சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், அன்றைக்குச் செய்த பாவம் தீர்ந்து போய்விடுமா? அதற்காகத்தான் அதைச் செய்கிறார்களா?
சோ: பாவம் தீருகிறது என்பது இருக்கட்டும். பாவத்துக்கு மன்னிப்பு இருக்கிறது. வாயால், கையால், மனசால், உடம்பால் செய்கிற பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பது எல்லாம் அதில் இருக்கிறது. ஆனால், அது மட்டும்தான் சந்தியாவந்தனம் இல்லை. சந்தியாவந்தனம் என்பது ஒரு தெய்வீகமான விஷயம். அது தனக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் - அதாவது மனித குலத்துக்கே வேண்டுகிற மாதிரி உள்ளது. எனக்குக் கொடு என்று வராது. எங்களுக்குக் கொடு. ‘எங்களுக்கு’ என்று தான் அதில் வரும். அப்படித்தான் பிரார்த்தனை. மூன்று தலைமுறை யாகம் செய்யவில்லை என்றால், ஒரு குடும்பத்தில் அவனுக்கு உள்ள பிராமணத்துவம் போய்விடும். ஆனால் பிராயச்சித்தம் செய்து, மறுபடியும் அதை அடையலாம். ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையாக காயத்ரி மந்திரமே சொல்லவில்லை என்றால், அத்துடன் பிராமண பந்து முடிந்துவிடும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அது மாதிரி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவன் பிராமணன் இல்லை என்று ஆகிவிடும் அவனுக்குப் பிராயச்சித்தம் கிடையாது. மஹா பெரியவா சொல்லியிருக்கிறார். காலை, மத்தியானம், சாயந்திரம் என்றால், காலை சூரியன் உதயமாவதற்கு முன்பு, அந்த நேரத்தில் இரவும் பகலும் சேரும்போது, பகல் ஆரம்பிக்கிறபோது அந்தச் சந்தியில் செய்வது. இன்னொன்று மத்தியானம். உச்சிவேளை. உச்சியும் மாலை வேளையும் சந்திக்கிற சந்தி. அப்புறம் மாலை. அதாவது அஸ்தமனத்துக்குக் கொஞ்சம் முன்பாக. அந்த மூன்று சந்திகள். மூன்று சந்திப்புகள். அந்தந்தச் சந்திகளில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். இதை தமிழில் #இடைக்காட்டுச்சித்தர் அழகாகச் சொல்லியிருக்கிறார். காணாமல், கோணாமல், கண்டு கொடு
ஆடுகாண் போகுது பார் போகுது பார். இதன் அர்த்தம் என்னவென்றால், காணாமல் - அதாவது சூரியன் இன்னும் உதயமாகவில்லை. அந்தச் சமயம், விடியற்காலம். அது காணாமல் கோணாமல் - கண்டு கொண்டு, அஸ்தமனம் ஆகப் போகிறது அதைப் பாரு. அதைப் பார்த்துக் கொடு. என்ன கொடுக்க வேண்டும்? அர்க்யம். அர்க்யம் என்பது சந்தியாவந்தனத்தில் ரொம்ப முக்கியம். அர்க்யம் தண்ணீர் விட்டுத்தான் எல்லா மந்திரங்களும் சொ்ல்ல வேண்டும். அடுத்தது பிராணாயாமம். இது இரண்டும் ரொம்ப முக்கியம். ஆடுகாண் போகுது பார் - ‘ஆடு’ என்றால் கங்கையில் நீராடு. ‘காண்’ - சேதுவை தரிசனம் செய். அந்த இரண்டும் செய்தால், பாவம் எப்படிப் போகுதோ அப்படிப் போகுது பார்; போகுது பார்! அப்படின்றதுதான் அது! அதைத்தான் ‘காணாமல் கோணாமல் கண்டு கொடு, ஆடுகாண் போகுது பார், போகுது பார்’ என்று
இடைக் காட்டுச் சித்தர் சொல்லி இருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டிலே இதற்கு எல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்கிறது
No comments:
Post a Comment