அழகிய கோவையின் அனுவாவி கோயில் கோவை
அனுவாவி சுப்பிரமணியர் கோவில்
கோவையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது.
கோவிலின் அடிவாரம் வந்தபின் வண்டி டோக்கன் போட்டுவிட்டு படிகள் ஏற ஆரம்பித்தேன்.கோவில் படிகளில் ஏறும்போது ஆரம்பத்தில் சாதரணமாக இருக்கிற படிகள் கோவிலுக்கு அருகில் செல்லும்போது செங்குத்தாக இருக்கிறது. ரொம்ப மூச்சு வாங்கி போனேன்.
ஒரு பக்தர் தன் செல்போனில் “முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே” என்ற பாடலை கேட்டுக்கொண்டே ஏறிக்கொண்டு இருந்தார். கீழே இருந்து கோவில் வரை 450 படிகள் இருக்காம்...இன்னொரு பக்தர் சொல்லிக்கொண்டே இறங்கினார். கோவில் ரொம்ப டெவலப் ஆகி இருக்கிறது. படிகள், சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள், யானை வரவை தடுக்க மின்சார வேலி என ரொம்ப முன்னேற்றம்.
அப்புறம் இங்கு அனுமன்தீர்த்தம் என்ற சுனை ஒன்று இருக்கிறது.இதில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால் முருகன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார்.இந்த ஊரின் பெயர் காரணம் என்னவெனில் "ஹனு' என்றால் ஆஞ்சநேயர். "வாவி' என்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் ஹனுவாவி என்று பெயர் பெற்று தற்போது அனுவாவி ஆகிவிட்டது
No comments:
Post a Comment