Saturday, November 7, 2020

வாழை இலை அல்வா

 பசுமை நிறைந்த வாழை இலை அல்வா .. இது கண்ணுக்கு பசுமை தரும் அல்வா இது. இதை பண்ணி பாத்து அசத்துங்கோ. சுவைத்து பாத்து ரசியுங்கோ # 

வரக்கூடிய, தீபாவளிக்கு இந்த வித்தியசமான அல்வா பண்ணி சாப்பிட்டு பாருங்கோ. அசந்து போய் விடுவேள்.. பச்சை கலரில் அட்டகாசமா இருக்கும். 

வாழை இலை அல்வா

தேவையான பொருட்கள்..

( 4 நபர்கள்).. 

     சாப்பாட்டு வாழை இலை ஒன்று ( பச்சை கலரில் உள்ளதாக பாத்து வாங்கவும்).

கான்பிளவர் மாவு அரை கப்

தண்ணீர் முக்கால் கப் முதல் 1 கப் வரை

சர்க்கரை 200 கிராம்

ஏலக்காய் பொடி நான்கு  டீஸ்பூன்

முந்திரி-10

நெய் 8 டேபிள்ஸ்பூன் 

எப்படி செய்வது? 

முதலில் வாழை இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். 

      அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய விழுதுடன் கார்ன்ஃப்ளார் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரியை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

     மீதியுள்ள அதே நெய்யில் கரைத்து வைத்த வாழைஇலை கலவையை சேர்த்து கலக்கவும். அந்த விழுதுடன் ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து கலக்கவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    நன்றாக சுருண்டு வரும் அளவு கிளறி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் முந்திரியை சேர்த்து கலக்கவும்

      வாழையிலை அல்வா ரெடி.வாழை இலை அல்வா உடம்புக்கு ரொம்ப நல்லது.

      ( தண்ணிக்கு பதில், பாலை விட்டு கிளரலாம்).



No comments:

Post a Comment