மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 5
(சுஜாதா& வெங்கடேசன்) 6381369319
சுவாமி நாராயணன் மந்திர். ஏற்கனவே அகமதாபாத்தில் பார்த்து இருந்தாலும் நாக்பூர் வந்ததற்கு மீண்டும் விசிட் செய்தோம்.
அக்ஷர்தாம் – இது வட நாட்டில் மிக பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்
புது தில்லி – அகமாதாபாத் போன்ற இடங்களில் இந்த கோவில் அமைந்துளது
ஆம் இதன் பொருள் என்ன??
அக்ஷர்தாம் எனில் அக்ஷரம் இருக்கும் இடம்
அக்ஷர் = அக்ஷ்ரம்
தாம் – இடம்
அக்ஷரம் என்றால் ஆன்மா
அதாவது ஆன்மாவின் இருப்பிடம் தான் இந்த ஆலயம்
கோயிலுக்குள் நுழையும் முன்,ஏன் ஸ்வாமி நாராயண் மந்திர் என்ற பெயர் வந்தது என்று பார்த்து விடலாமா?
ஸ்வாமி நாராயண் சம்பிரதாயம் என்பது பக்தி மார்க்க வழிபாட்டைச் சார்ந்தது. பகவான் ஸ்வாமி நாராயண் என்பவரால் டிசம்பர் 1801ல் தொடங்கப்பட்ட இந்து வழிபாட்டு முறை இது.
வைணவ வழியில் வந்த இவ்வழிபாட்டு முறை, கடவுளின் மேல் வைக்கும் தூய்மையான பக்தியே முக்தியை அடையும் வழி என போதிக்கிறது.
1781ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் பகவான் ஸ்வாமி நாராயண் பால்ய பருவத்தை அயோத் தியாவிலும் சப்பையா என்னும் கிராமத்திலும் கழித்தார். 11 வயதிலிருந்து இந்தியா முழுதும் இறைவனைத் தேடி அலைந்து, 18 வயதில் குஜராத் மாநிலத்தை வந்தடைந்தார். 21வது வயதிலேயே ஸ்வாமி நாராயண் சம்பிரதாயத்தை உருவாக்கினார். சதித் திட்டம், பலியிடுதல் ஆகிய மூட நம்பிக்கைகளை ஒழித்தார். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர். அவர் வழி வந்த பரமஹம்சர்களே இன்று வரை ஸ்வாமி நாராயண் சம்பிரதாயத்தின் குருமார்களாக இருக்கின்றனர்.
கோயிலின் பிரமாண்டத்தையும் கம்பீரத்தையும் பார்க்கும்போதே அங்கே நிகழ்த்தப்பட்டிருப்பது சாமான்ய வேலை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. ஒவ்வொரு கல்லிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள்
கோயில் பார்க்கிங் இடத்தை ஒட்டி பெரிய இந்திய உணவகம் தென்படுகிறது. ஐஸ்க்ரீம்.பாவ்பாஜி ,பானி பூரி சாப்பிட்டு வெளியே வருகிறோம்..
மறுபடி ஒரு ஆட்டோல ஏறி ஓட்டலுக்கு போக சொல்றோம்..வழியில் ஒரு கல்யாண ஊர்வலம். வட இந்திய ஸ்டைலில் ஆரவாரத்துடன் ஜிகினா பேப்பர் துகள்களை வாரியிறைத்தவாறு....
ஓட்டல் நெருங்கும் போது ஒரு கோயில் திருவிழா...வழியில் இறங்கி சென்று பார்க்கிறோம்...அம்மன் கோயில் திருவிழா போல...ஆயிரக் கணக்கான சப்பாத்திகளை இட்டு வருபவர்களுக்கு பிரசாதம் ...கோயிலில் சுண்டல் ,பொங்கல், வாங்கிப்பழகிய எங்களுக்கு சப்பாத்தி பிரசாதம் வித்யாசமாக இருக்கவே வாங்கி சாப்பிட்டு ராத்திரி உணவை முடித்துக் கொண்டோம்..
இரவு கூகுளை நோண்டி மறுநாள் ராம்டெக் போவதென முடிவு செய்தேன்
படம் 1) அக்ஷர்தாம்
2)வரும் போது திருமண ஊர்வலத்தில் ஜிகினா துகள்கள்
3)கோயில் திருவிழாவில் இரவு சப்பாத்தி ப்ரசாதம்
No comments:
Post a Comment