🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼
(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 17 பத்மாக்ஷியும் சித்தேஸ்வரரும்.
பத்மாட்சி கோயில் (Padmakshi Temple) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் வாரங்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப்பகுதியான அனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு பழைமையான ஒரு கோயிலாகும். இங்கு, 12ஆம் நூற்றாண்டில் காக்கத்திய மன்னர்களால் கட்டப்பட்டு பிரதான தெய்வமாக பத்மாட்சி (லட்சுமி) தெய்வத்திற்கு இக்கோயில் அர்பணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சமண கோவிலாகும். இது முதலில் காக்கத்தியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. காக்கத்திய மன்னர்கள் ஆலயத்தை புதுப்பித்து நிறுவும் வரை, முன்பு இது ஒரு ‘பசாதி’யாக (சமண கோவில்) இருந்தது. கருவறையில், ஒரு பெரிய தீர்த்தங்கர பார்சுவநாத் உருவம் உள்ளது. வலதுபுறத்தில் யக்ச தரனேந்திரனும், இடதுபுறம் பத்மாவதி (லட்சுமி) தெய்வமும் உள்ளன.உருவங்கள் அனைத்தும் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவை. தற்போது மீட்டெடுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன.
இந்த கோவிலில் சமண தீர்த்தங்கரருக்கும், பிற சமண தெய்வங்களுக்கும் சிற்பங்கள் உள்ளன.
வருடத்திற்கு ஒரு முறை, புகழ்பெற்ற பதுகம்மா விழாவை கொண்டாட பெண்கள் இங்கு கூடிது பத்மாட்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குளங்களில் பூக்களை தூவுகிறார்கள்…
கோயிலின் வாயிற்பகுதியில் சதுரமான தூண் ஒன்று கருப்பு சலவைக்கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது அன்னகொண்டா தூண் என்று அழைக்கப்படுகிறது. இந்த தூணில் காணப்படும் குறிப்புகளும் சித்தரிப்புகளும் இது ஒரு ஜைன திருத்தலமாக விளங்கிருக்கலாம் என்ற யூகத்திற்கு இடமளிக்கிறது. அற்புதமான கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தூணை பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து மகிழ்கின்றனர்.
மறுபடி எறங்கி வர வழில நரசிம்மர் சன்னதியில தீர்த்தம் வாங்கிண்டு எதிர் பக்கம் அரை கிமீல சித்தேஸ்வரர் கோயில் போறோம்.
இதுக்கு நம் நாட்டிலே யே விரல் விட்டு எண்ணக்கூடிய மேற்குமுக வாசல் கோயில்னு பேராம். கல்லிலே தூணிலே கலை வண்ணம் சொட்டறது
மூணாவது நூற்றாண்டு சாளுக்கிய கோயில். சிவராத்திரிக்கு கூட்டம் அள்ளுமாம் ..
திரை போட்டதால சித்தேஸ்வரரை தரிசனம் பண்ணமுடியல..கால் வலி வேற… ஒரு ஆட்டோ பிடிச்சு ரூம் வரோம்.
கீதா பவன்ல ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் பண்ணி சாப்ட்டு ரெஸ்ட் எடுக்கறோம்.
மத்யானம் மறுபடி மகா காளி கோயிலுக்கு கிளம்பறோம்
No comments:
Post a Comment