Friday, February 18, 2022

செருவாமணி 91

Seruvaamani_91

பாஸ்கர் சத்யா

'பாலு, இந்த டை கான்ட்ராஸ்ட எங்க வாங்கின.  இம்போர்டட் மாதிரி தெரியரதே!  குட்.'

'நாராயணப்பா மெடிகல்ஸல தான் சார்.  மெட்ராஸ்ல அங்க போனா கான்ஃபிடென்டா எதுவும் கிடைக்கும்.'

'ஓ. ஐ ஸி.  அப்புறம் பாலு, ஒரு L.A. கொடுத்துடுவோமா நந்தினிக்கு.  எதுக்கு பாவம் பெயின்?'

'ச்சாய்ஸ் இஸ் யுவர்ஸ் சார்.'

குமரகுரு டாக்டர் சுகுமாரிடம் வந்து லோ வாய்ஸில், 'அவங்க தாலிய எடுக்க மாட்டேங்கராங்க எவ்வளவு சொல்லியும்.'

'தமிழ் நாட்டு மாமிப்பா.  அடி வாங்காம வந்தியே.  பரவாயில்ல.  தாலில இருக்கர நகைய கழுத்துக்கு பின் பக்கமா  போட்டுக்க சொல்லு.  ரீடிங்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.  பாலு ஸ்ட்ராங்கா கட்டியிருக்கான்.  லேசுல கழட்ட முடியாது.'

பாலு சிரித்துக் கொண்டே, 'சார், நான் வேணா..'

'அட விடுப்பா, பார்த்துக்கலாம்.'

நந்தினியிடம் செல்கிறார் டாக்டர் சுகுமார்.

'அம்மா நந்தினி, யுவர் பாலு இஸ் ஆல்ஸோ வித் மீ.  கொஞ்சம் ஒரே பொஸிஷன்ல சித்த நாழி இருக்கணும் நான் ரெடின்னு சொன்னோண்ண.  என்ன புரிஞ்சுதா.'

பாலு, டாக்டர் மற்றும் குமரகுரு ரேடியேஷனைத் தாங்கும் யூனிஃபார்மகளில் மாறிக் கொள்கிறார்கள்.

X-ரே ஆன்.

'நந்தினி, ரெடி.  ஸ்டார்ட்.'

நிஸப்தம்.  அறை முழுவதும் அரை இருட்டு.  X-ரே கதிர்கள் நந்தினியின் தலை பாகத்தில்.  தன்னை அறியாமல் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத உணர்வு நந்தினிக்கு.

ஒரு சில நிமிடங்கள் தொடர்கிறது பரிசோதனை.  பாலுவிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டே இருக்கிறார் டாக்டர் சுகுமார்.

'ஓவர்.  ஸ்டாப் குமரகுரு'

'தேங்க் யூ குமரகுரு.  எக்ஸலென்ட்.  குட் ஜாப்.'

மாஸ்கை எடுத்து விட்டு நந்தினியிடம் வருகிறார்.

'நந்தினி, யூ ஆர் லக்கி.  நோ நீட் ஆஃப் எனி ஸர்ஜரி.  ரிலாக்ஸ்.  வார்டுக்குப் போய் நன்னா ரெஸ்ட் எடுத்துக்கோ.  அங்க வந்து பார்க்கிறேன் உன்ன.'

பிரத்யேக உடைகளை ஸ்டாண்டில் மாட்டி விட்டு இருவரும் ரிஸப்ஷனில் உள்ள சோஃபாக்களில் அமர்கிறார்கள்.

'யூ ஆர் லக்கி.  நல்ல வேளை ஸ்ட்ரோக் வரதுக்குள்ள ஸேஃப்.  இப்படியா அஜாக்ரதையா இருப்ப?'

'என் கிட்ட ரொம்ப லேட்டாதான் ஸிம்ப்டம்ஸ் பத்தி சொன்னா.  அதுவும் அப்பா மூலமாதான் தெரிஞ்சது.'

'டோண்ட் ப்ளேம் ஹர்.  அந்த ஆக்ஸிடன்ட் பத்தி சொல்லும்போது தலைல அடி பட்டுதுன்னு சொன்னாளோன்னோ.  அப்பவே ஜாக்ரதையா ஒரு X- ரே எடுத்து பார்த்திருக்க வேண்டாம்?  நல்ல வேளை க்ளாட் ரொம்ப மைல்டா இருந்ததோ பொழச்சா.'

'சாரி சார்.'

'இட்ஸ் ஓகே.  இதெல்லாம் டாக்டர் தொழில்ல லெஸன்.  ஒன் மந்த் மெடிஸன்ஸ் எடுத்துக்கட்டும்.  அதுக்கப்பறம் கம்ப்ளீட் ப்ளட் அனாலிஸிஸ் போகலாம்.  இப்ப தேவையில்ல.  வீணா காப்ரா பட்டுக்க வேண்டாம்.  டை எக்ஸ்ரே ரிப்போர்ட் வந்தோண்ண இன்னொரு தடவை பார்த்துடறேன்.'

'உன்னோட அப்பாவையும் மாமனாரையும் அழச்சிண்டு நந்தினி ரூமுக்கு போ.  நானும் வரேன்.'

'ஃபில்டர் காஃபி சூடா வெச்சிருக்க?'

'இருக்கு சார்.'

'ரெடி பண்ணு. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்.'

'சரி சார்'

காஃபியும் சாப்பிட்டு விட்டு நந்தினி ரூமுக்கு செல்கிறார்.  அங்கு நிற்கும் மூர்த்தியையும் செருவாமணியையும் பார்க்கிறார்.

'பாலு கிட்ட உங்க பேர் என்னன்னு கேட்டா செருவாமணிங்கறானே.  அது என்ன செருவாமணி? பேர் புதுசா இருக்கே?'

செருவாமணிக்கு விளக்கத்தை சுருக்கமாக சொல்கிறார்.  அவர் சிந்தனை முழுவதும் நந்தினிக்கு நடைபெற்ற டெஸ்டின் ரிஸல்டை நினைத்தே இருக்கிறது.

'செருவாமணி சார்.  உங்க பொண்ணுக்கு ஆயுஸு நூத்தம்பதுக்கு மேல.  அப்ப நான் இருந்தேன்னா, கூட ஒரு பத்து வருஷத்த கூட்டிக்கலாம்.'

உடம்பெல்லாம் சிலிர்த்து புல்லரிக்கிறது செருவாமணிக்கு.  என்ன சொல்வதென்றே புரியாத நிலை.  டாக்டரின் இரு கைகளையும் பற்றிக் கொள்கிறார்.  

மூர்த்தி அவர் தோளை பற்றி தன் பக்கம் இழுத்து அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்.

'டாக்டர் மாமா, உங்க மாட்டுப் பொண்ணுக்கு ரத்த கட்டி அல்மோஸ்ட் கரஞ்சிண்டு வரது.  ரொம்ப மைல்டாதான் ப்ளாக் இருந்திருக்கு.  கவலப் படவேண்டாம், பயப்படாதீங்கோ.  மத்ததை பாலுகிட்ட சொல்லி அனுப்பறேன்.'

'நந்தினி, ஈவினிங் வரைக்கும் எதுக்கும் குழந்தைக்கு ஃபீட் பண்ண வேண்டாம்.  இந்த டெஸ்டு எடுத்ததுல வாந்தியோ பேதியோ வரலாம்.  பயப்படாத.  அதனால சாயந்திரம் வரைக்கும் இங்கேயே இரு.  ஆத்துக்கு அப்புறமா போயிக்கலாம்.  தலைய குனியாம வெச்சிக்கணும்.  அடிக்கடி தூத்தம் குடிக்கணும்.  யூரின் வழியா செலுத்தின மருந்து ஸ்லோவா வெளிய வரும்.  பொம்மனாட்டி யாராவது துணைக்கு வெச்சிண்டா பெட்டர்.  ப்பில்லோவ கொஞ்சம் ஏத்தமா வெச்சிண்டு படுத்துக்கணும்.  யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.'

'முடிஞ்சா சாயந்திரம் வந்து பார்க்கறேன்.  இல்லாட்டி பாலு வில் டிஸைட் ஆன் யுவர் டிஸ்சார்ஜ்.'

'யாரும் அன்னெஸ்ஸஸரியா இங்க இருக்க வேண்டாம்.  நீங்கள்லாம் ஆத்துக்கு போகலாம்.  சாயந்திரம் டிஸ்ச்சார்ஜ் பண்ணிடலாம்.'

'செருவாமணி ஸ்வாமி.  கொஞ்சம் ரிலாக்ஸா இருங்கோ.  பாவம், உங்க முகம்தான் வாடி போச்சு நந்தினிய விட.'

'தேங்க் யூ டாக்டர்.'

கிளம்பினார் எல்லா த்தேங்க்ஸ்களையும் மூட்டை கட்டிக் கொண்டு.

வாசலில் அவர் கார் வரைக்கும் பாலு வந்தான்.

'என்ன பாலு, ஜெமினி கணேசா?  ஒன்னோட ஆளுக்கு கல்யாணம் போல இருக்கே அடுத்த மாசம். என்ன போறியா?  எனக்கும் இன்விடேஷன் வந்திருக்கு எங்கெங்கெல்லாமோ சுத்திட்டு.'

சிரித்தான் பாலு அவருக்கு பதிலாக.

'போயிட்டு வா.  உன் பையன் ஆத்துக்காரிய கூட்டிண்டு.  நத்திங் ராங் இன் தட்.'

பெரிய நிம்மதி அனைவர் முகத்திலும் நீண்ட பெருமூச்சுடன்.

தொடரும்...

No comments:

Post a Comment