Friday, February 18, 2022

கோதாவரி நதி தீரம் 17

 🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼

(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி 17 ஆயிரம் கால் மண்டபம்

கோவில் பத்தி இவர் பேசறார். 

பெயர் 1000 கால் என்றாலும் இந்தச் சிவன் கோவிலில் சுமார் 300 தூண்களே இருப்பதாக ஆய்வாளர் கூறுவர். ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல தூண்கள் காட்சி தருகின்றன. இது மற்ற எல்லாவற்றையும் விட மிகப் பழையது.

தமிழ்நாட்டைத்தவிர மற்ற இடங்களில் உள்ளவை ஆயிரம் தூண்கள் உடையவை அல்ல. சிதம்பரம் மதுரை என நிறைய தூண்கள் இருந்தால் ஆயிரம் என்று சொல்லி விடுவர். தசரதனுக்கு நிறைய பெண்டாட்டிகள் என்பதால் 60,000 பேர் என்று நாம் சொல்லுவது போல!

போயிலுன் உள்ளே பிள்ளையார் வைத்து பூஜைசெய்திருந்தார்கள். ஒரு நாதஸ்வர வித்வான் அழகாக வாசித்துக் கொண்டிருந்தார். எனக்கு தெரிந்த சில ராகங்களில் ஒன்று– சிந்து பைரவி. கோயில் முன்பிருந்த நந்தியை வியந்து வியந்து நோக்கிக் கொண்டிருந்தோம். காகதீயர்களின் கன்னங்கருமை பளபளக்கும் கோயில்தான் அதுவும். அடிப்படையில் இது சாளுக்கியக் கட்டிடக்கலையின் பாணியில் அமைந்தது. ஆனால் தூண் அமைப்புகளில் காகதீய முத்திரை உள்ளது. நட்சத்திர வடிவிலான மூன்று கருவறைகள் கொண்ட கோயில் இது. இக்கோயிலின் கல்யாண மண்டபத்துக்கு அடியில் சமீபத்தில் ஒரு கிணறு கண்டடையப்பட்டுள்ளது பெரியதோர் ஊற்றின்மீது இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

கோயில்லேர்ந்து மறுபடி ரூம் நோக்கி வரோம். ரொம்ப தலைவலி ஒரு டீக்கடை கூட காணும். வாக்கிங் வர ஒரு தெலுங்கு பெரியவர் இங்லீஷ்ல பேசிண்டு ஊர் பத்தி சொல்றார். 

கீதா பவன் எங்க லட்ஜ் பின்னால கொஞ்சம் மறஞ்சு இருக்கு நின்னுண்டும் சாப்பிடலாம். உள்ள போய் உக்காந்தும் (ஜிஎஸ்டியோட) சாப்பிடலாம். இட்லி ,பூரி காபி சாப்பிட்டு ரூம் வரோம். 

வழில ஃபலூடா வாங்கித்தரார்..

கனால கீதாவும் லஷ்மி ப்ரியாவும் குழந்தைகளா மாறி அதுங்களோட வாராங்கல் மலைல தட்டாங்கல் விளையாடறேன். இவர் ஹனம் கொண்டா மலை மேலே என்னை கல் வச்சு அடுப்ப மூட்டி  இட்லியும் பூரியும் கொண்டா கொண்டான்னு கேக்கறார். நான் ஃபலூடா கொண்டான்னு கேக்கறேன்..

பொழுது விடிஞ்சு குளிக்க கொதிக்க வெந்நீர் தரான். 

குளிச்சு பத்மாஷி கோயில் சேவிக்க நடந்தே போறோம். 

வழில ரோடு ரொம்ப ப்ரமாதமா போட்டுண்டு இருக்கான். நாம சீலிங்குக்கு கம்பி கட்டி காங்க்ரீட் கொட்டி எப்படி போடுவமோ அதே மாதிரி ஊர்ல அங்கங்க பக்காவா ரோடு 50-100 வருஷம் தாங்கறா மாதிரி போடறான். நம்ம கழகங்கள் கான்ட்ராக்ட் ரோடு மாதிரி ஒரே மழைக்கு பல் இளிக்காத மாதிரி ..TRS கட்சி நம்ம ஆளுங்க்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு,...

பத்மாஷி கோயில் வரது. மலை மேலே பாதி படி ஏறினதும் ஒரு நரசிம்மர் கோயில். ஒரு கல்யாணம் ஆக வேண்டிய பெண்ணை உட்கார வைத்து அவ குடும்பம் பட்டாசார்யார்ட்ட ஜாதகமோ ப்ரசன்னமோ பார்த்துண்டு இருக்கு. பெருமாளை சேவிச்ச திருப்தியில் மேலே ஏறி போறோம்…

பத்மாக்ஷி ங்கறது சமணர் கோயில்னு தெரியறது. குகை குகையா போனா அங்கங்க விக்ரகம் செதுக்கி இருக்க பத்மாக்ஷி அம்பாள தரிசனம் பண்றோம். 

அடுத்த பகுதியில் 

விக்கி பீடியாவை கேட்போம்….


No comments:

Post a Comment