சட்னி குறிப்புகள்!
➖➖➖➖➖➖➖
🍝 இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
🍝 தேங்காய் சட்னி அரைக்கும் போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
🍝 தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான பச்சடி தயார்.
🍝 தக்காளி, வெங்காயம் போன்ற சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
🍝 துவையல் அரைக்கும் போது, மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் துவையல் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
🍝 கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment