ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
தேவையான பொருள்கள்
பெரிய உருளைக்கிழங்கு - 2, எண்ணெய் - பொரிப்பதற்கு, மிளகாய்த்தூள்/மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு
செய்முறை
ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமான துண்டுகளாக நறுக்கி சுத்தப்படுத்தவும்.பின்னர் குளிர்ந்த தண்ணீரில் போட்டு 1 - 1 1/2 மணிநேரங்கள் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.பிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.பொரித்து எடுத்தவற்றை ஒரு பேப்பரில் போடவும். (இந்த நிலையில் இவற்றை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு ப்ரீஸரில் வைத்து சேமிக்கலாம்.)பின்னர் மீண்டும் எண்ணெய் நன்கு சூடானதும் அதனுள் பொரித்தவற்றைப் போட்டு மீண்டும் சிவக்க பொரித்து எடுக்கவும்.சூடாக இருக்கும் போதே அதில் உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும். சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார். உடனேயே சாப்பிடவும். நேரம் சென்றால் இளகிவிடும் .இதற்கு பேக் செய்ய பயன்படும் Russet Potatoes பயன்படுத்தவும்.

No comments:
Post a Comment