Saturday, December 4, 2021

கனியுமோகாதல்_47


கனியுமோகாதல்_47

உள்ளே நுழைந்த முரளி இருக்கையில் உட்காருகிறான்.

'சாரி, மிஸ்டர் ஸ்ரீதர்.  சொல்லாம கொள்ளாம வந்துட்டேன்.  க்ளையண்ட் ஓகே பண்ணிட்டாங்க.  நீங்க கேஸ் ஃபைல் பண்ணிடலாம்.  உங்களோட நோட்டீஸ் ரொம்ப இம்ப்ரெஸிவ்வா இருந்தது.  ஃபீஸ பத்தி கவலப் படாதீங்க.  நான் பார்த்துக்கறேன்.'

'த்தேங்க்ஸ் மிஸ்டர் முரளி.  முடிஞ்சா நாளைக்கே பெடிஷன ரெடி பண்ணி முடிஞ்சா நாளைக்கே உள்ள தள்ளிடறேன்.'

'ப்ளீஸ் அப்டேட் மீ தென் அண்ட் தேர்.'

'ஷ்யூர்'

ஆஃபீஸ் ஆரம்பிச்சு முதன் முதலில் அவனைத் தேடி வந்த வழக்கு.  கொஞ்சம் ஆறுதலாகவும் பெருமிதமாகவும் இருந்தது ஸ்ரீதருக்கு.

ஒரு ஓரத்தில் பிஸினஸைத் தாண்டி மனதில் ஆர்வத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி.

'எவ்வளவு தூரத்துல உங்க மேரேஜ் அலையன்ஸ் போய் கிட்டு இருக்கு?'

மனதில் கேட்கலாமா கேட்க வேண்டாமா என்று போராடிக் கொண்டிருந்த இந்த கேள்வியை கேட்டுவிட்டான்.

'அதை ஏன் சார் கேட்கறீங்க.  சோகமா போயிண்டிருக்கு.  ஆனா த்ரில்லா இருக்கு.'

'அது என்ன சார் சோகமா த்ரில்லா.'

'ஆனாலும் உங்க ஃப்ரெண்ட் மோசம் சார்.  பொண் பார்க்கறதுக்கு வரோம் வரோம்னு சொன்னா அவாத்துல மைதிலி பிஸி, மைதிலி பிஸின்னு டபாய்ச்சுகிட்டே இருக்காங்க.  டெய்லி எங்க அம்மாகிட்ட எப்ப போகலாம் பொண் பார்க்கன்னு கேட்டு கேட்டு எங்க அம்மாவே எனக்கு 

அலஞ்சான் கேஸுன்னு பேர் வெச்சுட்டாங்க.'

பெரிதாக சிரித்து விட்டான் ஸ்ரீதர் இப்படி முரளி சொன்னதும்.

'விட்டுத்தள்ளுங்க முரளி.  வேற பொண்ண பார்த்தா போச்சு.'

'அது எப்படி சார்?  என்னிக்கு அந்த மைதிலிய பார்த்து பேசினேனோ, அன்னிக்கே நான் ஃபளேட்.  என்னவோ அன்னிக்கே எங்களுக்கு கல்யாணம் ஆகி ஹனிமூன் போனமாதிரி ஒரு ஃபீல்.  எந்த பொண்ணுகிட்டேயும் எனக்கு இப்படி வரு ஃபீலிங் வந்ததில்ல.  என் ஃப்ரெண்ட்ஸ் சில பேர் லவ் அது இதுன்னு என்னென்னவோ கத உடுவாங்க.  அப்பெல்லாம் சிரிச்சிகிட்டு அவங்கள கலாட்டா பண்ணுவேன்.  ஆனா இன்னிக்கு எனக்கு அதே நிலைமை.  உங்க கிட்டதான் என்னவோ இப்படி பேசிகிட்டிரிக்கேன் மனச விட்டு.'

'அப்படி என்ன உங்கள அப்படி இம்ப்ரெஸ் பண்ற அளவுக்கு அவ?'

'அதான் எனக்கும் புரியல.  மே பி அவங்களோட மிடுக்கு, கண்ணியம், அத்தாரிடேடிவ் பேச்சு, அட்மினிஸ்ட்ரேடிவ் ஸ்கில்ஸ...  இதுல எதுவோ அல்லது எல்லாமேயோ.. பொண்ணு பார்க்க அவங்க டிலே பண்ண பண்ண நாளுக்கு நாள் ஐ அம் பீயிங் ஸரண்டர்ட் டு ஹர்.'

'ஆச்சர்யமா இருக்கே நீங்க சொல்றதெல்லாம்.'

'இது கூட ஆச்சர்யமில்ல.  கிட்டத்தட்ட ஒரு மாசமா அவங்க கூட லைஃபையே ஓட்டிண்டிருக்கற மாதிரி கூட திங்க்கிங்க்ஸ்.  அவாய்ட் பண்ணவே முடியல.'

'பிக்‌ஷேஸ்வரன் சாரோட ரிலேடிவ் எனக்கு ஃப்ரெண்ட்.  ஏற்கனவே சொன்னேனான்னு தெரியல உங்ககிட்ட.  அவர் மூலமா மைதிலிய பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப் பட்டேன்.  வெரி ஸ்மார்ட்டாம் வேலைல.  பிக்‌ஷேஸ்வரன் சாருக்கு பொண்ணு இல்லாத குறைய மைதிலிதான் தீர்த்து வைக்கறாங்களாம்.  அவராத்துல ஒருத்தர்னு கூட சொல்லலாமாம்.  இதெல்லாம் கேள்விப் பட கேள்விப் பட இவங்கள விட்டா வேற நல்ல பொண்ணு எனக்கு கிடைக்குமா சொல்லுங்க.  அதுக்குத்தான் எங்க அம்மா கிட்ட சொல்லிட்டேன்.  மைதிலி அலையன்ஸ் இல்லைனு போனாதான் இன்னொரு அலையன்ஸ் பார்க்கணும்னு.  எனக்கென்னவோ அவங்க எனக்காகத்தான் வெயிட் பண்றாங்களோன்னு கூட மனசோரத்துல ஒரு நம்பிக்கை.'

முரளி அவளைப் பற்றி பேசப் பேச ஸ்ரீதருக்கு திகைப்பாக இருந்தது.  மைதிலியின் அத்தனை குணங்களும் தெரிஞ்ச அவனுக்கு ஏன் அவளிடம் அவளை திருமணம் செய்து கொள்ள தன் விருப்பத்தை சொல்லாமல் இத்தனை நாள் கடத்தியிருக்கோமே என்ற வருத்தமும்.

இதெல்லாம் ஸ்ரீதர் யோசித்துக் கொண்டிருந்தாலும் முரளியை சற்று மேலும் சீண்ட நினைத்தான்.

'யூ நோ முரளி.  அவளுக்கு இந்த அட்வகேட் ப்ரொஃபஷன் மேல ஒரு க்ரேஸ்.'

'எஸ்.  என்னால அதையும் ஓரளவு புரிஞ்சிக்க முடியறது.  எங்காத்துக்கு அவங்க மருமகளா வந்தா கூட அவங்க ப்ரொஃபஷன்ல அவங்க நல்ல நிலைமைக்கு வர்ரதுக்கு எங்க குடும்பத்துல உள்ள அத்தன பேருமே சப்போர்ட் பண்ணுவோம்.  அவங்க எப்ப விருப்ப பட்டாலும் தனியா ஆஃபீஸ் வெச்சு கொடுத்து அவங்களுக்கு எல்லா சப்போர்ட்டும் பண்ணுவேன் சார்.  கல்யாணம்ங்கறது ஒரு ஈவண்ட் தான்.  அதுலேயே அவங்க சுத்தி சுத்தி வரக் கூடாது.  அவங்களுக்கு என்ன லட்சியம் இருந்தாலும் என்னாலான அஸிஸ்டன்ஸ் கண்டிப்பா கொடுப்போம்.  ஏற்கனவே இது பத்தி எங்காத்துல என் பேரண்ட்ஸ் கிட்ட பேசிட்டேன்.'

முரளியின் ஒவ்வொரு சொல்லும் ஸ்ரீதருக்கு ஒரு சின்ன சலனத்தையும் தந்து கொண்டிருந்தது.

'நான் நன்னா வரணும்னு நினைக்கிற மைக்கு நாம இதெல்லாம் அவளுக்கு செஞ்சு கொடுக்க முடியுமா?'

ஸ்ரீதர் மனதில் இந்த கேள்வியும் வந்து போய் கொண்டுதான் இருந்தது.

'முரளி சார்.  நீங்க ஏன் இன்னொரு தடவை மைதிலியை நேராக பார்த்து மனம் விட்டு பேசலாமே?  ஏன் தயக்கம்?'

'இல்ல சார்.  ஒரு பழமொழி கூட உண்டே தமிழ்ல.  தானா கனியற கனிய தடியால அடிச்சு ... ஸம்திங் லைக் தட்.  அவங்க டிலே பண்றது கூட எனக்கு த்ரில்லாத்தான் இருக்கு.  அவங்க கூட பெரிசா பழகல, பேசல.  இருந்தாலும் அவங்கள மனசுல வெச்சி தெச்சுட்ட மாதிரி ஒரு ஃபீல்.  லவ் ஆஃப்டர் மேரேஜ் ஆர் லவ் பிஃபோர் மேரேஜ் இது ரெண்டுலேயுமே த்ரில் இருக்கு.  கல்யாணம்னு நடந்ததுக்கு அப்புறம் லவ் இஸ் கோயிங் டு ஹேப்பென்.  பட், மேரேஜுக்கு முன்னாடி ஒரு லவ் ஃபீலோட இருக்கறது ஸம்திங் பியாண்ட் டிஸ்க்ரிப்ஷன்.  லெட் மீ என்ஜாய் திஸ் ஆல்ஸோ டில் ஷீ ஸேஸ் எஸ்.'

'நீங்க இதுமாதிரி ஃபீலோட இருக்கறதுல தப்பில்ல.  ஆனா ஒருவேளை நடக்கலைனா உங்களுக்கு வருத்தம் ஜாஸ்தி இருக்காதா?'

'ஸர்டன்லி நாட்.  நான் அதையும் யோசிக்காம் இருந்திருப்பேனா என்ன?  மிஸ்ட் ஆப்பர்ச்சூனிடியா இருந்தாலும் சில விஷயங்கள் நம்மளோட ஹார்ட்டுல அழிக்க முடியாத இம்ப்ரெஷன கொடுக்கறதில்ல?  அப்படி நெனச்சுக்க வேண்டியது தான்.'

'எப்படி உங்களால இப்படியெல்லாம்...?'

'சார், நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிண்டா அவங்களுக்கு எப்படியெல்லாம் ஸப்போர்டிவ்வா இருப்பேன்னு உங்க கிட்ட சொன்னேன் இல்லையா?  ஒருவேளை அவங்க என்ன வேண்டாம்னு சொல்லிட்டா அவங்களுக்கும் ஒரு மிஸ்ட் ஆப்பர்ச்சூனிடி தான.  அவங்களுக்கும் ஒரு வேளை ஃப்யூச்சர்ல இந்த ரிஜெக்‌ஷன் ஒரு இம்ப்ரெஷன கொடுக்கலாமே.  ஹூ நோஸ்?'

முரளி பேசப் பேச ஸ்ரீதருக்கு பலவித சிந்தனைகள் மனதில் பயணித்துக் கொண்டிருந்தன.

'என்ன சார், மௌனமா இருக்கீங்க?  நான் ஏதாவது அபத்தமா பேசிண்டிருக்கேனா?'

'நோ நோ.  நீங்க உங்களோட உணர்வுகள சொல்லிகிட்டு இருக்கீங்க.  இதுல நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?'

'அப்ப நான் வரட்டா மிஸ்டர் ஸ்ரீதர்?  ஆஃபீஸுல ஒரு க்ளையண்ட வர சொல்லியிருக்கேன்.  ஜஸ்ட் ஒன் அவர்தான் இருக்கு.  அதுக்குள்ள போய் டிஸ்கஷனுக்கு ஃபைல ரெடி பண்ணனும்.  ஏதோ அகஸ்மாத்தா என் மேரேஜ் பத்தி நீங்க கேட்க நல்லா ப்ளேட் போட்டுட்டேன்னு நெனைக்கிறேன்.  த்தேங்க்ஸ் ஃபார் தி பேஷண்ட் ஹியரிங்.'

'நாட் அட் ஆல் மிஸ்டர் முரளி.  உங்க உணர்வுகள என்னால புரிஞ்சிக்க முடியறது.'

'எல்லார் கிட்டேயும் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கப் போறதில்ல.  என்னவோ உங்க கிட்ட என்னையும் மீறி சொல்லிட்டேன்'.

'ஐ அண்டர்ஸ்டாண்ட்.'

கைக்குலுக்கலுக்குப் பிறகு பக்கத்து தெருவில் நிறுத்தியிருந்த காரை நோக்கி முரளி.

தொடரும்.....

No comments:

Post a Comment