➖➖➖➖🆎8️⃣🆎➖➖➖➖
பூரி, சப்பாத்தி, போளி செய்ய டிப்ஸ்!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🍪 மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
🍪 குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
🍪 போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.
🍪 சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
🍪 சப்பாத்தி பிசையும் போது சூடான பால், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
🍪 பீட்ரூட் தோலில், மிளகாய், உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம் இவற்றை வதக்கி, அரைத்து கூட்டு செய்தால் பூரி, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
🍪 பூரி நீண்ட நேரம் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும் என்றால் கோதுமை மாவுடன் சிறிது சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து பிசைந்தால் பூரி மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
🍪 சப்பாத்தி உப்புமா செய்வதற்கு சப்பாத்தியை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் மிக்ஸியில் பொடித்தால் சப்பாத்தி உப்புமா சுவையாக இருக்கும்.
🍪 சாதம் வடித்த கஞ்சியில் கோதுமை மாவைப் பிசைந்து பூரி செய்யலாம். கஞ்சி இல்லையென்றால், ஒரு டீஸ்பூன் அரிசி மாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டால் கஞ்சியாகிவிடும் இதில் மாவைப் பிசைந்து, பூரி செய்தால் நன்கு உப்பி வரும்.
🍪 சப்பாத்தி மீதமானால் சுத்தமான துணியில் சுற்றி, காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து குக்கரில் இரண்டு விசில்கள் விட்டு எடுத்தால் இப்போது செய்த சப்பாத்தி போல் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
🍪 அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
🍪 பூரியை மெலிதாய் உருட்டினால் பூரி உப்பிக் கொண்டு வராது. தடிமனாக உருட்டினால் மட்டுமே பூரி நன்றாக உப்பி வரும்.
🍪 பூரி செய்யும்போது விரிந்து வராமல் போகும். அதற்கு மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு விரிந்து வரும். சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக விரிந்து வரும்.
🍪 சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்தாலும், பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.
🍪 வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது சிறிதளவு கடலை மாவு மற்றும் தயிர் ஊற்றிப் பிசைந்தால் சுவையாக இருக்கும்.
🍪 பனீர் தயார் செய்யும்போது, மீதம் இருக்கும் நீரை சப்பாத்தி மாவில் பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாக செய்யலாம்.
🍪 போளி செய்யும்போது பயத்தம் பருப்புப் பூரணம் வைத்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
🍪 கோதுமை மாவில் இளநீரை விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.
🍪 குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து பாதாம் பருப்பை சேர்த்து அரைத்தால் சத்து அதிகரிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.
🍪 பூரியை எண்ணெயில் போட்டதும் அடிக்கடி திருப்பி போட கூடாது, அப்படி போட்டால் எண்ணெய் அதிகமாக உள்ளே இழுத்து கொள்ளும்.
🍪 ஒரு கப் கோதுமை மாவுக்கு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.
🍪 ஆப்பம், இடியாப்பத்திற்கு ஊற்றி சாப்பிட எடுக்கும் தேங்காய் பாலுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
🍪 ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
🍪 சப்பாத்தி மாவு இறுக்கமாக இருந்தால் சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு பிசைந்தால் பக்குவமாக பிசைய வரும்.
No comments:
Post a Comment