🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼
(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 16 ...
பஸ் வாரங்கல் நெருங்கிண்டு இருக்கு. நக்சல் பாரின்னா என்ன? அது ஏன் இந்த ஊர்ல மட்டும் இருக்குன்னு கேக்கறேன்.ஏழ்மை ,சுரண்டல், காடு அதிகமா இருக்கற இடத்துல அதை எதிர்த்து சாமான்ய மக்களை சேர்த்துண்டு புரட்சிங்கற பேர்ல தீவிரவாதிகள் போராடற ஊர்ல இந்த பகுதியும் ஒன்னு. இப்ப தனி மாநிலம் வந்து நம்ம ஊரை விட நல்லா டெவலப் ஆயிண்டு வரதால அதெல்லாம் இல்லைங்கறார்..’’அது இருக்கட்டும். நாம போற ஊர் நம்ம சோழ தேசம் மாதிரி வரலாற்றுல காகதீய தேசமாக்கும்’கறார்.
“வாரங்கல் என்றுதான் படித்திருப்போம். ஆனால் அங்குள்ளவர்கள் வரங்கல் என்று சொல்கிறார்கள். ஒருகல்லு என்ற சொல்லின் மரூ அது. அதாவது ஒற்றைக்கல். ஏகசிலா நகரம் என்று அதற்கு சம்ஸ்கிருதப் பெயர் உண்டு. ஆந்திராவின் நான்காவது பெரியநகரம். வடக்குசெல்லும் முக்கியமான ரயில் நிலையத்தில் வரங்கல் உள்ளது. பலர் இவ்வழியாக ரயிலில் சென்றிருப்பார்கள். வரங்கலில் அதிகமாக விளைவது பாறைதான். அதையே அறுவடை செய்கிறார்கள். இன்று வரங்கல் அதன் கிரானைட் குவாரிகளுக்காக புகழ்பெற்றுள்ளது”
்வாரங்கல் வந்து பாதி பஸ் காலி ஆறது. வெளில ஒரு மலை மேல திருமண் சாத்தியிருக்கு. இங்கயே எறங்கலாமேங்கறேன். கண்டக்டர் பொண்ணு எறங்க சொல்றா. இவர் முதலில் குழம்பி மறுபடி ஹனம் கொண்டான்னு டிக்கட் வாங்கறார். வாரங்கல் தாண்டி பத்து நிமிஷத்துல சின்ன பஸ்ஸ்டாண்ட்ல பஸ் நிக்கறது.
வழக்கப்படி ரூம் வேட்டையாட வெளியில போய் அலைஞ்சிட்டு எதுவும் உனக்கு பிடிக்காதுன்னுட்டு வரார். நான் இவர நம்பாம கூகுள் பார்த்து லஷ்மி பிரியான்னு ஒன்னு செலக்ட் பண்ணி இவர பேச சொல்றேன். இவர் ரூம் இருக்குன்னு தெரிஞ்
சுஅட்ரஸ்கேட்டு ஆட்டோ பேசி கடங்காரன் 100/- ரூ வாங்கிண்டு பக்கத்து தெருவுலயே ஓட்டல் வாசல்ல எறக்கி விடறான். 800/- க்கு முதல் மாடி டீசண்ட்ஆ இருக்கு. லாட்ஜ் காரன் பக்கத்துலயே கீதாபவன் வெஜ் ஓட்டல்ன உடனே ரெண்டு நாளைக்கு நிம்மதின்னு நெனச்சுக்கறேன்.
லக்கேஜ் வச்சிட்டு காபி குடிக்கலாம்னு கீதா பவன தேடினா கண்ல படல. 1000- தூண் கோயில்போலாம்னு நடந்து போறோம். கோயில் உள்ளே இருட்டினதுல போகஸ் லைட் வெளிச்சத்துல எதோ சரித்திர காலத்துல நிக்கறா மாதிரி ஒரு ப்ரமை..
கூகுள் சொல்றது….
ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது. 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அமைந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.
ஆயிரம் தூண் கோயில்
கலையம்சம் கொண்ட வாசல் அலங்கார அமைப்புகள், தூண்கள், கூரைவிமான அமைப்புகள், மற்றும் கல்வெட்டு குறிப்புகள் போன்றவை இந்த கோயிலில் நிரம்பியுள்ளன. எனவே இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. கோயிலின் பின்னணியில் ஹனுமகொண்டா மலை வீற்றிருப்பது இந்த கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது.
வழவழப்பான ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு நந்தி ஒன்றும் கோயிலின் வாசலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மயங்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்களுடன் இந்த கோயில் அமைதியாக வீற்றிருக்கிறது. ஒப்பற்ற கலைத்திறமையின் உச்சமாக விளங்கிய காகதீய அரசாட்சிக்காலத்தை எதிரொலிக்கும் இந்த கோயில் காலங்களைக் கடந்து நீடித்து நிற்கிறது. தென்னிந்தக்கோயில்களிலேயே மிகப்பழமையான அற்புதக்கோயிலாக வரல்லாற்றியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த ஆயிரம் தூண் கோயில் கருதப்படுகிறது.
இருட்டுல ஃபோகஸ் லைட்ல அங்கங்க போட்டோ எடுத்துக்கற சுற்றுலா ஜனங்கள்.
அரைகுறை இருட்டில் நிகழ்காலம் மெல்ல நழுவி ஆயிரம் வருஷம் பின்னால போய் அந்த சிற்பங்களுக்கு நடுவுல நடமாடற மாதிரி ஒரு ப்ரமை..
ருத்ரமாதேவி படம் நினைவு வந்து அனுஷ்கா சாயல்ல ஒரு சிற்பம் உயிரோட எழுந்து வந்து
எங்களை வரவேற்கறா மாதிரி ப்ரமை.
No comments:
Post a Comment