எண்ணப்பறவை_5
எப்படியோ விசாரித்துக் கொண்டு அமுதாவின் ஸீட்டுக்கு வந்துவிட்டான் அரவிந்த்.
அவனைப் பார்த்தவுடன் ஒரு ஷாக். பிறகு ஒரு சிரிப்பு. அதே ஸென்ட் நறுமணம் மனதோடு ஒரு பெருமூச்சை இழுத்து உள் வாங்கியது.
'என்ன எப்படி நீங்க இங்க? நான் இங்க வேலை பார்க்கறது எப்படி உங்களுக்கு ...'
'ஏங்க கிண்டலா? இப்படி என்ன லோ லோன்னு அலைய விட்டீங்களே மேடம்?'
'சாரி.. சாரி... சாரி..'
'ஏங்க ஒரு வார்த்தை சொல்லிட்டு பாஸ்புக்கை அந்த மேடத்துகிட்டேயே திருப்பி கொடுத்திருக்கலாமில்ல.'
சிரித்தாள். அவன் அதை புன்முறுவலுடன் ரசித்தான்.
'ஏதோ கோபத்துல நான் உங்க அத்தை பையன் இல்லைனு இன்னிக்கு போட்டு ஒடச்சுட்டேன் அந்த மேடத்துக்கிட்ட. இனி உங்க பாடு அவங்க பாடு. நேர உங்கள பார்க்கும்போது கொதறப் போறாங்க. நீங்க உங்க விவரத்தை சொல்லியிருந்தீங்கன்னா அந்த அத்தை பையன் விவகாரத்தை போட்டு ஒடச்சிருக்க மாட்டேன். எனிவே, ஐ ஆம் சாரி.'
'பேசிகிட்டே இருக்கோமே.. உங்கள உட்கார கூட சொல்லாம. ப்ளீஸ் அந்த ச்சேரை இழுத்துப் போட்டு உட்காருங்க. உங்க பாஸ்புக்க எடுத்துத் தரேன்.'
பாஸ்புக்கை கைப்பையில் தேடினாள். சட்டென்று கிடைக்கவில்லை. 'எங்க வெச்சோம். இதிலதானே வெச்சோம்.'
'அமுதா மேடம்.. நல்லா தேடிப்பாருங்க. இனிமே என் பேரு பாஸ்புக் அரவிந்துனு ஆகிடப் போறது.'
அவள் சிரித்தாள் அவள் பெயரைச் சொல்லி அழைத்ததை நினைத்து. இந்த 'மேடம்' தேவையா? மனதிற்குள் ஒரு கேள்வி அவனிடம்.
கைப்பையை மீண்டும் ஒரு முறை பார்த்தாள் ஒவ்வொரு Zஸிப்பாக திறந்து. 'அப்பாடி, கெடச்சுடுத்து.' பெருமூச்சுடன் ஒரு தேங்க் Gகாட்.
'இந்தாங்க உங்க பாஸ்புக்.'
வாங்கிக் கொண்டான். ஒரு க்ளான்ஸ் ச்செக்கிங்.
'ரொம்ப தேங்க்ஸுங்க. இந்த பாஸ்புக் ஒரு வழி பண்ணிடுச்சிங்க. கோபத்துல உங்க ஃப்ரெண்டு கிட்ட தேங்கஸ் கூட சொல்லல. பார்த்தா சொல்லிடுங்க.'
'ரொம்ப சாரிங்க. நான் இப்படியெல்லாம் உங்கள கஷ்டப்படுத்தியிருக்க கூடாது. உட் யூ லைக் டு ஹாவ் எ கப் ஆஃப் காஃபி?'
'இப்ப நேரமில்ல. ஆஃபீஸுல இப்ப வந்துடறேன்னு சொல்லிட்டு வந்தேன். வேலையெல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு. அதான் நீங்க இருக்கிற இடம் தெரிஞ்சிடுத்தே. இன்னொரு நாள் வந்து சாப்பிடுவோம்.'
'எங்க வேலை பார்க்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?'
பர்ஸை பனியனுக்குள் கைவிட்டு எடுத்து தன் பிஸினெஸ் கார்டை அதிலிருந்து எடுக்கிறான். அப்போது பர்ஸ் கீழே விழுகிறது. அதில் இருந்த ஒரு யுவதியின் படம்.
அந்த படம் அமுதாவின் கண்களுக்கும் தெரிந்து விடுகிறது. கொஞ்சம் முகம் மாறுகிறது அவளுக்கு. எப்படிக் கேட்பது அந்த படத்தில் இருப்பது யார் என்று?
விஸிடிங் கார்டை கொடுத்தவிட்டு இன்னொரு முறை நன்றி சொல்லிவிட்டு விடை பெறுகிறான்.
விஸிடிங் கார்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு கைப்பையில் வைத்தாள். ஆனால் அவள் மனம் என்னவோ கண்ணில் பட்டும் படாமல் தெரிந்த அந்த ஃபோட்டோவிலேயே நின்று கொண்டிருந்தது.
'கல்யாணம் ஆனவனா? நம்ப முடியலையே?'
'மே பி ஹிஸ் வவர்?'
'ஃபோட்டோவில் இருந்தது யாராயிருந்தா எனக்கென்ன?'
'ஏன் அவனுக்கு அக்காவா இருக்க கூடாதா? தங்கையா கூட இருக்கலாமே!'
'அக்கா தங்கை படமெல்லாமா வெச்சிருப்பாங்க பர்ஸுல? ஐ க்காண்ட் பிலீவ் திஸ்'
'எனக்கென்ன லூஸா புடிச்சிடுச்சு. இதையே நெனச்சிண்டிருக்கோமே!'
'ஏதோ வந்தான். நம்மளாலான ஒரு சின்ன உதவி செஞ்சோம். அதோட போவோமா. அத விட்டுபுட்டு... தேவையில்லாம ஏன் இந்த ஆராய்ச்சி?'
'காஃபி ஷாப்புக்கு அவனோட போயிருந்தா பளிச்சினு அவன் கிட்டேயே கேட்டிருக்கலாம்.'
'அவன்தான் இன்னொரு நாள் வரேன்னுட்டு போயிருக்கானே. அப்ப கேட்டுண்டா போச்சு.'
'வருவானா?'
'யதேச்சயா பாங்க்ல நடந்த ஒரு விஷயம். இதுக்குப் போய் இப்படியா ... ச்சே ச்சே. ஏய் அமுதா! நீ போற போக்கு சரியில்ல.'
'அரையும் கொறையுமா பார்த்த ஒரு படத்தை வெச்சு ஏன் என்னோட மனசு அலைபாயறது இருக்கே. லெட் அஸ் இக்னோர் திஸ்'.
நினைவிலிருந்து நிஜத்துக்கு வருவதற்கு பருவத்திற்கு சிறிது நேரம் பிடிக்கும். அப்படித்தான் அவளுக்கு இருந்தது.
'மேடம்.. உங்கள ஐஜி அய்யா கூப்புடறாரு' சிந்தனையை கலைத்து விரைப்பாய் நின்ற ஆர்டர்லியிடம், 'வரேம்ப்பா' என்று சொல்லிவிட்டு உத்தேசமாக இதற்காகத்தான் கூப்பிடுகிறார் என்று கணித்து இரண்டு ஃபைல்களை மார்பில் அணைத்துக் கொள்கிறாள்.
ஐஜி ரூமுக்கு வெளியே போலீஸ்காரர் ஒருவர் தடுக்கிறார்.
'கொஞ்சம் இந்த ச்சேர்ல வெயிட் பண்ணுங்க மேடம். ஐயா கிட்ட சொல்றேன்.'
உள்ளே சென்று விட்டு உடனே வெளியே வந்தார். 'நீங்க போகலாம் மேடம்'.
'வாங்க.. எப்படி இருக்கீங்க? டிஐஜி உங்கள ரொம்ப புகழ்ந்தார் ஃபோன்ல இப்பத்தான்.'
இந்த மாதிரி போலீஸ் அதிகாரி சொன்னார்னா ஒரு பெரிய வேலைய தலைல கட்டப் போறாங்கன்னு அர்த்தம். அமுதாவுக்கா இது தெரியாது?
'சொல்லுங்க சார். என்ன செய்யணும்?'
'ஒண்ணுமில்ல. டிஐஜியோட கேம்ப் எக்ஸ்டெண்ட் ஆகும் போல இருக்கு. எனக்கு ஒரு க்ரைம் மீட்டிங் இருக்கு நெக்ஸ்ட் மன்டே. கொஞ்சம் க்ரைம் ஸ்டேடஸ் ரிப்போர்ட் ரெடி பண்ணனும். என்னோட கேம்ப் க்ளர்க்கோட மனைவிக்கு ஏதோ ஆப்பரேஷனாம். லீவு கொடுத்து அனுப்பிச்சுட்டேன். நீங்க கொஞ்சம் ...'
இழுத்தார். எல்லா ஸ்டேஷன்லேந்து விவரங்கள் பெற்று ரெடி பண்ணுவது அவ்வளவு லேஸான காரியமில்லை. இருந்தாலும் ஐஜி கேட்கும்போது மறுக்க முடியுமா என்ன?
ரெண்டு மூணு நாட்களுக்கு படு பிஸி என்பது புரிந்த்து.
'கட்டபொம்மன்தான் இல்லையேன்னு சந்தோஷப்பட்டா வந்தியத் தேவன் கிட்ட மாட்டிகிட்டோமே.'
'சார், யாராவது ஹெல்ப்புக்கு?'
'ஓ. ஷ்யூர் ஷ்யூர். S4 பரந்தாமன் உங்களுக்கு அஸிஸ்ட் பண்ணுவார். டோண்ட் ஒர்ரி.'
ஸீட்டுக்கு வந்தாள். ஷ்யாமளா அவளிடம், 'அமுதா, உன் டியர் ஃப்ரெண்ட் அபிராமி ரெண்டு தடவ கால் பண்ணிட்டாங்க. வந்தவுடனே பேச சொன்னாங்க.'
'ஓகே. தேங்க்ஸ். நான் பேசிக்கறேன். நீங்க கொஞ்சம் நம்ம S4 பரந்தாமன கூப்பிட முடியுமா?'
தொடரும்....
No comments:
Post a Comment