Friday, February 18, 2022

செருவாமணி 93

Seruvaamani_93

கதையாசிரியர்: பாஸ்கர் சத்யா

ஆரத்தி வரவேற்பு நந்தினிக்கு.

வீடே மகிழ்ச்சியில் நிலைத்திருந்தது.  

'நல்ல கைராசி டாக்டர்'

'துடிச்சு போயிட்டோம்.  வேண்டாத தெய்வமில்லை.'

'சின்ன அடியாயிருந்தாலும் உடனே டாக்டர் கிட்ட போயிடணும் போல இருக்கு.  நல்ல பாடம் எல்லாருக்கும்.'

மனதோடு பேசினர் பாலுவும் நந்தினியும்.  மனம் விட்டு பேசினர் இருவரும்.

தனியாக கூப்பிட்டு மூர்த்தி அவளை கிண்டலடித்தார்.

'ஏம்மா நந்தினி, உன்னோட அப்பாவுக்கு ஒரு லெட்டர் கொடுத்தியே.  அதை நான் கொடுக்கட்டுமா இல்ல நீயே கொடுத்துடறையா?'

'போங்கோப்பா...'. சிரித்துக் கொண்டே நகர்ந்தாள்.

கதை இத்துடன் சுபம்.

இருந்தாலும் சில வரிகள்:

ப்ருந்தாவின் திருமணத்திற்கு மூர்த்தி, பாலு, நந்தினி, விக்கியுடன் செல்கிறார்கள்.  தடபுடல் வரவேற்பு அனைவருக்கும்.  விக்னேஷுக்கு மூன்றாவது தாத்தா கிடைக்காத குறை பழனிச்சாமி தாத்தாவால் கிடைத்தது.  மனுஷர் கொஞ்சித் தீர்த்து விட்டார்.

கிரிஜா மாமி மெட்ராஸுக்கு வந்து நந்தினியோடு இருக்கிறாள் அனைவர் விருப்பத்தின் பெயரில்.

உப்புமு மாமியாருக்கு பரிபூரணமாக குணமாகியவுடன், திங்களூர் சம்பந்திகள் சிங்கப்பூர் பயணம்.

இதற்கிடையில் பாலு-நந்தினி குழந்தைக்கும் உப்புமு-முத்துகிருஷ்ணன் குழந்தைக்கும் ஆயுஷ் க்ஷோமங்கள் சிறப்பாக மெட்ராஸிலேயே நடந்தன.

செருவாமணி தம்பதியினர் மற்றும் மூர்த்தி, கிரிஜா மாமியையும் அழைத்துக் கொண்டு பத்து நாள் சிங்கப்பூர் செல்கின்றனர்.

பாலு மற்றும் மூர்த்தியின் வற்புறுத்தலில் நந்தினி IAS பரிட்சைக்கு முயற்சிக்கிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக விக்கிக்கு ஒன்றரை வயதாகும்போது புரிதலின் அத்தாட்சிக்காக நந்தினி இரண்டாம் முறையாக கருவுறுகிறாள்.  இரண்டாவதும் பேரனா அல்லது பேத்தியா விவாதம் துவங்குகிறது.  

செருவாமணி தன் பெண்ணின் சௌகர்யத்திற்காக மாப்பிள்ளைக்கு ஒரு காரை பரிசளிக்கிறார்.

செருவாமணியின் சுவர்கம் மெட்ராஸிலும் வியாபிக்கிறது.

சுபம்.

No comments:

Post a Comment