சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்கள்
l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்
தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏
....சிவ சிவ நமசிவாய சிவயநம திருச்சிற்றம்பலம்
தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்
சிவஸ்தலம் பெயர்
திருஆக்கூர் (தான்தோன்றி மாடம்)
இறைவன் பெயர்
தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்
இறைவி பெயர்
வாள்நெடுங்கண்ணி
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
அக்கிருந்த ஆரமும் (2-42)
அப்பர்
முடித்தா மரையணிந்த (6-21)
எப்படிப் போவது
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 3 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி
தான்தோன்றியப்பர் திருக்கோவில்
ஆக்கூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609301
தொடர்பு : 04364-280005 09442419509
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில்.
கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏற முடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. ஆக்கூர் தான்தோன்றியப்பர் கோவிலும் ஒரு மாடக் கோவில்.
மாடம் என்னும் பெயர் கொண்ட திருக்கோயில்கள் இரண்டு தேவாரத்தில் காணப்படுகின்றன. ஒன்று நடுநாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்; மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவிலகள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும்.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திறகு கிழக்கில் 3 நிலை இராஜ கோபுரமும் தெற்கில் ஒரு நுழைவாயிலும் உள்ளன. கோபுர வாயிலில் விநாயகர் காட்சி தருகிறார். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து நேரே சென்றால் நாம் இருப்பது கிழக்கு வெளிப் பிரகாரத்தில். நேரே கிழக்கு நோக்கி உயரமான மாடத்தில் இறைவன் கருவறை உள்ளது. படிகள் ஏறிச் சென்றால் பலிபீடத்தையும், நந்தியையும் நாம் தரிசிக்கலாம். இங்கு குடிகொண்டுள்ள தான்தோன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார். அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்திருக்கிறது. உள் சுற்றில் விநாயகர், முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும், சுந்தரர் அவரது இரு மனைவியர் சங்கிலி நாச்சியார் மற்றும் பரவை நாச்சியார் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும் காணப்படுகின்றன. அடுத்து காலபைரவர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருஉருவச் சிலைகள் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். கருவறை அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதியும் அவருக்கு நேர் எதிரே வலதுபுறம் ஆயிரத்தில் ஒருவர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்திறகுரிய சிறப்பு மூர்த்தி இந்த ஆயிரத்தில் ஒருவர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் மயில் மீது கிழக்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். அருகே தேவியர் இருவரும் எழுந்தருளியுள்ளனர்.
ஆயிரத்தில் ஒருவர்: மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி தினமும் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய முற்பட்டான். 48 நாட்கள் இந்த அன்னதானம் செய்ய வேண்டியிருந்தது. தினந்தோறும் 1000 இலை போட்டு உணவு பரிமாறினாலும் 999 பேர் மட்டுமே உணவருந்தினர். 47 நாட்கள் இவ்வாறு தினமும் ஒருவர் குறைவதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். 48-வது நாள் அந்தணர் உருவில் ஆயிரத்தில் ஒருவராக தானும் வந்து உணவருந்தி அமன்னனுக்கு அருள் புரிந்தார். பந்தியில் தானும் ஒருவராக அமர்ந்து இறைவன் உணவருந்திய பெருமையை உடையது இத்தலம்.
இத்தலத்து வேளாளர்களைத் திருஞான சம்பந்தப்பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
சிறப்புகள்
கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி.
சோழர் கால, பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன
நம் வாயால் பாடுவோம்*
தலம்: திருஆக்கூர் தாந்தோன்றிமாடம்
இரண்டாம் திருமுறை
பாடல் எண் : 042
பண்: சீகாமரம்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்
தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :
கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்டவனும், கார்காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.
குறிப்புரை :
நீர் - கங்கை. ஆர - பொருந்த, நிறைய. வார் - நீண்ட. கார் ஆர் பூங்கொன்றை - `கண்ணி கார்நறுங் கொன்றை`. ஆரல் - ஆரல் மீன்களை. தாரா - நாரையினம். வாய் நிறைய ஆரலைக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாராமல்கும் ஆக்கூர் என்று இயைக்க. கோடகம் - நீர்நிலை, நீர்க்கரை, தான்தோன்றி - சுயம்பு. ஊர்க்கும் திருக்கோயிற்கும் வெவ்வேறு பெயர் வழங்கிய பழைய மரபை ஈண்டும் காணலாம்.
#வேளாளர்களும்_அந்தணர்களும்:
இரண்டாம் திருமுறை ஆக்கூர் திருப்பதிகத்தில் அங்கு வாழ்ந்த வேளாளர்களும் அந்தணர்களும் வள்ளல்களாக விளங்கினர் என திருஞானசம்பந்தர் உரைக்கிறார்.
ஒவ்வொரு பாடலிலும் தொல்கோயில் என்று குறிப்பதால் அக்கோயில் மிகப்பழமையானது என்பது புலனாகிறது.
இப்பதிகத்தின் மூன்றாவது பாடலில்..
"வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே"
என்றும் ஒன்பதாவது பாடலில்..
#இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லைஎன்னாது ஈந்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே"
என்று குறிக்கிறார்.
ஈந்துவக்கும் 'தன்மையார்' என்று சுட்டுவது அந்தணரைதான் எனச் சேக்கிழார் விளக்கந்தருகிறார்.
ஏனெனில் இங்கு அந்தணர் மரபில் வந்த சிறப்புலி நாயனார் பெறுவள்ளலாக வாழ்ந்து விளங்கினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.
சுந்தரரும் திருத்தொண்டத்தொகையில்
"சீர் கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்"
என்று பாடுகிறார்.எனவே சம்பந்தர் அந்தணரையே இங்கு இல்லை என்னாது ஈந்துவக்கும் 'தன்மையார்'
என்னும் சொல்லால் கூறுகிறார்.
பெரியபுராணத்தில் சிறப்புலி நாயனார் வரலாற்று தொடக்கத்தில் சேக்கிழார் பெருமானும் இதனை தெளிவுபடுத்துகிறார்.
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்
#தன்மையார் என்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைதிரு
ஆக்கூர் ஆக்கூர்."
#திருச்சிற்றம்பலம்
.
No comments:
Post a Comment