போவோமா ஊர்கோலம்!
முதன்முதலாய் டூர் செல்லும் சந்தோசம், முதன் முதலாய் கொடைக்கானல் செல்லும் சந்தோசம் போன்ற சந்தோச பட்டியல்களை குழந்தைகள் சுமக்க ,'போவோமா ஊர்கோலம்' என்னும் பாடலை பாடிக் கொண்டே இந்த பள்ளிக் குழந்தைகளைச் சுமந்துகொண்டு கொடைக்கானல் மலையேற்றத்தில் வலைந்து வலைந்த வழியே ஏறிச் சென்று கொண்டிருந்தது அந்த சுற்றுலா வேன்.
தாங்கள் விரும்பிய பாடல்களை போடச்சொல்லி அதற்கேற்றவாறு ஆடிப்பாடி விளையாடிக்கொண்டிருந்தனர் வேனுக்குள் குழந்தைகள் .குழந்தைகளின் சந்தோசம் ஆசிரியர்களை ரசிக்க வைத்தது.
வலைந்தும் நெழிந்தும் இயற்கையோடு உரசி உரசி சென்ற வேன் வெள்ளி நீர்வீழ்ச்சியில் நின்றது. குழந்தைகள் வரிசையாக இறங்கினர். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு. அங்கே கிடைத்தசூடான வடையுடன்கொண்டு வந்த உணவை சாப்பிட்டுவிட்டு ,குரங்குகளைப் பார்த்துசத்தம்போட்டுவிளையாடினார் .குழந்தைகளோடு குரங்குகளும் விளையாடின.
சத்தம் போட்டு விளையாடும்போதும் ஒருவருடன் ஒருவர் பேசும்போதும்,வாயில் புகைவெளியே வந்தது . வாயசைவில் புகையைப் புதிதாக பார்த்த குழந்தைகள் அதை சந்தோஷமாக ரசித்து வேண்டுமென்றே புகை வரும்படி வாயை அசைத்துஅசைத்துப் பேசினர்கள் .பின்பு அங்கிருந்து பிரியாவிடை பெற்றதுவேன்.
பதப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இறந்தபின்னும் மிருகங்கள் வாழ்ந்துவரும் செண்பகனூர் அருங்காட்சியகத்தில் வேன் நின்றது. குளிர்ந்த காற்றும் உயர்ந்த மரங்களும் வந்தவர்களை வரவேற்றது.
உயிரோட்டமான மிருகங்கள் உயிருடன் இருப்பதாக நினைத்து குழந்தைகள் அலறியடித்து ஓடினார்கள்.பின்பு அவற்றைப் பற்றி ஆசிரியர்கள் விளங்கச் சொல்லிய பின் பயமின்றி குழந்தைகள் அருகே சென்னார்கள். மிருகங்களைப் போலவே மிருகங்களோடு சத்தமிட்டு மகிழ்ந்தனர் .
நேரத்தின் அருமை கருதி அடுத்த இடத்திற்கு வேன் பயணமானது.
பின்பு அங்கிருந்துவேன் நகர்ந்தது. பிள்ளைகளுக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே 'தற்கொலை பாறை' எனும் இடத்திற்கு வேன் வந்தது. அங்கே இறங்கியவுடன் தூரத்தில் இருக்கும் ஒரு பாறையை கையை காட்டி காட்டி எல்லோரும் பேசினர்.
குழந்தைகளும்பார்த்தார்கள் அப்பொழுது முகில் கூட்டங்கள் குழந்தைகளோடு கண்ணாமூச்சி விளையாடியது. சினிமா பாடல்களின் கனவுக்காட்சியாக நினைத்து தங்களை அப்படியும் இப்படியும் ஆட்டி மகிழ்ந்தார்கள். இன்னும் நிறைய இடங்கள் இருப்பதால் வேன்நகன்றது.
தொப்பியை தூக்கி பள்ளத்தில் போட உடனே அது மேலே வந்து விடும் என்று சொல்லி, செய்துகாட்டினார்கள் ஆசிரியர்கள். இந்த இடம் 'தொப்பி தூக்கிப்பாறை' என்று பெயரையும் தெரியப்படுத்தினார்கள். அங்கே கிடந்த காகிதம், சிறுசெடி போன்றவற்றை தூக்கிப் போட அதுவும் திரும்ப வருவது கண்டு உற்சாகமாகினர் குழந்தைகள்.
அங்கிருந்து குணா குகைக்குச் சென்றதுவேன்.அந்த இடத்தைப் பற்றி சொல்லி "மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது" என்று ஆசிரியர்கள் சொல்ல அப்படியே எதிராளித்தது ஆச்சரியமாகத் தெரிந்தது குழந்தைகளுக்கு. காதலைப் பற்றி தெரியவில்லை என்றாலும் அதே போல் சொல்லி மகிழ்ந்தார்கள்.
வானம் மெல்ல எட்டிப்பார்க்க ஆசைப்பட்டது.இதைப் புரிந்துகொண்டு அப்படியே ஏரிக்கு வந்துவிட்டார்கள். அங்கே படகுச் சவாரி, குதிரைச்சவாரி என விளையாடினார்கள். வெள்ளைக்காரர்களைப் பார்த்து சிரித்து ரசித்தார்கள்.
சாப்பிட்டு ரொம்ப நேரமானதால் அனைவரும் 'பார்க்' னுள் நுழைந்தார்கள். வரிசையாக அமர்ந்து சாப்பிடுகையில் ஒருவனைக் காணவில்லை.
பக்கத்து பையனிடம் கேட்டதற்கு "தெரியாது" என்று பதில் வந்தது.
மேகமும் மழையாய் வர ஆரம்பித்தது. ஆசிரியர்களும் குழந்தைகளும் காணாது போன குழந்தைக்காக சத்தமிட்டழைத்தார்கள். செடி, கொடி, மரம், மலர் என எல்லா பக்கமும் தேடினார்கள். கிடைக்கவில்லை.
வீட்டிலிருந்து ஆசிரியருக்கு ஒரு போன் வந்தது அதில் தன் பையன் என்ன பண்ணுகிறான் என நலம் விசாரிப்பதாக இருந்தது.சம்பந்தப்பட்ட பையன் அப்பாதான் போனில்.
"நல்லபடியா இருக்கான்" என சொல்லிவிட்டு பதறினார்கள் அனைவரும்.
முயற்சிகள் முடியவில்லை எனும் நிலை உருவானது. வந்த சந்தோசம் மழையில் கரைந்தது.
அப்பொழுது போலீஸில் தெரியப்படுத்த முடிவெடுத்தார்கள். ஒரு போன் அப்பொழுது வந்தது, பதற்றத்துடன் ஆசிரியர் பேசினார் "யாரென்று "
விடுபட்ட குழந்தை விளக்கமாகச் சொன்னது இருப்பிடத்தையும், வேன் பறந்தது அந்த இடத்திற்கு, ஒரு குடையின் கீழ் ஒரு சிறுமியுடன் அந்த பையன் நின்றிருந்தான்.
ஓடிச் சென்று அவனைத் தூக்கி "எப்படிடா" என்றார் ஆசிரியர்.
" உங்க போன் நம்பர் எனக்குத் தெரியும் சார்"என்றான் புன்னகைத்துக்கொண்டு...
அப்பொழுது ஆசிரியர்கள் மனதில் பாடத்தைவிட ' போன் நம்பரை 'மனப்பாடம் செய்ய வைத்தது நல்லதாகப் போய்விட்டது என எண்ணினார்கள்.
No comments:
Post a Comment