கனியுமோகாதல்_48
ஸ்ரீதரிடம் பேசிவிட்டு பிக்ஷேஸ்வரன் சாரை சந்திக்கிறாள் மைதிலி. அவள் ஸ்ரீதரைப் பற்றி பேச்சை துவக்குமுன் அவரே ஆரம்பிக்கிறார்.
'என்ன மைதிலி, ஸ்ரீதர் கிட்ட பேசினியா? என்ன சொன்னான்? பிகு பண்ணியிருப்பானே?'
'சார், நீங்க நான் சொல்றத அமைதியா கேட்கணும் சித்த நாழிக்கு.'
'என்ன பீடிகை பலமா இருக்கே?'
உதட்டளவில் சிரிப்பை அவரிடம் காண்பித்து விட்டு ஸ்ரீதரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அவரிடம் விவரிக்கிறாள். அவள் அவனைப் பார்த்துப் பேசியதையும் கூறுகிறாள்.
'பாவமா தான் இருக்கு. இருந்தாலும் நீ அவனுக்காக இவ்வளவு மெனக்கட வேண்டாம்னு தோணறது. ஒண்ணா படிச்சேள் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கேள். எல்லாம் சரிதான். அதுக்காக ஒருத்தன திருத்தி கொண்டு வரணும்னு த்வஜம் கட்டறது எனக்கு என்னவோ ஸ்லாக்யமா படல. அவன் என்ன கொழந்தையா? உங்களுக்குள்ள பியாண்ட் ஃப்ரெண்ட்ஷிப்புன்னாலும் ஏதோ ஏத்துக்கலாம்.'
'இல்ல சார். ரொம்ப நல்லவன் சார். அவன் உங்க ப்ராடக்ட். அவன் தோக்கக் கூடாது சார். இன்னிக்கு சாயந்திரம் வருவான் உங்கள பார்க்க. அவன ஜஸ்ட் புகழந்து பேசுங்க. உங்களோட மோட்டிவேஷனும் இந்த சமயத்துல நான் எடுக்கற முயற்சிக்கு கை கொடுக்கும்னு நம்பறேன்.'
'நான் உனக்கு அடிக்கடி சொல்றது தான். ஒருத்தருக்கு கைய கொடுத்து தூக்கி விடறது தப்பில்லை. ஆனா நீ முழங்கை அளவு உன் கைய கொடுத்து உதவி செய்யறதுங்கறது யோசிச்சு செய்ய வேண்டிய விஷயம். எனிவே ஆத்து பொண்ணாட்டம் பழகிட்ட நம்மாத்துல. கேட்டு வைக்கறேன் நீ சொல்றத.'
'நமக்கும் இப்ப நீங்க இருக்கற சூழ்நிலைல நல்ல அட்வகேட் இருந்தா நல்லது தான?'
'மைதிலி, என்னோட சூழ்நிலைய பத்தி நீதான் கவலப் பட்டுண்டிருக்க. நீயும் மத்த கொழந்தைகளும் ஒருத்தொருக்கொருத்தர் ஜோரா ஆஃபீஸ நடத்தல? அவன நான் அக்ஸப்ட் பண்றதே விடாம நீ சொல்றதாலத்தான். இப்ப என்ன, அவன் இன்னிக்கு என்ன பார்க்க வரும்போது பிரமாதமா வரவேக்கறேன். சரியா? ஒண்ணும் கவலப் படாத. ஜமாச்சுடறேன்.'
அவர் இப்படி பேசியது மைதிலிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அவர் ஸ்ரீதரை மனதாற கூப்பிடவில்லை என்று தெரிந்தால் எவ்வளவு கஷ்டப் படுவான்?
'சார், நீங்களே அவன இங்க திரும்ப கூப்படறமாதிரி இருக்கட்டும். தப்பு செஞ்ச கொழந்தைகள மன்னிச்சு டீச்சர் மேற்கொண்டு பாடம் சொல்லித் தரதில்லையா?'
'ஏதேது. விட்டா எனக்கு டீச்சராவே ஆயிடுவ போல இருக்கே. கவலப் படாத. நான் உன் ஃப்ரெண்ட நீ சொன்னபடியே வெல்கம் பண்றேன். எப்படியோ உனக்கு நம்பிக்கை இருக்கோண்ணோ?'
'த்தேங்க்ஸ் ஸார். உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.'
'அம்மாடி, இப்பத்தான் சந்தர் ஐஸ் ஒத்தடம் கொடுத்துட்டு போறான்.'
சிரிக்கிறார்கள் இருவரும்.
'அப்புறம் மைதிலி. நான் இன்னும் பத்து பதினைந்து நாளுல சிங்கப்பூர் கிளம்பிடுவேன். அதுக்குள்ள ஒரு சின்ன ஆசை எனக்கு. எப்படியாவது சந்தர் கிட்ட பேசி ஒரே ஒரு நாள் என்ன கோர்ட்டுக்கு அழச்சிண்டு போகணும். நீங்க எல்லாருமே கூட வரணும். அட்லீஸ்ட் க்ரௌண்ட் ஃப்ளோர்ல உள்ள கோர்ட்டுகள கண்ணார ஒருதடவ பார்த்துட்டு ஃப்ளைட் ஏறிடறேன்.'
'அதுக்கு என்ன சார். சந்தர நான் கன்வின்ஸ் பண்றேன். முடிஞ்சா நம்ம கேஸ்கள ஏதாவது ஒண்ண எடுத்துண்டு ரெண்டு வார்த்தை கோர்ட்டுலேயே ஜட்ஜ் முன்னாடி பேசுங்கோளேன். நாங்களும் சந்தோஷப் படுவோம்.'
'அப்படியா சொல்ற? அது மாத்திரம் நடந்துடுத்துன்னா ரொம்ப சந்தோஷப் படுவேன் மைதிலி.'
'சரி சார். நான் வரேன். ஸ்ரீதர் வந்தோண்ண அழச்சிண்டு வரேன்.'
ஆஃபீஸ் திரும்பி தன் இருக்கையில் அமர்ந்தவுடன் ஸ்ரீதர் வந்திருப்பதாக நடராஜ் கூறுகிறான்.
'வா ஸ்ரீ. இப்பத்தான் சார பார்த்துட்டு வரேன். நீ வருவேன்னு சொன்னேன். ரொம்ப சந்தோஷப் பட்டுண்டார். முதல்ல அவர பார்த்துட்டு வந்துடுவோம்.'
ஒன்றும் பேசாமல் அவளைத் தொடர்கிறான்.
'என்னடா ஸ்ரீதர். எப்படி இருக்கே'
'அது இருக்கட்டும் சார். நீங்க எப்படி இருக்கேள். இப்போ தேவலாமா?'
'எல்லாரும் வந்து பார்த்துட்டு போனா. ஆனா நீ வரலியேன்னு மைதிலிகிட்ட கேட்டேன். அப்பத்தான் உங்க அப்பாக்கும் உடம்பு சரியில்லைனு சொன்னா மைதிலி.'
சொல்லிவிட்டு மைதிலியைப் பார்த்து அவனுக்கு புரியாத அளவுக்கு சிரிக்கிறார். 'அவனோட டெலிகஸிக்கு இந்த பொய் சப்போர்ட் போதுமா?' அவருடைய அந்த சிரிப்பின் இந்த அர்த்தம் புரியாதவளா மைதிலி.
'அப்பாவுக்கு பரவாயில்லை இப்போ. முதல்ல உங்களுக்கு திடீர்னு என்ன ஆச்சு சார்?'
சுருக்கமாக தன் உடல்நிலை பற்றி கூறிவிட்டு தொடர்கிறார்.
'ஸ்ரீதர், நான் சிங்கப்பூர் போய் ஃபர்தர் ட்ரீட்மெண்ட் எடுக்கப் போறதால மைதிலிகிட்ட ஆஃபீஸ பார்த்துக்க சொன்னேன். நீ விருப்ப பட்டா உன்னையும் சேர்த்துக்கலாமான்னு கேட்டேன். அவளும் இந்த ப்ரொபோஸல் நன்னா இருக்கும்னு சொன்னா. உன்னோட விருப்பத்தையும் சொன்னா மேற்கொண்டு பேசலாம்.'
'நான் சொல்றதுக்கு என்ன இருக்கு சார். நானும் தனியா போய் ஒண்ணும் பெருசா சாதிக்கல. நீங்க நன்னா குணமாகி வர்ர வரைக்கும் நோ ப்ராப்ளம் சார். இண்டீட், இட் இஸ் மை ப்ளெஷர் டூ.'
'வெரி குட். மைதிலி, ஸ்ரீதர் எல்லா காப்பி ரைட் கேஸ்கள இண்டிபெண்டெண்டாவே கவனிச்சுக்கட்டும். ஆனா, ஸ்ரீதர் தென் அண்ட் தேர் மைதிலியையும் சேர்த்துண்டு டிஸ்கஸ் பண்ணி டாக்குமெண்ட்ஸ் தயார் பண்ணனும் என்ன? நீ இருந்தவரைக்கும் காப்பிரைட் கேஸ்கள உன்னோட மாத்திரம் சேர்ந்து பார்த்துட்டேன். அதனால அவளுக்கு சரியான ட்ரெயினிங் கிடைக்காம போயிடுத்து.'
'சரி சார். நீங்க சொல்ற படியே கேட்கறேன்.'
'அப்புறம் மைதிலி. நீதான் ஆஃபீஸ் சமாச்சாரங்கள பார்த்துக்கணும் ஏற்கனவே தீர்மானிச்ச மாதிரி.'
'சரி சார். நாங்க நல்ல டீமா இருந்து பார்த்துக்கறோம் சார்.'
'டீமா இருந்தாதான் எல்லாம் நல்ல படியா போகும். பட், நீதான் டீம் லீடர். அதுல மாத்தம் இல்ல. அப்புறம் ஸ்ரீதர், நான் நீ ஆஃபீஸ் திறக்கறச்சே கொடுத்த அந்த பத்து கேஸ்கள நீயே பார்த்துக்கலாம். நான் கொடுத்தது கொடுத்ததாவே இருக்கட்டும், என்ன?'
'த்தேங்க்ஸ் சார்'.
'ஸ்ரீதர் நீ நல்ல இண்டெலிஜெண்ட். உன்னால நிறைய சாதிக்க முடியும் இந்த ப்ரொஃபஷன்ல. நான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வந்தோண்ண உன்ன ரிலீவ் பண்றேன். அதுவரைக்கும் பார்த்துக்கோ. நீ கிளம்பு. நான் மைதிலிகிட்ட தனியா ரெண்டு வார்த்தை பேசணும்.'
மைதிலிக்கு சற்று நெருடல்தான் அவர் இப்படி பேசி ஸ்ரீதரை அனுப்புவார் என்று.
'மைதிலி, நீ எதிர்பார்த்த அவனுக்கு மோடிவேஷன் கொடுத்திருக்கேன்னு நெனைக்கிறேன். எனக்கு இதுல முழு உடன்பாடு இல்ல. அன்னிக்கே சொன்னதுதான். அதனாலதான் எதுக்கும் இருக்கட்டும்னு சொன்னேன், நான் ட்ரீட்மெண்ட் முடிச்சிட்டு வர வரைக்கும் இப்படி போகட்டும்னு.'
'உங்களுக்கு ஏன் சார் ஸ்ரீதர் மேல நம்பிக்கை வர மாட்டேங்கறது? அதான் எனக்கு புரியல.'
'எல்லா விஷயங்களையும் சொல்ல முடியாது உன் கிட்ட. ஏன்னு கேட்டா, அனுமானம்னு மாத்திரம்தான்னு சொல்ல முடியும். ஜஸ்ட் கீப் டூயிங் வாட் ஐ ஸே.'
'என்னவோ தெரியல சார். காலேஜ் டேஸ்லேந்தே ஸ்ரீதர் நன்னா வரணும் வரணும்னே எனக்கு தோணிண்டே இருக்கும். அவன் பழகறது பேசறது பொம்மனாட்டிகள் கிட்ட அவன் காட்டற டீஸென்ஸி...'
'ஏய் ஏய் நிறுத்து நிறுத்து. அடுக்கிண்டியே போறியே. ஒன்லி ஃப்ரெண்ட்ஷிப் தானே?'
அதற்கு பதில் சொல்லாமல் சிரிக்கிறாள்.
'மைதிலி, உன் கிட்டேயும் அசாத்ய திறமை இருக்கு. என்னவோ நான் எதிர்பார்க்கற அளவு அது எக்ஸ்போஸ் ஆக மாட்டேங்கறது உன் கிட்டேந்து. தேவையில்லாம எதை எதையோ மனசுல போட்டுண்டு கொழப்பிக்காம ஜஸ்ட் ஃபோகஸ் யுவர் டெடிகேஷன் இன் தி ப்ரொஃபஷன்.'
'சரி சார். ஐ ஷல்.'
'அப்புறம் மைதிலி. என்னோட டிஸ்கஷன்ஸ் நீ மட்டும் பண்ணு. நீ என்னோட இன்ஸ்ட்ரக்ஷன்கள அவா கிட்ட சொல்லி கேரி அவுட் பண்ணு, என்ன? காரணமாத்தான் சொல்றேன். நான் திரும்பவும் ச்சார்ஜ் எடுத்துக்கற வரைக்கும் நீ மட்டும்தான் என் கிட்ட வந்து கேஸ்கள வெச்சு டிஸ்கஸ் பண்ணனும். ஐ ஆம் வெரி பர்ட்டிகுலர் இன் தட்.'
'சரி சார். நான் வரேன். நீங்க உடம்ப பார்த்துக்கோங்கோ.'
சொல்லிவிட்டு ஆஃபீஸ் வந்து தன் இருக்கையில் உட்காருகிறாள்.
'மே ஐ கம் இன் மேடம்?' இப்படி கேட்டுவிட்டு நுழைந்தவன் ஸ்ரீதர்.
அப்படி அவன் கேட்டதை அவள் ரசிக்கவில்லை. இருப்பினும் விளையாட்டாக கேட்டிருப்பானோ என்ற ஆறுதலும் கிடைத்தது.
'வா ஸ்ரீ. என்ன புதுசா மேடம் அது இதுன்னு. நான் எப்போதும் ஒரே மாதிரிதான்.'
'என் மைய நான் கிண்டல் பண்ணாம வேற யார் பண்ணுவாளாம்?'
'ஐயோ போதுமே. லெட் அஸ் கெட் இண்ட்டு பிஸினெஸ் நௌ. ஜெயஸ்ரீ இப்ப வந்துடுவா. அவ கிட்ட சொல்லி காப்பிரைட் கேஸ் கட்டுகள தனியா பிரிச்சு வாங்கிக்கோ. மோஸ்ட்லி, நீ முன்னாடி இருந்தபோது பார்த்துண்டிருந்த கேஸ்கள்தான். ஜஸ்ட் அப்டேட் பண்ணிக்கோ, போதும்.'
'சரிங்க மேடம்.'
'பார்த்தியா.. திரும்பவும் மேடம். ஐ டோண்ட் லைக் திஸ் ஸ்ரீ.'
சிரித்துக் கொண்டே அறையை விட்டு செல்கிறான்.
'ஒருவேளை அவனை அனுப்பிட்டு என்னோட சார் பேசினது ஸ்ரீக்கு பிடிக்கலையோ? அவனோட காம்ப்ளெக்ஸ் வேற டைரக்ஷன்ல போறதா?'
அவள் மனதில் இந்த எண்ணம் வந்து போயிருந்தால் வியப்பு இருக்கிறதா என்ன? குருநாதரின் அனுமானம் இவளுக்கு இப்படி ஒரு எண்ணத்தையும் விதைத்திருக்கலாமே!
தொடரும்....
No comments:
Post a Comment