

அவள் வத்தல் என்றது ஸி்.ஏ.ஓ. வை.  மெலிந்த தேகம்.  அதனால் பட்டப் பெயர்.

'ஆமாம் அமுதா.  க்ரைம் மீட்டிங் மன்டே இருக்கில்லையா.  ஐஜி வேகன்ஸி லிஸ்ட் கேட்டிருக்காராம்.  எத்தனை இன்ஸ்பெக்டர்களை பந்தாடப் போறாங்களோ?  உங்க கட்டபொம்மன் என்னிக்கு வரார்?'

'அவரும் மன்டே வந்துடுவாரு.  அவர் ஸ்ட்ரெயிட்டா மீட்டிங் ஹாலுக்கு போயிடுவார்னு நெனைக்கிறேன்.'

'சரி.  நான் வரட்டா.  லேட்டானா வத்தல் என்ன வதக்கிடும்.'

சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.

'ஏய் ப்ரியா.  நாம ரெண்டு பேரும் ட்யூட்டி முடிச்சிட்டு ஒண்ணா போலாமா.  இன்னிக்கு ஒரு நாளைக்கு மாம்பலத்தில ட்ரெயின புடியேன்.'

'எனிதிங்க் இம்பார்ட்டண்ட்'

'இல்லடா.  அன்னிக்கு பாதியில அரவி கதைய விட்டயே.  மண்ட காயுது.  அதான்.'

'அதான பார்த்தேன் சோழியன் சிண்டு சும்மா ஆடாதேன்னு.  லஞ்ச் கட்டிண்டு வரல.  வெளியில சாப்பிடுவோமா ரெண்டு பேரும்?'

'ஓ.  ஷ்யூர்.  நான் கட்டிண்டு வந்ததை அறிவு கிட்ட கொடுத்துடறேன். நோ ப்ராப்ளம். ஆனா மறந்து போய் கம்பி நீட்டிடாதடி.'

தொடரும்...

No comments:

Post a Comment