Friday, February 18, 2022

எண்ணப்பறவை_6

எண்ணப்பறவை_6

லஞ்ச் டைம்.  சாப்பிட டிஃபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பும் சமயத்தில் அபிராமியிடமிருந்து ஃபோன்.

'அக்கா சாரிக்கா.'

'அது இருக்கட்டும்.  உன்ன தனியா கவனிச்சுக்கிறேன்.  அந்த ஆளு, அதான் உங்க அத்தை பையன் வந்தானா அங்க.  பாஸ்புக்க கொடுத்துட்டியா?'

'ம்ம்ம்ம்... வந்தான் வந்தான்.  கொடுத்துட்டேன் அவன் பாஸ்புக்க.'

'பாஸ்புக்க மாத்திரமா அல்லது மனசையும் சேர்த்தா.'

'அக்க்க்க்கா... ரொம்ப கலாட்டா பண்ணினீங்கன்னா அழுதுடுவேன் பார்த்துக்கோங்கோ.'

'மனச கொடுத்திருந்தாலும் ஆச்சர்யமில்ல.  பய பயங்கர ஸ்மார்ட்.'

'அக்க்க்கா...'

'சரி, நாளைக்கு 12G அதே டைம் தான?'

'அக்கா இந்த வாரம் முழுக்க வேலை டைட்டா இருக்கும் போல இருக்கு.  நான் உங்களோட பஸ்ஸுல ஜாயின் பண்றது கூட பிட் டிஃபிகல்ட்.  எனிஹௌ, ஷல் ட்ரை மேக்ஸிமம்.'

உரையாடல் முடிந்தது.

'நல்ல வேளை.  அக்கா நம்ம பொய் சொன்னதை ஸீரியஸா எடுத்துக்கல.'

இதற்கிடையில் திரும்பி வந்த ஷ்யாமளா, 'அமுதா, S4 லஞ்ச்சுக்கு போயிருக்கார் போல இருக்கு.  நாமளும் சாப்பிடப் போலாமா?  வயித்த வயிறே சாப்பிட்டுடும் போல இருக்கு.  வா சீக்கிரம்.'

வழக்கமாக அவள் கூட வேலை பார்க்கும் ஷ்யாமளா, கௌரி, சரஸ்வதி, பார்வதி, ப்ரியா, கீதா, இவர்களோடு வெளியே ஓபன் ஸ்பேஸில் உள்ள ஒரு மரத்தடியின் கீழ்தான் அரட்டை அடித்துக் கொண்டு லஞ்ச் எடுத்துக் கொள்வாள்.

அவள் சகோதரி குமுதா சமைத்து  டப்பாவில் அடைத்துக் கொடுக்கும் வரைட்டி ரைஸுக்கு அங்கு மௌஸு அதிகம்.  சில சமயங்கள் குமுதா என்ன கொடுத்து அனுப்பினாள் என்று தெரியாத அளவிற்கு டிஃபன் டப்பி காலியாகி விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இவர்கள் அரட்டைகளும் சிரிப்புகளும் அந்த பக்கம் போவோரையும் வருவோரையும் சற்று நிற்க வைத்து விடும்.

அன்றும் அப்படித்தான் பேச்சுக்கள் ஆரம்பமாயிற்று.  இடையில் ப்ரியாவின் ஒரு கேள்வி அமுதாவின் புருவத்தை சற்று தூக்க வைத்தது.

'ஏண்டி அமுதா.  அரவிய உனக்கு எப்படி தெரியும்?'

புரிந்து கொண்டாள் அரவி என்று அவள் அரவிந்தைத்தான் குறிப்பிட்டாள் என்று.  அரவி என்று அவன் பெயரை சுருக்கியதிலிருந்தே அரவிந்த் அவளுக்கு ஓரளவு பரிச்சயமானவளாகத்தான் இருக்கக் கூடும் என்பதையும் உணர்ந்தாள்.

'அரவிந்தை உனக்கு தெரியுமா?'

அவள் அதற்கு விடை சொல்வதற்குள் மற்றவர்கள் கலாட்டாக்களை துவக்கி விட்டார்கள்.

'அரவிந்த்தா!  யார்டி அவன்?  மாட்டிகிட்டானா உன் கிட்ட?  ஐயோ பாவம்.  யார் பெத்த புள்ளையோ!  ஏண்டா தம்பி, போயும் போயும் இந்த ராட்சஸி கிட்டேயாடா மாட்டுவ.'

'அமுதா மனசுல அரவி.  இதுதான் அமுதாவின் அடுத்த கதை.  பிரதிகளுக்கு இப்போதே முந்துங்கள்.'

'நாம பாட்டுக்கும் இங்க கலாட்டா பண்ணிகிட்டு இருக்கோம்.  அமுதா பாரு திருட்டு முழி முழிச்சுகிட்டு இருக்கு.  எங்கள் அருமைத் தோழியே.  உங்கள் காதல் கதையை கொஞ்சம் எடுத்து விடுக்கள்.  ஆவலுடன் கேட்க தயாராக இருக்கிறோம்.'

'நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை.'

'ஆமாம் ஆமாம்.  நாங்க அமுதா பொண்ணுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சோம்.  அது இல்லைனு தெரியுது.'

'ஏய்.  அவள பேச உடுங்கடி.  கோச்சிண்டு போயிடப்போறா.  அப்புறம் நமக்கு ந்யூஸ் கிடைக்காம போயிடும்.'

'கம் ஆன் கம் ஆன்.. அரவிந்த் அரவிந்துனு ஒருத்தராம்.  அழகா இருப்பாராம்.... மேல சொல்லு சொல்லு.'

மற்றவர்கள் செய்யும் கலாட்டாக்களில் அவளுக்கு எதை சொல்வது எதை சொல்லக் கூடாது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக அவனுக்கு உதவி செய்ததை சுருக்கமாக சொன்னாள்.  அத்தை பையன் மற்றும் பர்ஸ்ஸில் இருந்த  ஃபோட்டோ விஷயங்களை சாமர்த்தியமாக மறைத்தே சொன்னாள்.

'அடடா, இன்ட்ரெஸ்ட் இல்லாம போச்சே.  இப்ப சொல்ல முடியாது.. ஏன் நாளைக்கு தொடராதா என்ன?  ஆல் தி பெஸ்ட் அமுதா.'

சிரித்துவிட்டு அவரவர் ஸீட்டுகளுக்கு சென்றார்கள்.

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ப்ரியாவிடமிருந்து விடை கேட்காமல் திரும்பியது நினைவிற்கு வராமல் இல்லை.

'ஓடியா போயிடப் போறா?  அப்புறமா கேட்டுண்டா போச்சு.'

தொடரும்...

No comments:

Post a Comment