கனியுமோகாதல்_41
வாசல் வரை வந்து ஆராவமுதனை வழி அனுப்பி வைத்துவிட்டு மைதிலியும் ஜெயஸ்ரீயும் உள்ளே வருகிறார்கள்.
'ரொம்ப வருத்தமா போறார் போல இருக்கே மைதிலி?'
'எல்லாம் ஸ்ரீயை நெனச்சுதான் கவலை அவருக்கு. என்ன பண்றது பாவம்?'
'அது மட்டும்தானா? அதுக்கும் மேல ஏதாவது?'
கண்ணடித்து ஜெயஸ்ரீ கேட்பதின் அர்த்தம் தெரியாதா என்ன மைதிலிக்கு.
'அவனுக்கு வயசும் ஆகிண்டு வரதே, காலா காலத்துல கல்யாணம் ஆகணுங்கற கவலையும் பட்டார். நீங்க கவலைப் படாதீங்கோ நம்ம ஜெயஸ்ரீ காத்துண்டிருக்கான்னு சொன்னேன். சந்தோஷம் தானே?'
'ஆர் யூ ஸீரியஸ்?'
ஆச்சர்யம் கலந்த ஆர்வம் ஜெயஸ்ரீயிடம். கூடவே கொஞ்சம் சந்தோஷத்தையும் கூட்டிக் கொண்டது. அவளுடைய முக மாற்றத்தை அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை மைதிலி.
'ஆசையப் பாரு. அதெல்லாம் பேசலை. சும்மா சொன்னேன்.'
'ச்சே. இவ்வளவு தானா.'
'இப்ப கூட ஒண்ணும் குடிமுழுகிப் போகல. 'உம்' னு சொல்லு. முடிச்சு வெச்சுடறேன். உனக்கு என்ன கொறச்சல்? அவன் கொடுத்து வெச்சிருக்கணும்.'
பார்வைகள் வேறாக இருப்பதை பருவப் பேச்சுகள் கவனிக்கத் தவறிவிடுகின்றன.
'வேற என்ன பேசினார் ஸ்ரீதரோட அப்பா? ரொம்ப நாழி பேசிண்டிருந்தது போல இருந்ததே?'
'திரும்ப திரும்ப ஸ்ரீதர் கவலைதான். சொன்னேன் இங்க அவன கூப்டறதுக்கு ஏற்பாடு நடந்துண்டிருக்குன்னு. கொஞ்சம் நம்பிக்கையோட இருந்தார் சொல்லும்போது.'
'மைதிலி, நிச்சயமா நீ ஒரு ஜெம் டி. அவா அவா சுயநலமா இருக்கிற இந்த நாளுல, மத்தவாள பத்தி நெனைக்கறதுல யூ ஆர் க்ரேட். உன்ன கட்டிக்கப் போறவன் கொடுத்து வெச்சிருக்கணும்.'
'ஐயே போதுமே. முதல்ல அவன் ஒத்துண்டு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்.'
'இந்த ச்சான்ஸ அவர் விட்டுடக் கூடாது மைதிலி. நானும் வேணா உன்னோட வரட்டா. ரெண்டு பேருமா அவர ரிக்வெஸ்ட் பண்ணுவோம்.'
'வேண்டாம் ஜெய். அவன் ஒத்துக்கறதுக்கு ஹெஸிடேட் பண்ணினா நான் கொஞ்சம் ஹார்ஷா பேச வேண்டியிருக்கும். உன்ன வெச்சிண்டு அப்படி பேசறது நன்னா இருக்காது. ஹீ இஸ் பெக்யூலியர் அண்ட் டிஃபரெண்ட்.'
'புரியறது மைதிலி. யூ நோ தி ஆர்ட் ஆஃப் ஹேண்ட்லிங் ஹிம். வில் லீவ் இட் டு யூ.'
'ப்ளெயிண்ட் ரெடி பண்ணிட்டியா? பார்த்துட்டு ஆத்துக்கு கிளம்பலாம்னு இருக்கேன். என்னவோ இன்னிக்கு ஸ்ரீயோட அப்பா கிட்ட பேசினதுலேந்து மனசே சரியில்ல.'
'நீ வேணா இப்பவே கிளம்பேன். இன்னும் சித்த நாழில வழுதி சார் வந்துடுவார். அவர் கிட்ட வேணா டிஸ்கஸ் பண்றேனே.'
'வேண்டாம். நீ வாதாடப் போற கேஸ். நானும் பார்த்துட்டா பெட்டர்.'
இளம்வழுதி அப்போது ஆஃபீஸுக்குள் நுழைகிறான்.
'மைதிலி மேடம், யூ லுக் ஸோ டல் டுடே. என்ன விஷயம்?'
'அதெல்லாம் இல்ல. ஆத்துக்கு போகாம டைரக்டா இங்க வந்துட்டதால டயர்டா தெரியறேனோ என்னவோ? அது இருக்கட்டும். அந்த விஏஓ கேஸ் என்ன ஆச்சு?'
'என்ன ஆச்சுன்னே தெரியல. கவர்ண்மெண்ட் ஸைடுல கேஸ வித்ட்ரா பண்றதா சொல்லியிருக்காங்க. நானும் இத எதிர்பார்க்கவே இல்ல. வித்ட்ராயல பெடிஷனா ஜட்ஜ் தர சொல்லிட்டார்னு நெனைக்கிறேன். கேஸ் போஸ்ட்டட் டு நெக்ஸ்ட் மன்த்.'
'சார் கிட்ட சொல்லிட்டு போகணும். ரொம்ப சந்தோஷப் படுவார்.'
'ஆமாம் மேடம். சார் என் கிட்டேயும் அன்னிக்கு இந்த விஏஓ ஃபேமிலியப் பத்தி ரொம்ப உயர்வா சொன்னார்.'
'அப்படின்னா நடராஜ் கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிண்டு நீங்களே சார பார்த்து சொல்லிடுங்கோ. நீங்க சொன்னாத்தான் இன்னும் நன்னா இருக்கும். அப்பறம் வழுதி, நான் கொஞ்சம் டயர்டா இருக்கேன். கிளம்பறேன் கொஞ்ச நேரத்துல. நாளைக்கு வரப்போற கேஸ்கள கொஞ்சம் பார்த்து வெச்சுக்கோங்கோ. நாளைக்கு கார்த்தால எட்டு மணிக்கு வந்து நானும் ஒரு தடவ பார்த்துடறேன்.'
'மொதல்ல நீங்க உங்க உடம்ப பார்த்துக்கோங்க மேடம். ஆஃப் லேட், யூ கேரி ஸொ மச் ஆஃப் டென்ஷன்ஸ்.'
'த்தேங்க்ஸ் வழுதி. ஐ நோட் யுவர் பாயிண்ட்.'
சிரித்துக்கொண்டே ஜெயஸ்ரீ தயாரித்த ப்ளெயிண்டில் மூழ்கிறாள்.
'வெரி க்ரிஸ்ப் ஜெய். வழுதிகிட்டயும் ஒரு தடவ காமிச்சிட்டு ப்ரொஸீட். நான் கிளம்பறேன்.'
ஆத்துக்கு வருகிறாள். அப்பா வரவில்லை ஆஃபீஸிலிருந்து. மைதிலி சீக்கிரம் ஆஃபீஸிலிருந்து வந்த்து கௌரிக்கு ஆச்சர்யம்.
'என்ன அதிசயமா இருக்கே! இன்னிக்கு மழ கொட்டித் தீர்க்கப் போறது போ.'
சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவள், 'அப்பா வரல?'.
'நீ உங்க அப்பாக்கு விபூதி இட்டுட்டா போல இருக்கு. என்ன ஆஃபீஸோ. நீ மாத்தி அவர் மாத்தி ஒரு நாள போல.'
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே சுந்தரம் வருகிறார்.
'என்ன என் தலைய உருட்டறாளா அம்மா? அதான் வாசல் வரைக்கும் கேட்கறதே.'
'ஆமாம். தலையத் தான் உருட்டறேன். இப்படி ஆஃபீஸையே ரெண்டு பேரும் கட்டிண்டு அழுங்கோ. உங்களுக்கா நேரம் கெடைக்கும் போது பொண்ணு கல்யாண ஞாபகம் வரும். அப்ப பேசிக்கலாம்.'
'அப்பா, அம்மா கியர போட்டுட்டா. இனி பேசாம இருக்கறதுதான் நல்லது. சொல்லிட்டேன்.'
'அம்மா கடுமையா சொன்னாலும் ஞாயம் இருக்கே மயில் குட்டி.'
'சரி சரி. அப்பாவும் பொண்ணும் ஆக்ட் கொடுக்க வேண்டாம். களப்பா வந்திருப்பேள் ரெண்டு பேரும். காஃபி போட்டுத் தரேன். சாப்டுட்டு நீங்க பார்த்து வெச்சிருக்கற வரன் பத்தி பேசுங்கோ. இன்னிக்கு ஒரு முடிவுக்கு வாங்கோ எப்ப பொண் பார்க்க கூப்படறதுன்னு. அவாத்துலேந்து ஃபோன் மேல ஃபோன் ரெண்டு நாளா.'
'நான்தான் சொன்னேனேம்மா. எங்க சார் குணமானோன்ன நான் ஃப்ரீயாயிடுவேன். அப்பறம் பார்த்துக்கலாம்னு.'
'இப்படி இனிமே நீ பேசினா சூட்ட காச்சி இழுத்துடுவேன் பார்த்துக்கோ. நீயும் உங்க சாரும். ஏதோ ஒரு ஞாயித்துக் கிழமையா அவா வரப்போறா, அதுவும் சித்த நாழி. அதுக்கு கூட முடியாதா என்ன? உங்க அப்பா சரியில்ல. அப்பைக்கப்ப ரெண்டு போட்டு உன்ன வளர்த்திருக்கணும். இந்த வயசுலேயும் கொஞ்சிண்டிருக்கார். அதான் எல்லாத்துக்கும் காரணம்.'
'கௌரி, நிறுத்து சித்த. உனக்கென்ன காஃபி குடிச்சிட்டு பேசிடறோம்.'
கோபத்துடன் கௌரி உள்ள செல்கிறாள்.
காஃபி ஃபில்டர், டம்ளர்கள், டவராக்கள் டங்கு டங்கென்று சமையல் மேடையில் வேகமாக முட்டிக் கொள்கின்றன.
இருப்பினும் சூடான ஃபில்டர் காஃபி ரெடி இருவருக்கும்.
'அப்பா கொல்ல பக்கம் போயிருக்கா. ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு காஃபிய எடுத்துண்டு போ அப்பாவோடதையும் சேர்த்து. நான் சித்த முண்டக்கண்ணி அம்மன் கோவிலுக்குப் போய் விளக்கேத்திட்டு வந்துடறேன்.'
சூடாகவே இருந்தது கௌரியின் பார்வையும் காஃபியும்.
தொடரும்....
No comments:
Post a Comment