தஞ்சம்(கதை-ஆக்கியோன் தேவனாத ரங்கராமாநுஜ தேசிக தாஸன்)
எக்மோர் ஸ்டேஷன் காலை 6.30 மணிக்கே விறுவிறுப்பாயிருந்த்து.ஆனால் நாலாவது ப்ளேட்ஃபார்ம் வெறிச்சோடியிருந்த்து.சென்னை குருவாயுர் எஃஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருகிறது.இன்னும் லைட் போடவில்லை.டயம் இருக்கு.ஏழு நாற்பதுக்குத்தான் கிளம்பும்.கிட்டு அய்யர் விடு விடுன்னு தன் பழைய போதீஸ் பையில் அடக்கிய ரெண்டு மூணு வேஷ்டி சட்டை சகிதம் அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மன்டிலேறி உட்கார்ந்து ப்ளாட்ஃபார்ம் படி ஏறிய களைப்பை ஆஸ்வாஸபடுத்திக்கொண்டார்.வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் கார்த்தால நாலுமணிக்கே கிளம்பி பொடிநடையாய் அஷோக்பில்லரை அடைந்து ஆட்டோ பிடுத்து இங்குவந்த்துவிட்டார்.விட்டார்.கையில் வைத்திருந்த பழய ஸெல்ஃபோநை தூக்கி கிடாஸலாம் என் நினைத்து பையிலுருந்து எடுத்தார்.மனஸாகவில்லை.ஸிம்மை மட்டும் கழட்டி அதை உடைத்து ஜன்னல் வழியே பளாட்ஃபார்ம இல்லாத தரைப்பகுதியில் தூக்கிஎறிந்தார்.உள் மனதில் செல்ஃபோனில் ஏதோ ஐடி இருக்குமாமே அதைவைத்து தன்னைக்கண்டுபிடித்துவிடுவார்களோ என நினைத்தவர்”சீ சீ நம்மை யார் தேடுவர்” என நினைத்து செல்லைப்பையில் திணித்தார்.
ரயில் கிளமப வெகுநரம் இருந்த்து.அவர் மனம் தன் சொந்த ஊரான திருணங்கோவிலை அஸைபோட்ட்து.
அவர் அம்மா ஒரு பர்ஜாரகி(சமையல் செய்யும் பெண்)அப்பா இல்லாத அவரை அவள்தான் வளர்த்து ஆளாக்கினாள்.அந்த ஊரிலேயே பணக்கார்ரான வேம்பு அய்யர் வீட்டில் சமயல்.வேம்பு அய்யர் பையன் சாமினாதன் என்ற சாமா கிட்டு அய்யரின் க்ளாஸ்மேட்.அவன் பணக்காரனாயிருந்தாலும் தன் ஆத்து சமயக்கார மாமியின் புள்ளையானாலும் கிட்டுவிடம் பாசமாக பழகுவான்.கிட்டுவுக்கு புஸ்தகம் ட்ரெஸ் எல்லாம் வேம்பையர் வாங்கித்தருவார்.சாமா ஸ்கூலில் ரீஸ்ஸ் பீரியடில் கிட்டுவுக்கு மிட்டாய்,ஐஸ் என தான் சாப்பிடும் ஐயிட்ட்ங்களை அவனுக்கும் வாங்கித்தருவான்.திருனல்வேலியில் ஸ்கூல் 10 கிலோமீட்டர் வில்வண்டியில் இருவரும் போவார்கள்.
சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்தபின் மேட்டில் உள்ள மேல திருவெங்கடநாதபுரம் ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு இருவரும் செல்வார்கள்.
மனஸுக்குள் பால்ய நினைவுகள் வர அக்கோவிலைபற்றி அஸைபோட்டுக்கொண்டே 55 வருஷங்களுக்குப்பின் அங்கு போவதைப்பற்றி யோசித்தார்.ஊர் அப்படியே இருக்குமா.சாமா குடும்பம் அங்கு இருக்குமா ஒண்ணும் தெரியாது.குருட்டாம்போக்கில் போக்கிடமில்லாத அவர் கிளம்பியாச்சு.ரயில் மெதுவாக ங்கரத்தொடங்கி இருந்த்து-
உக்ரமான கோடைகால அக்காலை வேளையில் ரயிலின் மெதுவான அஸைவுகளுடன் முகத்தில் வீஸிய காற்று அவருக்கு ஆன்ந்த்த்தைக்கொடுத்த்து.ஜன்னலின் வெளியே சென்னை பின் செல்வதைப்பார்த்துத் தன் திருநெல்வேலிக்கனவுகளுடன் பயணித்தார்.சாமா இருப்பானா?கோவில் எப்படி இருக்கும்.?அப்படி சாமா இல்லாவிடில் அங்கிருந்த பட்டாச்சாரியின் வீட்டிலாவது தங்க இடம் கிடைக்குமா?கவலைகலந்த உணர்வுடன் அந்த தன் ஊரின் நினைவுகள் அவருக்கு இனிமை தந்த்த்து.
போதீஸ் பையில் துழாவி அவர் படிக்கும் மாத ஸஞ்சிகை”ஆத்ம ஞானம்”ப்ரதியைப்புரட்டினார்.”புனரபி ஜன்னம்” என்றதலைப்பில் ஒரு கட்டுரை.
“ஓஷதி வனஸ்பதிகளுக்குத் தாங்கள் வளர்வதே ஸூர்யனின் நிழலில்(?)தான் எனறு தெரியாது.அவை அசித்துக்கள்.ஆனால் சித்துள்ள நாய ஸூர்யனின் க்திர்களின் வெப்பத்தால் குறைக்கும்
ஸூர்யனோ சிங்கம்போல் ப்ரகாஸித்து உக்ரமாகும்.சாயும்வேளை ஸூர்யனும் தன் களைப்பினால் தன் மனைவி சந்த்யாவின் மடியில் உறங்குவதுபோலிருக்கும்.ஸூர்யனாவது களைப்பதாவது சலிப்பதாவது
அது களைத்தால் உலகமே அஸ்தமித்துவிடும் முழுதுமாக ஸூர்யக்குடும்பத்தின் பூமிக்கே சக்திதருவது ஸூர்யஅப்பாதான். தன் கிரணங்க்ளால் ஒளிச்சேர்க்கையே பூமியில் ஓள்ஷதிகளினால் உண்டாகும் உணவுக்கு ஆதாரம் என ஸயன்ஸ் சொல்கிறது.இதை நம் வேதம் என்றோ சொல்லியுள்ளது
தான் உண்ணும் ஒவ்வொரு துண்டுணவும் ஸூர்யனின் சக்தியால் உருவானது என்றும் நாய்க்களுக்குத்தெரியாது.ஆக சித்துக்களான நாம் பகவான் தான் நமக்குப்படி அளக்கிறான் என ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவனை நன்றியுடன் நினைப்பது கடமை அன்றோ?”
விழுப்புரம் ஜங்கஷன் மணி 10.30.பசியை இப்போதுதான் உணர்ந்தார்.ஒரு பட்டை தயிர்சாதம்(இப்போ பட்டை யில்லை அலுமினியம் ஃபாயில்) வாங்கி ஸ்பூனால் எடுத்து தூக்கிசாப்பிட்டர்ர்.இடைடையே வாங்கிய மினரல் வாட்டரிலிருந்து ஜலத்தைக்காலி பண்ணினார்.
கிட்டு தன் 10 வயது வரை திருநெல்வேலியில் படித்து பின் திருச்செந்தூர் ஷங்கர மட்த்தில் வேதம் பயில சென்றுவிட்டார்.அம்மாவும் அவர் கூடவே இருந்தாள்.மட்த்து ஆதரவால் அங்கேயே தளிகைகார்யத்திலிருந்து சிலகாலம் சென்றபின் சிவலோகபதவி அடைந்தாள்.இவர் அத்ய்யனம் முடித்து சென்னை மையிலாப்பூரில் ப்ரபலமான சாஸ்திரிகளாக நன்றாக ஸம்பாதித்தார்.தன்மனைவி கமலாவுடன் சந்தொஷமான குடித்தனம்.ஒரே புள்ளை ரகு இன்று இஞ்சினீயர்.சிருசேரியில் உத்யோகம்.
காலம் செல்ல செல்ல கிட்டு மாமாவுக்கு வயசாகி பற்கள் விழ உபாத்யாயத்தொழிலுக்கே முக்யமான சொல் போனது.அவருக்கு வருமானம் இல்லை. கமலாவும் ரகுவும் கூட்டு சேர்ந்து அவரை இகழ ரகுவுக்குக்காதல் கல்யாணமாகி அதை கிட்ட்டுமாமா எதிர்க்க கமலா.ரகு அவன் ஆம்டயாள் யாரும் கிட்டுமாமாவிடம் பேசுவதேஇல்லை.வாசலில் ஒரு ஈஸிசேர்தான் அவரின் உலகம்.சாப்பிட க்கூட கூப்பிடமாட்டார்கள்.இவரே உள்ளே போய் தட்டை அலம்பி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்.தானெப்படி இக்குடும்பத்துக்காக உழைத்தோம்.ரகு படிப்புக்கு பணம் கட்ட ஓடி ஓடி ஸம்பாதித்தோம்.’நினைவுகளுடன் ப்ரக்ஞைக்கு வந்தவர் வெளியே பார்த்தார்.மணி 12.50 ஸ்ரீயரங்கம் வந்திருந்த்து வண்டி.ரங்கனாதரை நோக்கிக்கையை உயர்த்தி கண்ணைமூடி ப்ரார்த்தித்தார்.
ஸ்ரீரங்கத்தில் ம்றுபடியும் பஸித்த்து.ஆக் தனக்கு ஒத்துக்கொள்ளும் தயிர் சாதமே மறுபடியும் வாங்கினார் கிட்டு மாமா.
தன் போத்தீஸ்பையைத்துழாவி அது இருக்கிறதா என்று சோதித்துக்கொண்டார்.திருச்சி ஜங்க்ஷன் வெளியே பையைத்தூக்கிகொண்டே இறங்கிக்காலாற நடந்தார்.வண்டி கிளம்பியவுடன் பையை பத்திரமாக தலைக்கு முட்டுக்கொடுத்து தூங்க ஆரம்பித்தார்.அப்ப ப்ப்போ முழித்துப்பையை தடவி அது இருக்கா என சோதித்துக்கொண்டார்.தூக்கம் வரவில்லை தன் ஊரான திருநாங்கோவிலைப்பற்றி சிந்திக்கலானார்.மேட்டுமேல் இருப்பதுமேலத் திருவேங்கடநாதபுரம். அழகான அளவான கோவில். ஒரு சின்னக் குன்றின்மேல் இருக்கு.
திருவேங்கடநாதர் அச்சு அசலா நம்ம திருப்பதிபெருமாள் மாதிரிதான் அழகான அலங்காரத்தோட ஜொலிப்பார்
அந்த ஊர் ஒருகாலத்தில் வைப்ராஜ்யம் என அடர்ந்த வனமாக தாம்பிரபரணியாற்றங்கரையில் பைலர் எனும் வ்யாசமுனிவரின் சீடர் தவம் இருந்த ஸ்தலம்.அங்கு கோவில் இருக்கவில்லை அவர் மானஸீக அர்ச்சனை செய்த மலர்கள் ஜோதியாக நானில் உயர ஸ்ரீய்னிவாஸப்பெருமாள் காக்ஷியளித்தார்.அவர் காலடியில் தம்ப்ரபரணிமாத வீற்றிருந்தாள்.பின் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதர்ராய் அங்கேஇருக்க எண்ணி கருடனிடம் தான் வரும்வரையில் உலகைக்காக்கவேண்டும் என சங்கு சக்ரத்தை கருடனிடம் தந்த்து அந்த செங்கணியில் குடிகொண்டார்.ஆக இத் தலத்தில் வீற்றிருக்கும் கருடன் கையில் சங்கு சக்ரம் இருப்பது சிறப்பு.திருப்பதியின் ஆகாசகங்கைபோல் இங்குதாம்ப்ரமரணி ப்ரவாஹிக்கிறாள் திருப்பதி ஸ்வாமி புஷ்கரணிபோல் இங்கு ஸ்ர்ரினிவாசகட்டம்உள்ளது.அந்த்தக்காலத்தில் இங்கு ஆண்ட வெங்கப்ப நயக்கனுக்கு குழந்தைவரம் அருளியதாக சொல்வர்.அவர் பல திருப்பணிசெய்து இவ்வூருக்குத்திருவேங்கடநாதபுரம் என பெயரிட்டாராம்.
ஸ்வாமியை மனதார வேண்டிய கிட்டு மாமா”நான் உன்னிடம் தஞ்சம் அடைய வருகிறேன்.என்னை ஏற்றுக்கொண்டு உன் மடியிலேயே என் ப்ராணன்போகணும்”என த்யானித்தார்.
ரயில் மதுரைக்கு ஒருவழியா 4.30க்கு வந்த்த்து.அவருக்கு உள்ளூர ஒரு உதறல்.இப்பவே 4.30 ஆயிடுத்தே திருநெல்வேலி போய்ச்சேர நைட் ஆயிடுமோ.அப்படியானால் எங்கு தங்குவது ஒண்ணும் புரியல.அவர் நினச்சதுபோல் 8மணிக்குத்தான் திருநெல்வேலி வந்த்த்து.கிடு கிடுன்னு இறங்கினார்.ஸ்டேஷன்மாஸ்டரிடம் திருநாங்கோவில் செல்ல வில்வண்டி கிடைக்குமா என கேட்க அவர் இவரை ஏற இறங்கபார்த்து "எந்தநாட்டிலிருந்து வருகிறீர்-மினி பஸ் 6ஏ 6பி போகும் “ என்றார்.மணி 8.30 இதுக்குமேல் அங்குபோய் சாமா இல்லன்னா என்ன பண்றது.ஒரே குழப்பம்.பஸி வேற ஆனா சாப்பிட்டா இன்னும் நேரம் ஆயிடும்.வெளியில் வந்து 6ஏ வைப்பிடிக்கலாமா?இல்லை ஸ்டேஷன் மாஸ்டரிடம் மறுபடியும் போய் ரெஸ்ட் ரூம் கிடைக்குமா என க்கேட்க்க அவர் இவர்மேல் கருணைகொண்டு “எனக்கு னைட் ட்யுட்டி தான் என்னோடு ரூமில் தூங்கிட்டு காலைல போங்க சாமி”என்றார்.ரயில்வே வி ஆர் ஆரில் மஸால்தொசை காப்பி சாப்பிட்டுவிட்டு ஸ்டேஷன் மாஸ்டருடன் தங்கி உறங்கிப்போனார்.காலையில் ஸ்டேஷ்ன்மாஸ்டர் உபயத்தில் குளித்து சுத்தம்பண்ணிக்கொண்டு 7 மணிக்கெல்லாம் ஸ்டேஷன்மாஸ்டரிடம் நன்றிகூறி விடைபெற்று 6ஏ பஸ்சை பிடித்தார்.பையை அவ்வப்போது துழாவிப்பார்த்துக்கொண்டார்-அதுஇருந்த்து
அந்தக்காலத்தில் ஒத்தையடிப்பாதையா இருந்த்து இன்று பஸ்போறது ஆனா ரெண்டுபக்கமும் வயல்தான் காக்காத்தோப்பு பள்ளிவாசலைக் கடந்து திருவேங்கடநாதபுரம், வழியெல்லாம் ஒரே செம்மண் பூமி. காணியெல்லாம் சிகப்பு என்றதால் இந்த ஊரைச் செங்காணின்னும் சொல்வா..
பஸ் 10 நிமிஷத்தில் அவரை திருநாங்கோவிலில் இறக்கிவிட்ட்து.
.பழையநினைவுகளுடன் காலடிமண்ணைஎடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
முதலில் கோவிலுக்குப்போவோம் பின் சாமவைத்தேடலாம்.நினைத்துக்கொண்டே குன்றின்மேல் ஏறினார்.
கோவிலில் பட்டரைத் தவிர ஈயும் காக்காயுமா ரெண்டே பேர். இருந்தா. தரிசனம்.திவ்யமான தரிஸனம்.கையொடு வாங்கிவைத்திருந்த உலர்ந்த த்ராக்ஷையை கண்டருளப்பண்ணி பின் மண்டபத்தில் கொஞ்ச நேரம் பட்டரோடு பேச்சுக்கொடுத்து சாமா பற்றி விஜாரித்தார்.
பட்டர் “ரிடயர்டு ஹெட்மாஸ்டரச்சொல்றேளா?அவர் கீழ அக்ரஹாரத்தீருவில்தான் இருக்கார்.”
அப்பா கிட்டுவுக்கு உயிர் வந்த்த்து அப்படின்னா அதே தெரு தான் உடனே போகவேண்டியத்துதான்.கீழே பழக்கடையில் ஆப்பிள் ஒருகிலோ வாங்கிகொண்டு அவர் அந்த வீட்டின் உள்ளே ப்ரவேஸித்தார்.
நீங்க .......?
சாமா நான்தான் கிட்டு ...க்ரிஷ்ஸாமிடா
ஓ நீங்க நீயா எப்படி டா இருக்கே எங்க இருக்க என்னைத்தேடி வந்தியா சும்மா இந்தபக்கம் வரும்போது தலய காமிக்க வந்தியா எவ்வுளவு வருஷம் ஆச்சு எந்த ஊர்ல இருக்கே”பட பட வென சாமா முழங்கினார்.
நான் மெட்ராஸில் இருக்கேன்பா. உன்னைப்பாக்கவும் பெருமாளை சேவிக்கவும்தான் இங்க வந்தேன்.நேத்திக்கு நைட்டே வந்துட்டேன்.”
அப்பறம் ஏன் இங்க வரல எங்க தங்கின ஹோட்டல்லயா நான் இருக்க்ச்சே என்னப்பா?
இல்லப்பா நேத்திக்கு நைட் 8மணிக்கு திருநெலவேலி வந்தேன் இருட்டிடுத்து சரி நம்ம ஊருக்கு வந்து நீ இல்லன்னா என்னபண்றதுன்னு திருநெல்வேலியிலேயே தங்கிட்டேன்
ஏம்பா நீ எந்த ட்ரைனில் வந்த நைட் கிளம்பி காத்தால வர ரயில் பிடிக்கவேண்டியத்தான.?
கிட்டு மனதுக்குள்”எங்க சாயந்தரம் ரயிலபிடிக்க பையோட கிளம்பினா வீட்டுல கண்டுபிடுச்சு கேக்குங்களே எங்க போற?ந்நு விடாதுகளே.அதான் கருக்கல்ல கிளம்பினேன்” சொல்லவா முடியும் அவரிடம் ம் ம்ம் அது எனக்குத்தெரியாதுப்பா இது நைட்தான் வரும்னு.சரி நீ எப்படி இருக்க சாமா.?
“எங்க.இருக்கேன்.ஆம்டயா போயிட்டா.ஒரே பையன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிண்டு அமெரிக்காவுல இருக்கான் போக்குவரத்து இல்ல.நான் ஹெட்மாஸ்டரா ரெடயர் ஆயி இப்ப பேசலர் வாழ்க்கை செல்ஃப் குக்கிங்க்.சரி வா தோசை பண்ணப்போறேன் கைகால் அலம்பிண்டு வா சாப்படலாம்.
கிட்டு மனதிற்குள் “இவனும் நம்ம கேஸ்”நினைத்துக்கொண்டு “சாமா நானும் உனக்கு ஒத்தாஸை செய்யறேன்.கைகால் அல்ம்பிக்க பாத் ரூம் அதே இட்த்தில் தானேபேழ்கடைல
நீதான் பாற்கறயே வீடு அப்படியே தான் இருக்கு போ போய் அலம்பிண்டு வா.
கிட்டுவிற்கு மறு பிறப்புவந்த்து போல் இருக்கு உற்சாகம் தன்னுடன் பேஸ ஒருவர் இருக்கிறான்.இருவரும் தோசைக்கு ரவையையும் அரிசிமாவையும் கரைத்து கருவேப்பிலை மிளகு,உப்பு சீராம் எல்லாம் கலந்து ரெடி செய்தனர். அடுப்பை மூட்டி கல்லகாய்வடஹ்ற்குள் கிட்டு”சாமா தஒசை சரி தொட்டுக்க என்ன பண்ணலாம்.?”
“நித்யம் எப்படி பண்றது அதான் ரெடிமேட் மாம்பலமய்யர் சாத்த்துக்கு கல்ல்டைக்குரிச்சி அப்ளம் திருநெல்வேலி மாம வடாம் வத்தல்ன்நு ஒவ்வொருநாளும் ஒவொவொணு.”
தோசையைப்பரிமாரிக்கொள்ளும் முன் கிட்டு தன் போத்தீஸ்பைஅயிலிருந்த ஒரு சிப் பேகை எடுத்து”சாமா நான் போற அன்னிக்கு குடு.இப்ப பெருமாள் சன்னதில வச்சுட்டு உள்ள பத்ரமா வை” என்றார்.
இவன் என்ன பீடிகை போடறான்.எப்ப போவன் என்று நாம் எப்படி கேட்பது எனயோசித்துக்கொண்டே மறுபடியும் கலகலத்து”டேய் அந்த நாள்ல நாம எப்படி எஞ்சாய் பண்ணினோம்.எல்லாம் போயிடுத்டுடா.சரி உனக்கு எவ்வுளவு கொழந்தேள் என்ன பண்றா?
தன் கதையை கிட்டு சொல்லவில்லை.சொன்னால் சாமா பதரி ஆத்து நம்பரைக்கேட்டு ஃபோன் போட்டு அமர்க்களமாயிடும். நாம் போய்ச்சேர்ர வரை ரகசியமாகவே இருக்கட்டும்.போன அன்னிக்கு பிரிச்சுபார்த்துதெரிஞ்சுப்பான்.”ஒரே பையன் சாஃப்ட்வேர் மயிலாப்பூரில் சொந்த வீடு.உபாத்யாயம் பண்ணி நிறைய ஸம்பாதிச்சேன்.”
தோஸைக்கு மாம்பலம் அய்யர் ஆவக்காய் நன்னா இருந்த்து.
.
சாட்டப்பறம் சாமா டீ வீ பாக்க நம்ம கிட்டு ஆத்ம ஞானம் புத்தகத்தை புரட்டி புனரபி ஜன்னம் விட்ட்தைப்படிக்கிறார்.
“டேய் சாமா-ராக த்வேஷ புண்ய பாப என எல்லாத்தயும் விட்டாத்தான் மோக்ஷமாம்.இதையெல்லாம் சொல்றவா த்வேஷம் பாராட்டாமயா இருக்கா வடகலைக்கு தென்கலைமேல் த்வேஷம்,அய்யங்காருக்கு அய்யர் மேல் ஏன் சில வைஷ்ணவாளுக்கு உ வே வேளுக்குடி ஸ்வாமிமேல் பொறாமை இப்படி இருக்க்ச்ச எப்படி மோக்ஷம்.?”வாழ்க்கையே வெறுப்போட்தான் கழியறது.சொந்த பந்தங்கள்ளாம் பொய்மை”பொய்யா மேலுக்கு சிரிக்கறா.உள்ளத்தில் வெறுப்பு”தன் புள்ள பெண்டாட்டியை நினைத்து சொல்கிறார்.
சாமா”என்னடா வ்ரக்தியா பேஸரே.வீட்ல ஏதாவது கோவமா”அவரின் உள் மனதை அறிந்துகொண்டவர்போல் கேட்க சட்டென்று டாபிக்கை மாற்றி “சரி நாளைக்கு எங்கே போகலாம்?என கிட்டு கேட்க சாமா”டேய் ரொம்ப நாளைக்கப்பறம் நான் சந்தோஷமா இருக்காஎன் ஒரு நாலு நாள் சேந்தாப்ல் சுத்துபாடு கோவில்களுக்கெல்லாம் போகலாம்.நான் டக்ஸி ஏற்பாடு செய்யறேன்.காலங்காத்தால 5 மணிக்கு எழுந்து ஒரு சாதம் வெடிப்போம்.இருக்கவே இருக்கு மாம்பலம் ஐய்ர் புளியோதர மிக்ஸ்,நெஸ்லே தயிர் ஆவக்கா ஊறுகா கட்டிண்டு கிளம்புவோம்.”
கிட்டுவுக்கு குதூகலம்.”டேய் செலவெல்லாம் என்னுது.”
யார்தா இருந்தா என்ன.எங்கிட்டையும் நிறைய காசு இருக்கு ஆளத்தான் ஆள் இல்ல வச்சுட்டுபோனா என்ன பயன்.இருக்குவரை தான் நம் பணம் நமக்கு அப்பறம் வேஸ்ட்
நான் ஏன் சொல்றேன்னா என் பையன் அவனா கல்யாணம் பண்ணிண்டான்.என் வைஃபுக்கு முடியலங்கற நேரத்துல அவன் ஆத்துக்காரி அவா அம்மா ஆத்துக்கு போயிட்டா.அப்பறம் இவளுக்கு குணம் ஆரச்சே வந்தா.அவ வேலைக்குப்போனதால என் வய்ஃப்தான் வீட்டுவேலையெல்லாம் பெண்களுக்கு ரிடயர்மன்டே கிடயாதா என்பாள்.ஏண்டா நம்ம காலத்திலெல்லாம் கல்யாணம் ஆனா மாமியாருக்கு மாட்டுப்பெண் ஒத்தாசையா இருப்ப ஒரு காலத்துக்காபறம் அவளே மாமியாருக்கு சேத்து செய்வா.இப்ப அப்டியா.
கேளுஅப்புறம் அவா ரெண்டுபேரும் அமரிக்கா போய் அவ புள்ளயாண்டு பெக்கற சமயம் எங்களுக்கு டிக்கட் போட்டு கூப்படறா.அங்க தாதிகளுக்கு அதிகம் தரணுமாம்.எல்லம் சுயநலம்.நாம் பிள்ளைகளுக்காஹ எவ்வுளவோ த்யாகம் செஞ்சிருக்கோம்.இவ போய் ஹெல்ப் பண்ணனும்நு படுத்தல் பஒய் வந்தோம் இவளுக்கு அமரிக்கா ஒத்துக்காம இங்க வந்து படுத்த படுக்கையா போய் நான் தான் எல்லாம் செஞ்சேன்.புண்யவதி போட்டா.நான் கிடக்காம போய்ட திருவேங்கடநாதரை வேண்டாத நாள் இல்ல.அவ போறச்சகூட அவா வரலை.இருக்க்ச்ச கஞ்சியோஒத்தாம செத்தப்பறம் காசிக்குப்போய் பிண்டம் போட்டா என்ன போடாட்டேனா.தவசத்துல 5 வித காய்தான் மத்திமாதி அவாளுக்குப்பிடிக்குமேன்னு பீட் ரூட்டா பண்ணமுடியும் இல்லை சக்கரைவ்யாதிக்காறான்னு சொஜ்ஜியப்பம் பண்ணாமய விட்டுடுவா.எல்லாம் தான் சாப்பிட..பெருமாள் கண்டருளப்பண்ணும்போது சாப்பிட ஆரம்பிச்சா இதுகள்ளாம் நைவேத்தியமே செய்யாதுகள்”
தன் கதையை முழுதும் சொன்ன சாமவைப்பார்த்து கிட்டுவுக்கு பொறாமையா இருந்த்து.தன்னால் விலாவாரியா தன் கதையை சொல்ல முடியவில்லை.தான் சாக வந்திருக்கோம்னு சொன்னா ஏடா கூடமாயிடும்.அவருக்கு மன அழுத்தமாயிருந்த்து சொல்லி அழவேண்டும்போலும் இருந்த்து ஆனால் வாய் திறக்கவில்லை.
காலையில் பேழ்கடையிலிருந்த வாழைமரங்களிலிருந்து நாலு இலையை பறித்து அடுப்பில் வாட்டிவாட்டி நுனிகளாக எடுத்துக்கொள்ள சாம குக்கரில் வைத்த சாத்த்தை சூடா இலையில் கொட்டி புளியோதரை மிக்சை லாகவமாக கரண்டியால் கிட்டு களற இன்னொன்றில் மாமா தயிரைக்கலந்து தொட்டுக்கை ம்மபலம் அய்யர் ஆவக்காய், வடாம் வத்தல் என அமர்க்களமாக கட்டிக்கொள்ள வாசலில் வந்த ட்ரேவல்ஸ்காரில் பெட்டி துணிமணிகளோடு ஏறினர்.
முதல்ல நவதிருப்பதிகள்-சாமா சொல்ல “நம்மூர் பெருமாளைசேவிச்சுட்டுபோலாம்.நேத்திக்கார்த்தால கீழப்பெருமாளப்பாக்கல.”கிட்டு.சரி முதல்ல வணடியை அங்க விடப்பா”சாமா
கீழத் திருவேங்கிடநாதபுரம். இதுவும் பெருமாள் கோவில்தான். வரதராஜப் பெருமாள். சின்னக்கோயில்தான். மண்டபத்தில் ஏறிப்போனதும், புதுசா பளபளன்னு மின்னும் கருடவாகனம் கண்ணைப் பறித்த்து கிட்டு மாமாவுக்கு. இவர் சமீபத்திய வரவு.அந்தக்காலத்தில் கிட்டு பார்த்தா நினைவில்லை. மூலவராக ஸ்ரீதேவி & பூதேவி சமேதராய் நின்றவண்ணம், கேட்கும் வரங்களையெல்லாம் தரும் வரதராஜர். பட்டர் நிதானமா தீபாராதனைசெஞ்சார்.சாமாவுக்குபரிஷ்யம் ஆனதால் நன்னா தரிசனம் செஞ்சுவச்சார்.ஏகாந்த்தரிசனம் சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆனதும் கொஞ்சம் பூவோடு ரெண்டு ரூபாய் நாணயம் ஒன்னும், ஸ்ரீவரதராஜப்பெருமாளின் சிலபடங்களும், நவதிருப்பதிகள் ஸ்டிக்கர்ஸ் பிரசாதமாத் தந்தார். முன்பு முள்காடாய் இருந்த இடம் ந்ன்னா ஆகி இருந்த்து. அ
அஞ்சலி ஹஸ்த்த்தில் ஹனுமான் சிவப்புமூக்கு செந்தூரம் அழகு
வரத ஆஞ்சநேயர் வரப்ரஸாதி. கிட்டுமாமா மனசுக்கு ரொம்பவே நிறைவான தரிசனம்இன்றைக்கு.பட்டர் இதுகாஞ்சீபுரத்துக்கு ஒப்பான க்ஷேத்ரம் ந்னு
காஞ்சிபுரம் வரதனுக்கு வேண்டுனதை இங்கே கொடுக்கலாமாம். குன்றின்மேல் தென் திருப்பதின்னா, இங்கே இது தென் காஞ்சி பெருமாளே ப்ரேன்ச் வச்சுண்ட்ருக்கார் என நினைத்தார் கிட்டு
வண்டி நவதிருப்பதிகளை வலம் வர நகர்ந்த்து.சாலையின் ரெண்டுபுறமும் பச்சை பசேல்.இன்னும் இந்தப் பக்கங்களில் நீர்வளம் குறையாமல் இருப்பதால் சாகுபடி நல்லாவே இருக்கு. அதான் தெங்கும் வாழையுமா கண்நிறைஞ்சு கிடக்கே. கிட்டுமாமாவின் மனசு குதூகலித்த்து மெட்ராஸ் எனும் காஞ்ச ஊரிலிருந்த மாடு கம்பங்க்காட்டில் புகுந்தால் என்ன ஆகுமோ அதே போல் தன் கண்களாலேயே மேய்ந்தார்.குறுகலான சாலைகளிலும் இப்படிக் குவிச்சுப்போட்டு வைச்சிருக்கறது நல்லதுக்கில்லை. கொஞ்சம் ஒரு வண்டி போகும் அளவுக்காவது இடம் வுட்டுருக்கலாமோ?அவ்வுள்வு விளச்சல்.திரு நெல் வேலியாச்சே நெல்லுக்கு குறைவா?
நவதிருப்பதி முடித்துபின் திருசெந்தூர் சென்றனர் அங்கு ஒரு லாட்ஜில் தங்கி முருகனைத்தரிசித்தனர்.கிட்டுவின் விண்ணப்பத்திற்கிணங்கி அங்கிருந்த சங்கரமட்த்திற்கு விசிட் அடித்தனர்.கிட்டு கண்ணீர்மல்க மட்த்துக்குத்தன் காணிக்கையைத்தந்து மகிழ்ந்தார்.அடுத்தநாள் இன்னிக்கு நம்ம காந்திமதியையும் நெல்லையப்பரையும் சேவிக்கணும்”
பெரிய கோவில் அநதக்காலத்தில் சிறுவனாக இருந்தபோது பலமுறை சென்றிருந்தாலும் கிட்டு மாமாவிற்கு புதிதாகத்தெரிந்தார் நெல்லையப்பர்.
கோவில் வெளிப்காரத்தில் அமர்ந்து ப்ரசாதம் வாங்கிசாப்பிட்டனர். ஆச்சு வீட்டுக்கு திரும்பியாச்சு.ரெண்டு மூணுநாளைக்குப்பிறகு கிட்டுமாமா சாமாவிடம் “அந்த பேகை எடுத்துவா”
கிட்டு மனம் உடைந்து கேவிக்கேவி அழுதார்.சாமா ஆஅஸ்சர்யமாக அவரைப்பார்த்து”என்ன கிட்டு தப்பா சொல்லிட்டேனா?பொண்டாட்டி புள்ள ஞாபகம் வந்துடுத்தா சரி நீ போப்பா நான் ஸ்வயநலமா உன்னை இருக்க்ச்சொல்ல்லாமா?நான் தான் உறவுகள் இல்லாதவன் என்றார்.சாமா: நீ வந்துதான் என்வாழ்க்கையில் கொஞ்சம் சந்தோஷம் வந்த்து.எனக்கு நீதான் தஞ்சமாஇருநதே இந்த ஒருவாரம்
டேய் நீ என்னை போக்ச்சொல்வயா?நான் இங்கயேய்ருந்து விடுகிறேனே.நான் இங்குவந்த்தே பெருமாளிடமும் நீ இருந்தால் உன்னிடமும் தஞ்சமடையத்தான்.
”நீ என்ன சொலறடா கிட்டா?
சாமா நீ அந்த பேகை திற.
உள்ளே 2 ஆயிரம் ரூபாய்கட்டுக்கள் 2 லக்ஷம்.ஒரு க்டிதாசு.
படிடா
“நான் வாழ்க்கை வெறுத்து தாம்பரபரணியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள வ்ந்தேன்.இதில் ரூபாய் 2லக்ஷம் என் ஈமக்ரியைகளுக்கு செலவுசெய்யவும்.”இப்படிக்கு க்ரிஷ்ஸாமி
என்னடா ஒண்ணும் புரியல.
டேய் நான் செத்துட்டா இந்த பையைப்பிறிக்கறவா இத எடுத்து என் ஈமச்சடங்கு செய்ய இவ்வாறுசெய்தேன்.நீ இல்லாம்லிருந்தால் அதனால் உன் பெயரை இதில் போடல.என் மனைவி புள்ள நான் சம்பாதிக்கறவரையில் அனுபவிச்சவா இப்ப என்கூட பேசறதும் இல்லை.வான்மீகிக்காவது அவரின் பாபங்களில்தான் பங்கு போட்டுக்கமாட்டோம் என்று கூறி அவரை விரட்டவில்லை அவரே ஞானியாகனார் இவர்கள் செயல் என்னை இந்தநிலைமைக்கு இழிவாக்க்கொண்டுவந்துவிட்ட்து.
எனக்குத்தஞ்சம் தருவாயா?
டேய் படுடா.அழுகையை நிறுத்து நாம் ஈதற்கு அழணும். கார்த்தால் நாம இருட்டுக்கடைக்குப்போறோம்.
காலையில் இருட்டுக்கடைக்குள் நுழைந்து இருவரும் அல்வாவை வாயில் நுழைத்தனர்.வாழ்க்கை அல்வாவைப்போல் இருவருக்கும் இனிக்க ஆரம்பித்த்து.கிட்டுமாமாவிற்கு புனரபி ஜன்னம் என்பதன் அர்த்தம் புரிந்த்து.மறுபிறவிஎடுத்திருந்தார்.
No comments:
Post a Comment