Sunday, February 13, 2022

திருவலஞ்சுழி

 இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன் தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

அனைவரும் திருவலஞ்சுழி ஸ்வேதா வினாயகர் தரிசனம் செய்து சிவன் சன்னதி தரிசனம் செய்து சிற்பங்கள் கலைநயமிக்க வேலை ஒருநாள் பார்ப்பதற்கு பாத்தது 

சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்கள்

88. திருவலஞ்சுழி

சிவஸ்தலம் பெயர்
திருவலஞ்சுழி
இறைவன் பெயர்
கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர், கற்பகநாதர்
இறைவி பெயர்
பெரியநாயகி, பிருகந்நாயகி
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
1. விண்டெலாமல ரவ்விரை
2. என்னபுண்ணியஞ் செய்தனை
3. பள்ளமதாய படர்சடை
அப்பர்
1. ஓதமார் கடலின்
2. அலையார்புனற்கங்கை


எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்
திருவலஞ்சுழி
சுவாமிமிலை அருகில்
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 612302
தொடர்புக்கு: 0435 - 245 4421 , 245 4026

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.

அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.

காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள. ஹேரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

ஸ்வேத விநாயகர்: திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

கோவில் அமைப்பு: திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேஸ்வரர் கோவில் ஒரு பெரிய கோவில். கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரமம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளா,. தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

சிறப்புகள்

திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.

சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

 திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர்!

ஸ்வேத விநாயகர்:

கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். 

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. 

அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். 

அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். 

மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். 

விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்

இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. 

இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

 அருணகிரிநாதர்_அருளிய

          திருவலஞ்சுழித்_திருப்புகழ்.
       மகரகுண்டலமீதே
~ இசைவடிவம் :
    திருமதிகள் : பாம்பே சகோதரிகள். 


மகர குண்டல மீதே மோதுவ
     வருண பங்கய மோபூ வோடையில்
          மருவு செங்கழு நீரோ நீவிடு   வடிவேலோ!


மதன்வி டுங்கணை யோவா ளோசில

     கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை

          மறலி யென்பவ னோமா னோமது   நுகர்கீத


முகர வண்டின மோவான் மேலெழு

     நிலவ ருந்துபு ளோமா தேவருண்

          முதிய வெங்கடு வோதே மாவடு   வகிரோபார்


முடிவெ னுங்கட லோயா தோவென
     வுலவு கண்கொடு நேரே சூறைகொள்
          முறைய றிந்தப சாசே போல்பவ  ருறவாமோ?
நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
     தசமு கன்படை கோடா கோடிய
          நிருத ரும்பட வோரே வேவியெ   யடுபோர்செய்

நெடிய னங்கனு மானோ டேயெழு
     பதுவெ ளங்கவி சேனா சேவித
          நிருப னம்பரர் கோமான் ராகவன்  மருகோனே!


சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
          சிவச டங்கமொ டீசா னாதிகள்  சிவமோனர்

தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
     அயல்வி ளங்குசு வாமீ காமரு
          திருவலஞ்சுழி வாழ்வே தேவர்கள்   பெருமாளே!

 திருச்சிற்றம்பலம

திருநாவுக்கரசர் பதிகம்.

ஓத மார்கட லின்விட முண்டவன்

பூத நாயகன் பொற்கயி லைக்கிறை

மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்

பாத மேத்தப் பறையுநம் பாவமே.

இளைய காலமெம் மானை யடைகிலாத்

துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்

வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்

களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே..

-அநேகம் பேருக்கு தெரிந்திராத வெற்றியை தரும் திருவலஞ்சுழி அஷ்டபுஜகாளி அம்மன்

கும்பகோணம் திருவலஞ்சுழி வெள்ளை வினாயகர் கோவிலில் அஷ்டபுஜகாளி அம்பாள் சந்நிதி வடக்கு பகுதியில் உள்ளது.

சோழப்பேரரசர்கள் ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன் இந்த அஷ்டபுஜமாகாளிக்கு வாள்,மற்றும் போர் ஆயுதங்களை வைத்து பூசை நடத்தி உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் நோக்கிக் கிளம்புவார்களாம்.

இந்த பூசையின் மூலம் போரில் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.

இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் கொண்டாடிய தெய்வம் இவள்.

 "ஏகவீரி" என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. 

இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று கோயிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள்.

பாவம்!இவளின் அருமை பெருமைகள் கோயிலுக்கு வரும் யாருக்கும் தெரிவதில்லை.

எப்போது திருவலஞ்சுழி கோயிலுக்கு சென்றாலும் பூட்டியே இருக்கும் அந்த இரும்புக் கதவின் வழியேதான் இவள் முகத்தை ஏக்கமுடன் பார்க்க முடியும் .

ஏகவீரி பிடாரி. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான காளிகளுள் ஒருவராகக் கொள்ளத்தகும் இவரின் அழகை வர்ணிப்பதற்குக் கம்பரும் கபிலருமே வார்த்தையின்றி தவிப்பார்கள். 

அன்னையின் புன்சிரிப்பைக் கூறுவதா? செவியிலிருக்கும் மனிதக் குழையைக் கூறுவதா? 

அமர்ந்திருக்கும் ஒய்யாரத்தைக் கூறுவதா? 

ஆயுதமும் மணியும் ஏந்திய கரங்களைக் கூறுவதா? 

அல்லது வெறும் கையை விஸ்மயத்தில் வைத்திருக்கும் பாங்கைக் கூறுவதா? என்றெல்லாம் நாம் யோசிக்க ஆரம்பித்தால் எமது யோசனையை முடிப்பதற்குள் நீங்கள் திருவலஞ்சுழி சென்று அம்மையின் தரிசனத்தை பெற்று விடலாம்.

எனக்கு மட்டும் தான் இந்த அம்மையின் அழகை விவரிப்பதில்  பித்தா என்ற சந்தேகத்தில் நண்பர்களை அழைத்துச் சென்று காட்டிய போது அவர்களும் வாயடைத்து வியந்ததை காண முடிந்தது. 

பார்த்தவுடனேயே சோழர்காலச் சிற்பம் என்று எவரும் கண்டுகொள்ளும் வகையில் இருக்கும் இச்சிற்பத்தை மனதில் வாங்கிக் கொண்டால் எந்த ஒரு சோழர்காலச் சிற்பத்தையும் அடையாளம் கண்டு கொள்வது சுலபம் என்பது அறிஞர் வாக்கு. 

அம்மன் சன்னதிக்குள் இருள் படிந்த ஓர் அறையில் 'அஷ்ட புஜ மஹா காளி' என்று பயமுறுத்தும் பெயருடன் இத்தனை காலம் அடைந்திருந்த ஏக வீரிப் பிடாரியை அடையாளம் கண்டுகொள்ள, வலஞ்சுழியிலிருக்கும் கல்வெட்டுதான் உதவியது.

கல்வெட்டு குறிப்பிடும் திசையில் அல்லாது வேறொரு இடத்தில் அம்மை இருக்க, இவர்தான் ஏக வீரியா என்ற சந்தேகம் சற்றே எழுந்தது. 

அக்கோயிலில் பணி புரியும் ஒருவர் அம்மை ஆதியில் குடியிருந்த இடத்தைக் கூறவும் அவ்விடமும் கல்வெட்டு குறிப்பிட்ட இடமும் சரியாக பொருந்த, சந்தேக இருள் பகலவனைக் கண்ட பனி போல விலகியது.

ஏகவீரி பிடாரிக் கல்வெட்டைப் பற்றிக் கூறும்போது, இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். 

திருவலஞ்சுழிக் கோயிலின் மேற்குப்புறமுள்ள கருவறையில் இருக்கும் ஏகவீரி பிடாரிக்கு நடைபெறும் அபிஷேகங்களைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

ஏகவீரி பிடாரி சாந்திக்கு செய்யும் அர்ச்சனை என்பதைக் கோபமாக இருக்கும் காளியை அமைதிப்படுத்தச் செய்யப்படும் பூஜை எனக்கொள்ளலாம். 

ஆனால் இன்னொரு சொற்றொடர் எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதே ஏகவீரி பிடாரிக்கு 

'அவபல அஞ்சனை' என்றொரு பூஜையும் நடத்தப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

இச்சொல் இதுவரை வேறு எந்தக் கல்வெட்டிலும் காணப்படாதது மட்டுமல்ல கேட்டறியாததும் கூட. இப்பூஜையை நடத்துவதற்கு நிவந்தம் அளித்த பெண்மணி முதலாம் இராஜராஜரின் மாமியார்

இவர் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர். பெயர் குந்தணன் அமுதவல்லியார். 

ஆக, 'அவபல அஞ்சனை' என்பது தெலுங்குச் சொல்லாக இருக்கலாம் என்பது டாக்டர். கலைக்கோவன் அவர்களின் கருத்து.

இந்தியா என்னும் மாபெரும் நாட்டின் ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு இம்மாநிலத்தில் ஒரே ஒரு மாவட்டம் தஞ்சை. 

தஞ்சையில் ஒரு பகுதிதான் குடந்தை. 

குடந்தையில் ஓர் சிற்றூர்தான் திருவலஞ்சுழி. 

இச்சிற்றூரில் இருக்கும் கோயில் ஒன்றே அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரமாய் விளங்குமெனில்

நமது தேசம் முழுவதும் வெளிவரக் காத்திருக்கும் புதயல்கள்தான் எத்தனை? எத்தனை முறை கேட்டாலும் நல்ல இசை அலுப்புத் தட்டாது. 

அது போல, இதே கருத்தை எத்தனைமுறை கூறினாலும் எங்களுக்கு பிரமிப்பு குறையாது. படிக்கும் வாசகர்களுக்கும் அப்படியே என்று நம்புகிறோம்!

கும்பகோணம் செல்பவர்கள் திருவலஞ்சுழி சென்று இந்த அம்மையை காணுங்கள்.

 திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறையில் திருவலஞ்சுழி

விண்டெ லாமல ரவ்விரை
நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை
பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர்
போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி
பாடல்ப யின்றதே.

 மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

திருச்சிற்றம்பலம்

என்ன புண்ணியஞ் செய்தனை
       நெஞ்சமே யிருங்கடல் வையத்து........
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
        முழுமணித் தரளங்கள்..........
மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி
        வாணனை வாயாரப் ........
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
             வழிபடும் அதனாலே
  🙏எம்பிரான் திருஞானசம்பந்தர் நற்றமிழ் தொடர் முற்றோதுதல்🙏
🙏சோழநாடு காவிரி தென்கரையில் உள்ள திருத்தலங்கள்🙏
🙏மூன்றாம் திருமுறை🙏
158.🙏🐚திருவலஞ்சுழி🐚🙏
🙏பண் - பழம்பஞ்சுரம்🙏
🙏🔱இறைவன்:கபர்த்தீசுவரர்,
🙏🔱இறைவி:பெரிய நாயகி,

 🙏பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே.🙏.1


🙏காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே.🙏.2


🙏பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.🙏.3


🙏விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே.🙏.4


🙏கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.🙏.5


🙏தண்டொடு சூலந் தழையவேந்தித் தைய லொருபாகங்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.🙏.6


🙏கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்க
மல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே.🙏.7


 🙏வெஞ்சின வாளரக் கன்வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமோ ராறிறு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.🙏.8


🙏ஏடியல் நான்மு கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.🙏.9


🙏குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.🙏.10


🙏வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லார் அவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரும் இன்பமோர்க்கும் உருவும் உயர்வாமே.🙏.11
🌷சிவ சிவ🌷

                    🙏திருச்சிற்றம்பலம்🙏

 அலங்காரக் கம்பளம் விரித்தது போன்று மேற்கூரையின் அழகிய வண்ணமும் வரிசைத் தூண்களும்! ❤️

வடக்குத் திருச்சுற்று சடைமுடிநாதர் திருக்கோயில் திருவலஞ்சுழி

 #திருவலஞ்சுழி

#முற்காலசோழர்கள்கோயில்

     முற்கால சோழர்களால் கட்டப்பட்டக் கோயிலான திருவலஞ்சுழிநாதர் கோயிலில் உள்ள ஷேத்திரபாலருக்கான இக்கோயிலைக் கட்டியது முதலாம் இராஜராஜ சோழனின் மனைவியான தந்தி சக்தி விடங்கி அல்லது லோகமகாதேவியார் ஆகும். இதைக் கூறும் இராஜராஜ சோழனின் 25 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு இங்குள்ளது.



No comments:

Post a Comment