Sunday, December 5, 2021

கிறுக்குப்பய

 பூமியின்  மேலே பூக்களைப் போலே!

     மாலை  மணி ஆறு இருக்கும். ஒருவன் வருகிறான். தெருவிளக்கின் சுவிட்சைப் போடுகிறான். தெருவிளக்குகள் எரிந்தது. கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிடுகிறான்.

       அடுத்து கோயிலுக்குச் செல்கிறான், சாமி கும்பிடுகிறான், பிரசாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டுச்செல்கிறான்.

           ஒரு வீட்டிற்குச் செல்கிறான் கூரையின் மேல்வைத்துஇருந்ததட்டைஎடுத்துஉற்காருகிறான்.அவர்களும் உணவை பரிமாறினர். சாப்பிட்டுவிட்டு சென்று படுத்துவிடுகிறான்.

           அதிகாலை" பால்காரர் வந்துட்டார். பால்க்காரர் வந்துட்டார்". என்று சொல்லியே மாடு வைத்து இருப்பவர்கள் எல்லோரையும் எழுப்புகிறான்.                    விடிந்ததும் ஏதாவது ஒரு டீ கடையில் நிற்கிறான், கடைக்காரர் தரும் டீயை குடித்துவிட்டுச் செல்கிறான். சூரியன் வந்ததும் தெருவிளக்கினை அணைத்துவிட்டு, கோயிலுக்குச் செல்கிறான். ஏதாவது ஒரு உதவி அல்லது வேலையைச் செய்கிறான் பிரசாதத்தை வாங்கிச் சாப்பிடுகிறான்.

        ஏதாவது ஒரு வீட்டில் தட்டை எடுத்து உள்கார்கிறான். சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டுச் செல்கிறான்.

          தோட்டங்களுக்குச் செல்கிறான். தோட்டத்துக்காரர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் ஏதாவது ஒரு உதவி செய்கிறான்.அவர்கள் கொடுப்பதை சாப்பிடுகிறான், பின்பு துணியை துவைத்துவிட்டு குளித்துவிட்டு மாலை ஆறுமணிக்கு கடை வீதியில் வந்து தெருவிளக்கினை ஏற்றிவிடுகிறான் . யார் அவன்?" என அந்த ஊரில் மாணிக்கத்தின் வீட்டிற்குவிருந்தாளியாய் வந்த பெருமாள் என்பவர் கேட்டார்.

           பெருமாளும் சிரித்துக்கொண்டே" மாமா ஊரிற்கு வந்தீங்க நல்லா சுத்திப் பார்த்துவிட்டு எங்க ஊரைப்பற்றி பெருமையாகச் சொல்வீங்கனு பார்த்தா , நீங்க சம்பந்தமமில்லாமல சம்மந்தமில்லாததை கேட்குறீங்க." என்று வருத்தப்பட்டார்.

             அவரின் வருத்தத்தை புரிந்து" மாப்ளே. நானும் இந்த ஊரிற்கு வந்து நான்கு நாளாச்சு. இந்த ஊரின் எல்லா இடத்தையும் நல்லாவே பார்த்திட்டேன்.அருமையாக உள்ளது. விட்டுட்டு போகவே மனமில்ல." என்றார்

             "அப்படி சொல்லுவீங்களா...அவனைப் பற்றி நேரத்தை செலவழிச்சுகிட்டு "என்றார்.

               "தப்பா நெனக்காதீங்க. நான் போன எல்லா இடத்திலயும் அந்தப் பய இருந்தான் யா. ரொம்பா கஷ்ட்டமான வேலையக் கூட சுலபமா செய்யுறான்.மனசு கேக்கலீங்கதுயா. அதுனால் தான் கேட்டேன்." கொஞ்சம் சமாதானப்படுத்துவகைப் போல் பேசினார் பெருமாள்.

         அவரின் எண்ணத்தைப் புரிந்த மாணிக்கமும்" மாமா அவன் பேரு இளையராசா. நீங்க சுத்திப் பாத்த பாதி பகுதி அவனோட முன்னேர்களுடையது"

         பெருமாளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது"என்னய்யா சொல்லீறீங்க." என்றார்.

        மாணிக்கமும்பெருமாளின் ஆர்வத்திற்கு ஏற்ப" விதி யாரையும் விடாது மாமா. முன்னோர் செய்த பாவம் இந்த சின்னப்பய அனுபவிக்கிறான். ஆனா ஒன்னு மாமா. இவன் ரொம்ப சுத்தமானவன் எதுக்கு மே ஆசைப்பட மாட்டான்."

            பெருமாளும் குறுக்கிட்டு" ரொம்ப சின்னப்பயலா இருக்கான். பாவமா இருக்கே"

          " என்ன மாமா செய்யுறது அவனவன் விதி. நாங்களும் இவன் நம்பிவிட்டுவிட்டு வெளியே செல்வோம் பொருள் பாதுகாப்பாக இருக்கும். எங்களில் ஒருத்தனை நாங்க இவனை ஏத்துகிட்டோம். அவனும் மறுக்காமல் எல்லாத்தையும் பங்கேற்பான். போதுமா மாமா." என்று சொல்லி இளையராசாவை கூப்பிட்டான்.அவனும் வந்ததுமே அவனுக்குச் செலவுக்கு பணம் கொடுத்தான்.அதை வாங்கிக்கொண்டு சென்றவன். ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கடைக்குச் சென்று திண்பண்டம் வாங்கித்தந்துவிட்டுச் செல்கிறான். 

        இதைப் பார்த்த  மாமாவின் குரல் தளதளத்தது. "இருந்தாலும் பாவம் .அவன் கிறுக்கனாயா" என்றார்.

       "இல்லை மாமா .கொஞ்சம் அதிகமாகவே அறிவு இருப்பதாக நெனப்பு."என்று சொல்லி அவனை கூப்பிட்டான். மீண்டும் இளையராசா வந்தான்.

           "ஏம்பா உனக்கு கொடுத்த காசு உன் செலவுக்கு புரியுதா என்றார் பெருமாள்.

             "ஐயா எனக்கு எதுவுமே வேணாம். உயிர் இருக்கும்வரை யாருக்காவது உதவியா இருப்போம். எதையுமே எதிர்பார்க்கக் கூடாது.அப்படித்தான் நினைத்துத்தான் இந்த உலகில் எல்லோரையும் ஆண்டவன் படைச்சாரு.

'பூமியின் மேலே பூக்களைப் போலே 'இருக்கும்வரை மலர்களைப்போல் மலர்ந்த முகத்தைக் காட்டுவோம்."' என்றான்.

             அவனின் அதிமேதாவித்தனமான பேச்சு கோபத்தைக் கொடுத்தாலும், உண்மையைச் சொன்னது.

            '  ஒரு கிறுக்குப்பய எந்த அளவுக்கு தெளிவானவனைப்போல பேசுறான் '

என மனதில் நினைத்தான் மாணிக்கம்

No comments:

Post a Comment