கனியுமோகாதல்_45
திருவல்லிக்கேணி வெங்கட ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள ஆராவமுதன் வீடு. ஸ்ரீதர் ஆஃபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான்.
'அப்பா, சொல்ல மறந்துட்டேன். மைதிலி என்னை அவசரமா பார்க்கணும்னு சொல்லியிருக்கா. மூணு மணிக்கு ஆஃபீஸ் வர்ராளாம்.'
'நல்லது டா. அவ என்ன சொன்னாலும் கேட்டுக்கோ. அவசரப் பட்டு கோப பட்டு அவ கிட்ட பேசிடாத. நல்ல பொண்ணு அவ. அவ மனச வருத்தப்பட வெச்சுடாத. பொறுமையா பேசு என்ன?'
'இனி என்ன அவ கிட்ட பேச இருக்கு. என்னமோ தேவையில்லாததெல்லாம் நெனச்சேன். நல்ல வேளை அவ கிட்ட கேட்டுட்டு அவ பிடிக்கலைனு சொல்லியிருந்தா ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அவ யாரை வேணா கல்யாணம் பண்ணிண்டு சௌக்யமா இருக்கட்டுமே.'
தட்ஸ் தி ஸ்பிரிட் மை டியர் பாய். ஏதோ அவ உன்ன கல்யாணம்
பண்ணிண்டா நன்னா இருக்குமேன்னு ரெண்டு பேருமே நெனச்சோம். இல்லைனு ஆனதுக்கப்பறம் உன்னோட ப்ரொஃபஷன்ல ஃபோகஸ் பண்ணு. கொஞ்சம் மனசு ஆறினதுக்கப்பறம் கல்யாணத்த பத்தி யோசிக்கலாம்.'
ஏதோ சொல்ல நினைக்கிறார் அவனிடம். பிறகு மைதிலியிடம் கொடுத்த ப்ராமிஸை நினைத்து பேசாமல் விட்டுவிடுகிறார்.
'சரிப்பா, நான் வரேன்.'
ஆஃபீஸுக்கு வந்து ச்சேரில் உட்காருகிறான்.
'ஷார்ப்பா வருவாளே எப்போதும். இன்னிக்கு என்ன ஆச்சு அவளுக்கு?'
நினைத்து முடியவில்லை. மைதிலி தன் வலது கை உள்ளங்கையை மூடிக்கொண்டு நுழைகிறாள்.
'வந்துட்டியா ஸ்ரீ. சித்த முன்னாடி வந்தேன். நீ வரலைனு தெரிஞ்சோண்ண என்னோட ஃபேவரைட் காளிகாம்பாள் கோவிலுக்கு போயிட்டு வரேன். இந்தா குங்குமம் இட்டுக்கோ.'
'அப்புறமா இட்டுக்கறேன். இந்தா பேப்பர். இதுல போட்டுட்டு அங்க உள்ள பெருமாள் கிட்ட வெச்சுடு.'
அப்படியே செய்கிறாள்.
'ஏன் ஸ்ரீ. சாமி படத்தெல்லாம் துடைக்கறதே இல்லையா? நாலு படம்தான இருக்கு. அதையெல்லாம் ஒரு துடை தொடச்சுட்டு ரெண்டு பூவை வைக்கலாமோன்னோ. இந்த காளி மேல வேணா கோபமா இருக்கலாம். பெருமாள் என்ன பாவம் பண்ணினார்.'
பெரிதாக ஜோக் அடித்ததாக நினைத்ததால் அவன் சிரிக்காதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
'என்ன ஸ்ரீ. கொஞ்ச நஞ்ச கல கலகலப்பு கூட உன் கிட்ட காணுமே? லைஃபுன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். எப்பத்தான் மாறப் போறியோ?'
'சரி மை. விஷயத்துக்கு வா. அவசரமா பார்க்கணும்னு சொன்னியே. அத முதல்ல பேசுவோம்.'
இப்படி அவன் பேசுவான் என்று அவள் நினைக்கவில்லை. வெகுநாட்கள் கழித்து அவளைப் பார்க்கும்போது சிரிப்பும் சந்தோஷமும் அவனிடத்தில் இருக்கும் என்று நினைத்தவளுக்கு ஒரு இடிதான்.
'வேற ஏதோ மூடுல இருக்கேன்னு நெனைக்கிறேன். நான் வேணா கிளம்பட்டுமா, இஃப் யூ ஃபீல் மை ப்ரெஸன்ஸ் இர்ரிடேட்ஸ் யூ.'
அவனும் இவள் இப்படி பேசுவாள்னு நினைக்கவில்லை.
'ஸாரி மை. நான் உன்ன ஹர்ட் பண்ணியிருந்தா. என்ன பத்திதான் உனக்கு தெரியுமே. ஜஸ்ட் லீவ் இட்.'
'இல்ல ஸ்ரீ. உன்ன பத்தி நன்னா தெரிஞ்சுதான் நானும் கோபப்பட்டேன். யாராவது மூணாவது மனுஷாள பார்த்தா கூட நம்மளோட சோகங்கள மனசோட ஒதுக்கிட்டு அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல காமிப்போம். அது கூட எனக்கு கிடைக்கலங்கறது எனக்கு கஷ்டமா இருக்கு. என் மேல உன்னோட டோட்டல் டிஸ்ப்ளெஷர காட்ட, dடிட் ஐ dடூ எனிதிங் ராங்? ஐ டோண்ட் திங்க் ஸோ.'
'அதான் ஸாரி கேட்டுட்டேனே மை?'
'உன் ஸாரிய ஒடப்புல போடு. உன்னோட ரியல் ப்ராப்ளம் என்ன? கம் ஆன். ப்ளீஸ் ஓபன் அப். நீ வெளிய வந்து ப்ராக்டீஸ் பண்ணனுங்கறது ப்யூர்லி உன்னோட டிஸிஷன் ப்ளஸ் நம்பிக்கை. ஸம் டைம்ஸ் அவர் டிஸிஷென்ஸ் மே gகோ ராங். அதுக்காக மத்தவா கிட்ட உன் மூஞ்சிய காட்டறது, இஸ் இட் ஃபேர்?'
'இல்ல மை. திரும்பவும் சொல்லறேன். உன்ன ஹர்ட் பண்ணனும்னு என்னோட இன்டென்ஷன் இல்ல. என்னோட சுபாவம்னு வெச்சுக்கோயேன்.'
'சரி. ஒகே. வி வில் ஸ்டாப் இட் ஹியர். எப்படி போயிண்டிருக்கு உன் ப்ராக்டீஸ்?'
'நத்திங் ஸ்பெஷல். ஏதோ ஆஃபீஸ தொறந்து ஆஃபீஸ மூடிண்டிருக்கேன். நோ க்ளையண்ட்ஸ். வர்ச்சுவலி நத்திங்.'
'நீ உன்னத்தேடி நாலு க்ளையண்ட்ஸ் வரதுக்கு என்ன பண்ணின? அத சொல்லு.'
'நாலு பேர்கள் கிட்ட சொல்லிண்டு இருக்கேன். அதான முடியும் ஆரம்பத்துல.'
'பேஷ் பேஷ். நன்னா இருக்கு ஸ்ரீ. நம்மள மாதிரி நாலு வக்கீல்கள் கிட்ட சொல்லிட்டா அவா ஐயோ பாவம்னு உன் கிட்ட அவா க்ளையண்டுகள தார வாத்து கொடுத்துடுவாளா. ஆர் யூ மேdட்?'
'என்ன மை பரமசிவன் கழுத்துல இருக்கற பாம்பு கேட்கற மாதிரி பேசற. இஃப் யூ வேர் இன் யுவர் பொஸிஷன் வாட் வில் யூ dடூ.'
'பரவாயில்லையே என்ன பரமசிவனோட பாம்பாவாவது அட்லீஸ்ட் பார்க்கறையே? ஓகே, என்ன கேட்ட ஸ்ரீ? நான் உன் நிலைமைல இருந்தேன்னா என்ன பண்ணுவேன்னு தான?'
அவளுடைய கோபமான பார்வைக்கு முன் அவன் பார்வையை நேராக செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
'வக்கீல்கள் கிட்டேயெல்லாம் கேஸ்கள் கொடுங்கோன்னு கேட்டுண்டு வரேன்னு சொன்னியே, நம்ம சார் கிட்ட வந்து உன் பிரச்சனைய சொல்லி ஸஜஷன்ஸ் வாங்கிக்கணும்னு தோணலையா உனக்கு?'
'அவர்தான் உடம்பா படுத்துண்டிருக்கறதா கேள்விப் பட்டேனே.'
'அது இப்ப ரீஸண்டா தானே. சரி. உடம்பா படுத்திண்டிருக்கற ஒரு குருவ பார்க்கணும்னு உனக்கு தோணவே இல்லையா? அவர் உனக்கு என்ன கெடுதி பண்ணினார்? நீ தனியா போகணும்னு ஆசப் பட்டோண்ண, தன் கையில இருக்கற பத்து கேஸ்கள கொடுத்து தானே உன்ன ப்ளெஸ் பண்ணி அனுப்பிச்சார். உன்னோட ஆஃபீஸ கூட அவர்தான தன் கையால தொறந்து வெச்சார்? அப்பேர்பட்டவர் லைஃபுக்கு போராடிண்டிருக்கார்னு கேள்விப் பட்டும் அவர வந்து பார்க்கணும்னு தோணலையா உனக்கு? வாட் ஸார்ட் ஆஃப் ஹ்யூமன் யூ ஆர்?'
அதிர்ச்சியாகவே இருந்தது அவளுடைய இந்த கேள்வி. இருந்தாலும் கேள்வியை சமாளித்துதானே ஆகவேண்டும்?
'அவர பார்க்கும்போது இங்கேந்து ஜம்பமா போனியே என்னத்த கிழிச்சேன்னு கேட்டா நான் எங்க கொண்டு மூஞ்சிய வெச்சுக்க முடியும் சொல்லு?'
'என்ன உளற்ரே நீ. உடம்பா கிடக்கற அவர் ஞாபகம் வெச்சிண்டு தான் முன்னுக்கு வரணும்னு நெனச்சி அனுப்பியவன டீஸ் பண்ணுவார்னு என்ன ஒரு கற்பனை. அவர் அப்படியே கேட்கறார்னு வெச்சுக்கோ. அதுல என்ன தப்பிருக்கு. ஆஃப்டர் ஆல், யார் அவர்? உன்ன ஷேப் பண்ணி உனக்கு நம்பிக்கைய கொடுத்தவர் அவர். நீயும் நானும் சேர்ந்து அவர் கூட ஒர்க் பண்ணும்போது நாம கேட்காத பேச்சுக்கள விட என்ன பெரிய கேள்வி, நீ சொன்ன கற்பனைக் கேள்வி.'
'தோத்துப் போனவன் கிட்ட அட்வைஸ் பண்றது சுலபம் ஸ்ரீ.'
'ஓ. தோத்துப் போயிட்டதாவே நீ ஒன்ன நெனச்சிண்டு இருக்கியாக்கும்? வெளிய வந்து ஆறு மாசம் இருக்குமா. அதுக்குள்ளயே தோத்தாச்சு. பேஷ் பேஷ். இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் உள்ள ஆம்பிளைய ஐ திங்க் ஐ அம் மீட்டிங் ஃபார் தி ஃபர்ஸ்ட் டைம்.'
அவளுடைய ஒவ்வொரு கடுமையான சொல்லும் அவனை துளைத்துக் கொண்டிருந்தது. அதை அவளாலும் உணர முடிந்தது.
'ஹாவ் எ ப்ரேக் ஸ்ரீ. கொஞ்சம் தூத்தம் குடிச்சுக்கோ. உன் மனசுல இருக்கறது அத்தனையும் வெளிய வரணும். அந்த அத்தனைக்கும் நான் பதில் சொல்லாம கிளம்ப போகறது இல்ல. இன்னியோட உன் காம்ளெக்ஸுக்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கணும். நீ நன்னா வரணும் உன்னுடைய நெகடிவ்ஸ்கள மூட்ட கட்டி வெச்சுட்டு. நான் இன்னிலேந்து புதுசா ஒரு ஸ்ரீய பார்க்கணும்.'
தனக்குத் தானே நியாயம் என்று நினைத்துக் கொண்ட எண்ணங்கள் அடுத்தவர் வாதத்தால் தோற்கடிக்கப் படும்போது ஏற்படும் வலிகள் மனப்பூர்வமாக ஏற்கப் படும்போதே நிவாரணம் பெறும்.
முகமெல்லாம் வெளிறிய நிலையில் உதடெல்லாம் உலர்ந்த நிலையில் தண்ணீர் பானைக்கருகில் செல்கிறான்.
மைதிலியின் மனதில் அவனிடம் அடுத்தடுத்து பேச வேண்டியவைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தொடரும்...
No comments:
Post a Comment