Sunday, February 20, 2022

தேங்காய் தோசை

 பகிர்வு

சூப்பரான தேங்காய் தோசை ஒருவாட்டி இப்படி சுட்டு பாருங்களேன்.

 👉சோடா உப்பு, ஈனோ சால்ட் இல்லாமலேயே இந்த தோசை புசுபுசுவென சாப்டாக இருக்கும்.

 கொஞ்சம் வித்தியாசமாக ஆப்பம் போல ஒரு தோசை ரெசிபி

👉. சோடா உப்பு போட தேவையில்லை. ஈனோ சால்ட் சேர்க்க தேவையில்லை.

👉 ஆனால் இந்த தோசை சாப்டாக பஞ்சு போல நமக்கு கிடைக்கும். நீங்கள் சைவ பிரியர்கள் ஆக இருந்தால் சைவ குருமா, தேங்காய் சட்னியைத் தொட்டு இந்த தோசையை சாப்பிடலாம். அசைவப் பிரியராக இருந்தால், கறி குழம்பு ஆட்டுக்கால் பாயா போன்ற கிரேவியை இதற்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொண்டால் அட்டகாசமான ருசியில் இருக்கும். சூப்பரான இந்த தேங்காய் தோசை 

👉 பச்சரிசி – 2 கப், வெந்தயம் – 1/2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக கழுவி வைத்து, நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். மாவு பச்சரிசி என்று கடையில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதுதான் இந்த தோசை செய்ய சரியான அரிசியாக இருக்கும் தண்ணீரில் ஊறிய இந்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நைசாக அரைத்து எடுத்து தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

👉 அடுத்தபடியாக அதே மிக்ஸியில் தேங்காய் – 1 கப், லேசாக இருக்கும் வெள்ளை – அவல் 1 கப், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தேங்காயையும் அவலையும் விழுது போல அரைத்து எடுத்து, இந்த விழுதையும், அரைத்த அரிசி மாவுன் ஊற்றி நன்றாக உங்கள் கையை கொண்டு கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும். (பச்சரிசி – 2 கப், வெள்ளை அவல் – 1 கப், தேங்காய் துருவல் – 1 கப், எல்லா பொருட்களையும் ஒரே கப்பில் அறிந்து கொள்ள வேண்டும்.) புளித்த பின்பு மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து மாவை தோசை ஊற்றுவதற்கு தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு குழி கரண்டி மாவை எடுத்து ஊற்றி லேசாக கல் தோசை போல வார்த்து கொள்ளவும். ஆப்பத்தை மேலே மூடி போட்டு வேக வைப்பது போலவே இந்த தோசையை வேகவைத்து திருப்பிப் போடாமல் அப்படியே எடுத்து பரிமாறலாம். -  இந்த தோசை அப்படியே வெந்து வரும் போதுஅடியில் சிவந்தும் மேலே வெள்ளையாகவும் சாஃப்டாக பஞ்சு போல நமக்கு கிடைக்கும். சாதாரண தோசை போல இல்லாமல் இதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதை ஆப்பம் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் ஆப்பத்தில் கொஞ்சம் உளுந்து சேர்த்து அரைப்போம் அல்லவா. இதில் பருப்பு கூட நாம் எதுவுமே சேர்க்கவில்லை. ஆகவே இதன் சுவையில் நிச்சயமாக வித்தியாசம் தெரியும். உங்களுக்கு சிம்பிளான ஹெல்தியான இந்த ரெசிபி பிடிக்கும்.



No comments:

Post a Comment