விஜய நரசிம்மன்
🌺🌹🌺🌹🌹🌺🌺🌹
முக ராசியும், முகரக்கட்டையும்: .
மிகப் பெரிய பணக்காரர் அவர் . ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்து முடிந்து, வெளியேறும் போது, ஒரு நாய் குட்டி, வெளியே போகும் கதவு பக்கத்தில் கத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அதன் மேல் பரிதாபப்பட்டு, அதைத் தூக்கிக் கொண்டு, கதவைத் திறந்து , வெளியில் வந்து, அந்த நாய்க்குட்டியை கீழே விடும் போது, அந்த ஆட்டோமேடிக் கதவு மூடிக் கொள்கிறது.
அரை டிராயர், மேலே சட்டை இல்லை. கருத்த உடம்பு. மிகவும் கருத்த முகம். பக்கத்தில் உள்ள VIP Entrance வழியாக உள்ளே செல்ல எத்தனிக்கிறார். இரண்டு காவலாளிகள் அவரை தடுத்து நிறுத்தி, "இது VIP Entrance, செல்ல அனுமதியில்லை" என்கிறார்கள். இவர் "நானும் VIP தான் " என்றார். "அடப் பாருடா, இந்த மூஞ்சில்லாம் VIP ன்னு சொல்ல எவ்வளவு தெகிரியம் வேணும். போடா , அப்பால " என்று ஒரு காவலாளிச் சொல்லி அவரை விரட்டுகிறான்.
இது, நான், சமீபத்தில் SONY live ல் வந்த ஒரு தமிழ் serial ன் ஆரம்ப காட்சி.(Tryst with Destiny).
முக ராசி என்று சொல்வார்கள் . முக ராசி என்றால், அது பாராட்டும் சொல். " முகரக்கட்டை " என்று சொன்னால்?
மேலே, சொல்லப்பட்டவர் " முகரக்கட்டை " என்ற ரகத்தைச் சேர்ந்தவர். நானும் இந்த இரண்டாவது ரகம்தான். அதாவது, "மூஞ்சியும்முகரக்கட்டையும் ". எப்படி என்று கேட்கிறீர்களா?
உதாரணத்திற்கு:
பத்து வருடங்களுக்கு முன் திடீரென்று ஒரு நாள், என் மனைவியின் பிறந்த நாளுக்கு, ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்து, ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது. உடனே, அடையார் நல்லி கடைக்கு , மதியம் 3 மணிக்கு விழைந்தேன். கடையில் நான் நுழையும் போது, கடை ஊழியர்கள் ஐந்தாறு பேர்கள், மற்றும் மெழுகு தடவிய பளபளப்பான காஷ்மீர் ஆப்பில் கலரில், சர்வபூஷிதையாக, நகை அலங்காரத்துடன் , கிளிப் பச்சை கலர் பட்டுப்புடவையை நேர்த்தியாக தாங்கிக் கொண்டிருக்கும் பெருத்த சரீரத்தில் நாற்பது வயது பெண்மணி. அந்தப் பெண்மணியின் கட்டளைக்கு, இரண்டு கடை ஊழியர்கள் அங்கிருந்த பட்டுப்புடவைகளில் பாதியை எடுத்து கவுண்டரில் பரப்பிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மற்ற ஊழியர்கள் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான், ஆண்களுக்குகே கிடைக்கும் ஐந்தே கலர்களில், ஒரு கலரான கருப்பு பேண்ட், சாதாரண ஷர்ட், கருப்பான தேகம்.
ஒரு வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர், வேண்டா வெறுப்பாக என்னைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார். " பட்டுப்புடவை" என்றேன். " பட்டுப்புடவை வாங்க வந்த முகரக்கட்டையைப் பாரு" என்ற பார்வை ஒன்றை பார்த்து விட்டு, இரண்டு புடவைகளை எடுத்துப் போட்டார். "விலை என்ன?" என்று கேட்டேன். "2000 ரூ, இதுக்கு கீழ கிடைக்காது" என்று சொல்லி, என்னை அனுப்புவதில் குறியாக இருந்தார். பிறகு என்ன? ஒரு வழியாக அவரிடம் போராடி, பத்து நிமிடத்தில், 15000 ரூபாய் மதிப்புள்ள புடவையைத் தேர்ந்தெடுத்தேன். நான் கவுண்டரில் பணம் செலுத்தும் வரை அவருக்கு நம்பிக்கை வரவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது. பணம் செலுத்தியவுடன், "ஸார், புடவை பிடிக்கலைனா, பணம் வாபஸ் கிடையாது. புடவை மாத்திக்கலாம். நீங்க , எங்க TNagar main ல கூட மாத்திக்கலாம், பில்லு பத்திரம்" என்றார்.
அந்தப் பளிச் பெண்மணி, ஒரு 200 புடவைகளைப் புரட்டிப் போட்டுவிட்டு, "வெரைட்டியே இல்லையே, நான்TNagar ல போய் பார்க்கிறேன்" என்று சொல்லி கிளம்பி விட்டார்.
இதைப் போல், ஒரு முறை இல்லை. இப்படிப்பட்ட உதாசீனத்தைப் பல முறை சந்தித்திருக்கிறேன் என் வாழ்க்கையில். என்னைப் பார்த்தவுடன், என்னை ஒரு பேங்க், அதிகாரியாக, மேனேஜராக, உயர் அதிகாரியாக , நம்ப மறுத்த பல வாடிக்கையாளர்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆட்டோகாரர்களில் ஆரம்பித்து, ஆடம்பர ஹோட்டல் மேனேஜர்கள் வரை, என்னை இந்தக் கண் நோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்.
இளமைப் பருவத்தில், இது ஒரு உறுத்தலாக இருந்தது. ஆனால், சீக்கிரத்திலேயே தெளிந்துவிட்டேன்.
"Who are you to judge me? என்னைக் கணிப்பதற்கு நீ யார்? உனக்கு என்ன தகுதியிருக்கிறது என்னை எடை போட? "
உன் உதாசீனத்தால் என்னுடைய மகிழ்ச்சியை, வளர்ச்சியை குலைக்க விடமாட்டேன் என்று முடிவெடுத்து, "நான் நானாகவே இருப்பேன்" என்று உறுதி பூண்டு, நடக்க ஆரம்பித்தேன்.
இப்பொழுதெல்லாம், இப்படிப்பட்ட உதாசீனத்தை எதிர்கொள்ளும் போது, அது என்னை பாதிப்பதில்லை. மாறாக, அவர்களுடைய அறியாமையை நினைத்து, மனதிற்குள் சிரித்துக் கொள்வேன். அவ்வளவே.
உங்களில் சில பலருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அப்பொழுது, உங்கள் reaction என்ன என்று தெரிந்து கொள்ளலாமா ?
N.Vijayanarasimhan
படித்ததில் பிடித்தது :
அமெரிக்காவில், கார் விற்பனையாளர்கள் training கில், ஒரு trainer சொன்னது: "சாயம் போன t-shirt, ஜீன்ஸ் பேண்ட், Brown நிறத்தில் மெல்லிய உடம்புடன், கார் வாங்க ஒருவர் வந்தால், "இவனெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்" என்று எண்ணி, அலட்சியமாக இருக்கக் கூடாது. அவருக்கு, இருக்கிறதிலேயே விலை அதிகம் உள்ள காரை முதலில் காண்பிக்க வேண்டும். ஏனென்றால், அவர் Google CEO சுந்தர் பிச்சையாகக் கூட இருக்கக் கூடும்."
No comments:
Post a Comment