கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் 6ம் நூற்றாண்டிலிருந்து 8 நூற்றாண்டு வரை சாளுக்கிய வம்சத்தின் தலைநகரமாக விளங்கியிருக்கிறது.
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
PC: Sanyam Bahga
பாதாமி என்கிற வாதாபி நகரின் வரலாற்றுப்பின்னணி கீழைச்சாளுக்கிய வம்சம் அல்லது ஆதிச்சாளுக்கிய வம்சம் என்று அறியப்படும் ராஜவம்சத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த பாதாமி தலைநகரமாக திகழ்ந்துள்ளது. 6 ம் நூற்றாண்டிலிருந்து 8 ம் நூற்றாண்டு வரை பெரும்பாலான ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் பரந்து விரிந்திருந்தது சாளுக்கிய சாம்ராஜ்யம். இரண்டாம் புலிகேசி மன்னரின் ஆட்சியின்போது சாளுக்கிய சாம்ராஜ்யம் உச்சத்திலிருந்தது. ஆனால் அந்த உச்சம் அவருடன் முடிந்துபோனது. இந்த நகரத்தின் அருமை பெருமைகளையும் காணவேண்டிய முக்கியமான இடங்களைப் பற்றியும் காண்போமா?
பாதாமி என்ற வாதாபி நகரின் புகழும் அவருடன் மங்கிப்போனது. மலைகளுக்கிடையே இயற்கையாய் அமைந்த ஒரு பள்ளத்தாக்குப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பாதாமி நகரம். தங்கநிற மணற்பாறைகளால் ஆன மலைகள் இந்த நகரைச்சுற்றி உயர்ந்தோங்கி நிற்கின்றன. முதல் முறை விஜயம் செய்யும் எந்த ஒரு இந்தியப்பயணியும் இத்தனை நாள் இந்த அற்புத ஸ்தலத்தைப் பார்க்காமலா நாம் இந்தியாவில் இருந்தோம் என்று நாணாமல் இருக்க முடியாது
No comments:
Post a Comment