Saturday, December 4, 2021

கனியுமோகாதல்_46

கனியுமோகாதல்_46

ஸ்ரீதர் மற்றும் மைதிலி சம்பாஷணைகள் தொடர்கின்றன.

'என்ன ஸ்ரீ.  மேற்கொண்டு பேசலாமா?  நான் உன்ன ஏதோ ஹர்ட் பண்ணனும்னோ டிஸப்பாயிண்ட் பண்ணனும்னோ கோபமா பேசறேன்னு நெனைக்காத.'

'நான் அப்படி சொன்னேனா?'

'சொல்லல.  ஆனா யுவர் ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன்ஸ் ஸ்பீக்.  எவ்வளவோ வருஷம் நாம பழகறோம் பேசறோம்.  ஆனா இன்னிக்கு உன்னோட பேச்சுலேயும் முகபாவத்துல வித்தியாசம் கண்கூடா தெரியறது.  நம் மனசுல எவ்வளவு கோபங்களோ வருத்தங்களோ இருந்தாலும் அது எல்லாமே கழுத்துக்கு கீழதான் இருக்கணும் ஸ்ரீ.  உன்னோட நிலைமை புரியறது எனக்கு.  நன்னாவே புரியறது.  நான் ஒண்ணும் குழந்தை இல்லையே.'

'சரி, இப்ப எதுக்கு வந்த?  அட்வைஸுகளுக்காக மாத்திரம்னா ஐ ஹேட் இனஃப்.'

'ஓகே.  சரி.  இனிமே நான் உனக்கு அட்வைஸ் பண்ண மாட்டேன், போதுமா?  உனக்கு எப்படியோ தெரியாது.  ஆனா நான் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கப் போறோங்கற சந்தோஷத்துலேயே வந்ததால ஈவன் எ ஸ்லைட் ச்சேஞ்ச் ஃப்ரம் யூவ நான் பெருசா எடுத்துண்டுட்டேன் போல இருக்கு.  தட்ஸ் ஆல் ரைட்.'

'சரி, சொல்லு.'

'ஏன் ஸ்ரீ.  நிறைய பெரிய பெரிய கம்பெனிகள்ல லீகல் அட்வைஸர்ஸ் கேட்டு அட்வர்டைஸ்மெண்ட்ஸ் வர்ரதே.  நீ முயற்சிக்கலாமே.'

'எனக்கு இண்டிபெண்டண்ட்டா இருக்கணும்னு தான தனியா இந்த ஆஃபீஸ ஆரம்பிச்சேன்.  கை கட்டி சேவகம் பண்ற வேலை எனக்கு பிடிக்காது.'

'இப்பத்தான் தனியா வந்து நீ தோத்துட்டதாக நீயே சொன்னியே.  அட்லீஸ்ட் இப்பவாவது யோசிக்கலாமே.'

'அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.'

'நீ ரொம்ப விரக்தியா பேசற ஸ்ரீ.  உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்.  ஆனா உன்னோட எதிர்ல உட்கார்ந்து பேசறவா ஈஸியா கண்டுபிடிச்சுடுவா.  நீ அடிக்கடி அப்ஸட் ஆகறவன்தான்.  ஆனா இவ்வளவு தூரம் இருக்குன்னு இப்பத்தான் க்ளாரிங்கா தெரியறது.  உன்னோட நல்லதுக்காக சொல்றேன்.  இது உன்ன நீயே சுத்தமா இழக்கற நிலையில கொண்டு விட்டுடும்.  ப்ளீஸ் நான் சொல்றத கேளு.'

'இப்ப நான் என்ன செய்யணும்னு நெனைக்கற?  பேசிண்டே போறியே.'

'சரி, நான் இப்ப விஷயத்துக்கு வரேன்.  நம்ம சாரை சிங்கப்பூர் அழச்சிண்டு போய் ட்ரீட்மெண்ட் பார்க்க அவாத்துல ஏற்பாடு பண்ணிண்டிருக்கா.  நிறைய கேஸ்கள் இருக்கு.  நீ சார இந்த சமயத்துல பார்த்தா உன்ன அங்க திரும்பவும் கூப்டுப்பார்னு எனக்கு தோணறது.  காப்பிரைட் கேஸ்கள் தான நம்ம கிட்ட ஜாஸ்தி இருக்கு.  நீயோ காப்பிரைட் லாஸ்ல சார் கிட்டேயே நல்ல பேர் எடுத்தவன்.'

'இது சரிப்பட்டு வராது மை.'

'எதச் சொன்னாலும் சரிப்பட்டு வராதுன்னா என்ன அர்த்தம்? முயற்சியே செய்யல.  அதுக்குள்ளேயே முடிவுக்கு வந்துடறையே.  உனக்கு இப்ப தேவை நாலஞ்சு கேஸ் கட்டுகளோட பிஸியா இருக்கணும்.  ஐடில் ப்ரெய்னா இருக்க கூடாது.  கொஞ்ச நாள் பாரு.  சரிப்பட்டு வரலைனா இருக்கவே இருக்கு உன் இஷ்டப்படியே இங்கேயே கன்டின்யூ பண்ணலாம்.'

'கேக்க நன்னாத்தான் இருக்கு.  ஆனா சார் மேல எனக்கு நம்பிக்கை இல்ல.  அப்புறம் ஒருவேள சார் என்ன கூப்டுண்டா நீ அங்க நன்னா வந்துண்டிருக்கறது தடை படும்.  எனக்கு அதுல துளி கூட இஷ்டமில்ல மை.'

'அது எப்படி ஸ்ரீ எல்லாத்தையுமே உன்னால டிஃபரெண்ட்டாவே யோசிக்க முடியறது.  என்னப் பத்தி கவலைப் படாத.  எனக்குன்னு பெரிய ஆஸ்பைரேஷன்லாம் கெடையாது.  வாழ்க்கைல எது வந்தாலும் அது படியே போய்டுவேன்.  எனக்கு துளி கூட வருத்தம் கெடையாது.  இல்லாட்டி நானே வந்து இந்த ஸஜஷன கொடுத்திருப்பேனா?'

'நீ சொன்னதுல ஒண்ண ஏத்துக்க முடியறது என்னால. நான் சார பார்க்காம இதுவரைக்கும் இருக்கறது தப்புதான்னு புரியறது.  நான் கண்டிப்பா வந்து அவர பார்க்கறேன்.'

'அப்படி பார்க்க வரும்போது ஏதாவது அவர் உன் கிட்ட சொன்னா அத அலட்சியப் படுத்தாத.  அவர் இருக்கற சூழ்நிலைக்கு கண்டிப்பா உன்ன அவர் சேர்த்துப்பார். மறுக்காத அவர் உன்ன கேட்டா.  எல்லாம் நல்ல படியா நடக்கும்.'

'உனக்கு கல்யாணமாமே?'

'யார் சொன்னா உனக்கு?  எனக்கு தெரியாம இல்லை உனக்குதான் தெரியாம நடந்துடுமா ஸ்ரீ?'

'கேள்விப்பட்டேன்.  உனக்கு மாப்பிள்ளை பார்க்கறதா உங்காத்துல.'

'எப்ப நான் லா முடிச்சேணோ அப்பேலேந்து அம்மாவும் அப்பாவும் சொல்லிண்டிருக்கா.  நான் தான் தயாரா இல்ல.  சரி, அதப்பத்தி இன்னொருநாள் பேசுவோம் டீடெய்லா?'

'ஏன் மை.  ஏதோ விட்டேத்தியா சொல்ற மாதிரி இருக்கே.'

'அதெல்லாம் இல்ல ஸ்ரீ.  இப்ப வேண்டாம்னு பார்க்கறேன்.  நம்ம சாருக்கு இப்ப ஒரு பக்க பலமா இருக்கணும்.  அதுதான் எனக்கு முக்கியமா படறது.  ஒருவேளை நீ  திரும்பவும் அங்க வந்து சேர்ந்துட்டேன்னா எனக்கு பாரம் குறஞ்ச மாதிரி இருக்கும்.'

'ஐ ஆம் ஸாரி மை.  என் கிட்ட இருக்கற வருத்தத்துல உன் கிட்ட அநாவசியமா ஏதேதோ பேசிட்டேன்.'

'டேய் ஃபூல்.  நான் என்ன வேத்து மனுஷியா சாரி அது இதுன்னு பேத்திண்டு.  நீ நல்லவன் ஸ்ரீ.  நீ ஜெயிக்கணும் இந்த ப்ரொஃபஷன்ல.  தேவையில்லாம எதையெதையோ நெனச்சிண்டு காம்ப்ளெக்ஸ டெவலப் பண்ணிக்காத.  சொன்னா நீ வருத்தப் படுவ.  இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் மாதிரி ஒரு மைண்ட் கில்லர் எதுவும் இருக்க முடியாது.  ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ், ஈவன் வென் யூ கீப் ஃபெயிலிங்.'

'அட்வைஸ் பண்றதுல பாதி கிழவியாயிட்டியே மை.'

'கிழவியா மாத்திரம் இருந்திருந்தா பழுக்க காச்சி உன் முதுகுல சூடு வெச்சு புரிய வெச்சிருப்பேன்.'

'அப்பா தப்பிச்சேன்.  நான் அடிக்கடி சொல்றதுதான் மை.  என்னவோ நீ வந்து நாலு உடு உட்டாத்தான் உறைக்கறது எனக்கு.'

'அதுக்குதான் என்னையும் சேர்த்துக்கோன்னேன்.  அப்ப ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி அவாய்ட் பண்ணினே.'

'பட்டாத்தான தெரியுது...'

'டைம் ஆச்சு ஸ்ரீ.  நான் கெளம்பறேன்.'

'எப்படி வந்தே?'

'சார் எனக்கு ஒரு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கார்.  காளிகாம்பாள் கோவில் வாசல்ல விட்டுருக்கேன்.  அவள இன்னொரு தடவ பார்த்துட்டு கிளம்பறேன்.'

'சரியான சாமி பைத்தியம் நீ.'

'கஷ்டம் வந்தா எப்படியும் அவ காலுலதான் விழணும்.  அந்த சமயத்துல போனா கஷ்டம்னா வரயாக்கும்னு கேட்பா.  எதுக்கு அந்த வம்பெல்லாம்னு அடிக்கடி போய் பார்த்துடறது.'

'சரி மை.  டேக் கேர்.  நாளைக்கு சாயந்திரம் வந்து சாரை பார்க்கறேன்.'

ஏற்கனவே அவளுக்கும் பிக்‌ஷேஸ்வரனுக்கும் ஸ்ரீதரை சேர்ப்பது குறித்த பேச்சு வார்த்தைகளை மறைத்தே பேசினாள் அவனிடம்.  காம்ளெக்ஸ் இருப்பவன் எந்த அளவிற்கு அவற்றையெல்லாம் எடுத்துக் கொள்வானோ என்ற சந்தேகம் இருந்ததில் உண்மையில்லாமல் இல்லையே?

அவளை அனுப்பி விட்டு ச்சேரில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது டொக் டொக்...

'மே ஐ கம் இன் மிஸ்டர் ஸ்ரீதர்?'

கேட்டுக் கொண்டே தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தது முரளி.

'வாங்க.. ப்ளீஸ் பீ ஸீட்டெட்.'

தொடரும்....

No comments:

Post a Comment