கனியுமோகாதல்_49
ஸ்ரீதர் ஏதோ மைதிலி சொன்னதை ஏற்றுக் கொண்டு திரும்பவும் பிக்ஷேஸ்வரன் சார் அலுவலகத்தில் சேர்ந்தானே தவிர அவனுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை.
தனக்கு தனித்துவம் இல்லாத ஒரு இடத்தில் இருப்பதாகவே நினைத்தான். அவள் பிக்ஷேஸ்வரன் சார் அறையில் இருந்து கொண்டு இவனை அழைப்பதைக் கூட விருப்பமின்றியே ஏற்று நடந்தான்.
முன்பெல்லாம் பிக்ஷேஸ்வரன் சார் எதெற்கெடுத்தாலும் 'ஸ்ரீதர் ஸ்ரீதர்..' என்று கூப்பிட்டிக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் இதே ஆஃபீஸில் இருந்த ப்ராமினென்ஸ் தற்போது இல்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்த்து.
'மை, நம்ம கிட்ட இருக்கற கேஸ்கள்ல கிட்டத்தட்ட 75% காப்பிரைட் கேஸஸ். உனக்கும் தெரியும்னு நெனைக்கிறேன். ஒரே நாளுல நாலஞ்சு கேஸ்கள் ஹியரிங்குக்கு வரலாம். அதனால எனக்கு அஸிஸ்ட் பண்ண ஒருத்தர கொடுத்தா நன்னா இருக்கும்.'
'என்ன ஸ்ரீ. சார் இருக்கும்போது தனியாத்தான பாத்துண்டிருந்த. இன் ஃபேக்ட் வேற கேஸ்களையும் சார் சொன்னா சேர்த்துப் பார்ப்பியே. இப்ப என்ன புதுசா இதெல்லாம். உனக்கு கஷ்டமா இருக்கற நாளுல டிஸ்கஸ் பண்ணி யாரையாவது அஸிஸ்ட் பண்ண கேட்டு வாங்கிக்கோ.'
'இல்ல மை. காப்பிரைட் கேஸ்கள் பொதுவா சீக்கிரம் டிஸ்பர்ஸ் ஆயிடும். அப்பெல்லாம் கூட சாரும் நானும் சேர்ந்துதான் எடுத்துப்போம்.'
'சரி. யாரை எடுத்துக்கற.'
'ஹூ எவர். ஐ டோண்ட் மைண்ட்.'
'சரி, ஜெயஸ்ரீ கிட்ட பேசிட்டு வரேன். பிரபாகர் ப்ராபர்டி கேஸ்களையும், வழுதி ட்ரிப்யூனல் கேஸ்களையும் பார்க்கறதால அவாள ஸ்பேர் பண்ண முடியாது. ஜெயஸ்ரீ சரின்னாலும் ரெண்டு பேரும் ஃபேமிலி கேஸ்களையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். இஸ் தட் ஓகே? புது ஜூனியர்ஸ்கள டேட்ஸ் வாங்கறதுக்கும் டாகுமெண்ட்ஸ் ப்ரிப்பேர் பண்றதுக்கும் தான யூஸ் பண்ண முடியும்?'
'சரி, பேசிட்டு சொல்லு.'
அவன் போன பிறகு ஜெயஸ்ரீயை கூப்பிட்டு கேட்கிறாள்.
'உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா, நான் ஸ்ரீதர் சாருக்கு ஹெல்ப் பண்றேன்.'
'எனக்கு என்னடி அப்ஜக்ஷன் இருக்கப் போறது? அவன் குணத்தப் பத்தி தான் நாம ரெண்டு பேரும் நிறைய பேசியிருக்கோமே. சமயத்துல முசுடு. அதையெல்லாம் நீ பெரிசு படுத்தாம இருக்கணும். அதனாலதான் உன்ன தனியா கூப்பிட்டு பேசறேன்.'
'ஐ திங்க் ஐ வில் மேனேஜ்.'
'நீ நெனைக்கற மாதிரி அவ்வளவு ஈஸியில்ல. யோசிச்சு கூட சொல்லு.'
'இல்ல மைதிலி. உன் கிட்ட தான் ஸ்ரீதர் சாரோட கோபம் எல்லாம் செல்லும். நாட் வித் மீ. ஐ வில் ஹேண்டில் ஹிம்.'
'எப்படியோ பின்னாடி பிரச்சனை வராம பார்த்துக்கணும் என்ன? சரி, நீ போய் ஸ்ரீதர அனுப்பு.'
வருகிறான் உள்ளே.
'ஸ்ரீ, ஜெய் சரிங்கறாள். ஓகே தானே?'
'மை, நீயும் நானும் சேர்ந்து பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனா நீதான் இங்க பெரிய ஆளாச்சே. எனிவே, மை இல்லைனா ஜெய்.'
'இல்ல ஸ்ரீ. க்ளையண்ட்ஸ்களோட கோ-ஆர்டினேஷன், சாரோட டிஸ்கஷன், டாகுமெண்ட்ஸ் வெரிஃபிகேஷன்ஸ்னு ஆயிரத்தெட்டு இருக்கே. உனக்கு தெரியாததா?'
'ஆமாம்.. ஆமாம். இன்சார்ஜ்னு சும்மாவா?'
கிண்டல் தொனியில் அவன் சொன்னதாகவே உணர்ந்தாள். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்முறுவலோடு அவனை நோக்கி ஒரு பார்வை அவளிடத்திலிருந்து.
'இந்த ஏற்பாட்டை சார் கிட்ட சொல்லிடறேன் ஸ்ரீ இன்னிக்கே. நாளைலேந்து நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணலாம்.'
'இது என்ன ஜோக் மை? நீ சொல்லி சார் ஓகே பண்ணனுமா? சரி, நான் யாரு இதுல தலையிட?'
இப்படியெல்லாம் அவன் பேச பேச அவளுக்கு முள் தைப்பதைப் போல இருந்தது. இருந்தாலும் அவன் குணம் தான் தெரியுமே.
'ஒரு வேளை பதவின்னு வரும்போது இவன் பேசறதெல்லாம் தப்பா தெரியறதா?'
மனதை ஏதாவது மாற்றாக யோசித்து ஆறுதல் படுத்தித்தானே ஆக வேண்டியிருக்கு?
'ஆத்துக்குள்ள தான ஆஃபீஸ். சாரைப் பார்த்துட்டு வருவோம்.'
பிக்ஷேஸ்வரன் சாரைப் பார்க்கிறாள். பேசுகிறாள்.
'நீயே அவன அழச்சிண்டு வந்ததால அவன் கிட்ட அடிச்சு பேச முடியலையாக்கும்? பரவாயில்ல. அவா ரெண்டு பேரும் சேர்ந்தே பார்க்கட்டும் மைதிலி. எனக்கு இதுல ஒண்ணும் இல்ல. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தானே?'
'அது என்ன கொஞ்ச நாள்னு திடீர்னு அபசகுனமா பேசறேள்? இப்படியெல்லாம் பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிட்டேன்.'
'மைதிலி, நீ நெனைக்கற அர்த்தத்துல சொல்லல நான். ட்ரீட்மெண்ட் முடிஞ்சு கொஞ்ச நாள்ல தான் வந்துடப் போறேனே. அதச் சொன்னேன்.'
சட்டென்று மைதிலியின் கண்கள் குளமாகி விட்டதை கவனித்தார்.
'ஏய் என்ன இது? இவ்வளவு ஸென்ஸிடிவாவும் ஸென்டிமெண்டாவும் இருக்க கூடாது நீ. நமக்கே நம்ம க்ளையண்ட் பொய் சொல்றான்னு தெரிஞ்சும் அவன் சத்யவான்னு கோர்டுல நாம வாதாடல? மனசுல அவனோட பொய்ய போட்டுண்டா நம்மளால சரியா அந்த கேஸுக்காக வாதாட முடியாது. நான் இருக்கேனோ இல்லையோ, அப்ப சொன்னதுதான். நீ ஒரு நல்ல ஜட்ஜா வருவே.'
'வேண்டாம் சார் இந்த டாபிக். இதோட விட்டுடலாம். நீங்க சிங்கப்பூர் போற டேட் ஃபைனலைஸ் ஆயிடுத்தா?'
'அத ஏன் கேட்கற. இன்னும் ஒருவாரம் தள்ளிப் போயிடுத்து. அந்த சிங்கப்பூர் டாக்டர் யூ.எஸ். போயிருக்கானாம். அவன் சிங்கப்பூர் வந்தத கேட்டு தெரிஞ்சுண்டுதான் டிக்கெட் போடணுங்கறான் சந்தர்'
'அதுக்குள்ள உங்களோட கோர்ட்ட சுத்திப் பார்க்கற விருப்பத்துக்கு ஏதாவது செய்யறேன் சார்.'
'பரவாயில்லையே. நான் சொன்னத ஸீரியஸா எடுத்துண்டிருக்கியே? என்னால நடக்க முடியாது பார்த்துக்கோ. வீல் ச்சேர் ஒண்ணு ரெடி பண்ணனும்.'
'பண்ணிட்டா போச்சு சார். நம்ம க்ளையண்ட் டாக்டர் சச்சிதானந்தன் கிட்ட சொன்னா, அவரே ஏதாவது ஏற்பாடு பண்ணி கொடுப்பார். அதெல்லாம்
ஜமாய்ச்சுடலாம் சார்.'
'அப்படிப் போடு. ராட்சசின்னு உன்ன அடிக்கடி கூப்படறதுல தப்பே இல்ல.'
அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் புன்னகையும் அந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
'நான் உனக்கு ஒரு கோட் கொடுத்தேனே. யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டியோ?'
'இல்ல சார். இன்னும் இல்ல.'
'என்ன அன்னிக்கு வீல் ச்சேர்ல தள்ளிண்டு வரும்போது நீ அந்த கோட்ட போட்டுண்டு வா. உன்னால என் வெயிட்டோட வீல் ச்சேர தள்ள முடியாது. அந்த படவா ஸ்ரீதரையும் கூப்டுக்கோ.'
பிக்ஷேஸ்வரன் சார் இவ்வளவு எமோஷனல் அட்டேச்மெண்ட் அந்த நாளைக்கு கொடுப்பது ஆச்சர்யமாக இருந்த்து அவளுக்கு.
'ஐ மஸ்ட் டூ திஸ் ஃபார் ஹிம்.'
அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வரப்போகும் அந்த நாளைய கனவில் மைதிலியும் இருக்கிறாள் என்பது அவள் புன்னகையும் காட்டிக் கொடுத்தது.
தொடரும்....
No comments:
Post a Comment