🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 47 🌹🌹🌹
அருள்மிகு நீராகத்தான் திருக்கோவில்:-
திருநீரகம்.
தாயார்: நிலமங்கைவல்லி
உற்சவர்: ஜகதீஸ்வரப் பெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: தெற்கு
விமானம்: ஜகதீஸ்வர விமானம்
தீர்த்தம்: அக்ரூர தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ நிலமங்கைவல்லீ ஸமேத ஸ்ரீ ஜகதீஸாய நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்.
🌺🌺 தலவரலாறு:-
"திருநீரகம்" என்பது காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே வலது புறமாக தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்திற்கு "திருநீரகம்" என்று பெயர் வந்ததன் காரணத்தை அறிய முடியவில்லை.
திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டகத்தில் நீரகத்தாய் என்ற சொல்லில் மங்களாசாசனம் செய்திருப்பதால் தெளிவான வரலாறு கிடைக்கப்பெறவில்லை.
ஆனால், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் கூறியுள்ள 108 திருப்பதி அந்தாதியை ஆராய்ந்து பார்க்கையில், அக்காலத்தில் அக்ரூர தீர்த்தம் இருந்ததாகவும், மார்கண்டேய முனிவருக்காக பெருமாள் பிரளய வெள்ளத்தின் போது, ஆலமரத்தின் இலையில் ஒரு பாலகனாக கண்ணன் வளர்ந்த திருக்காட்சியை காட்டி அருளியது போலத் தெரிகிறது.
அக்காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சி பகை அரசர்களின் படையெடுப்பின் போது, இக்கோவில் அழிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அழிவுற்ற ஆலயத்தின் இறைவனின் திருமேனியை மட்டும் வேறொரு கோவிலில், அதாவது தற்போது உள்ளதைப் போல சன்னிதி அமைத்து வழிபாடு செய்திருக்கலாம்.
நீரகத்தாய் என்று பாடலின் முதல் சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திருநீரகம் முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார்.
பெருமாள் நீர்மைத்தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர்மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாகக் கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன்மீது ஆலிலை கண்ணணாக மிதப்பவன். எனவே, பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தலம் எங்கிருந்து வந்தது மட்டும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது, இந்த மூன்று தலங்களும் திருஊரகத்துடன் வந்து விட்டதா???? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தாரா??? எந்தக் காலச் சூழலில் இந்த மூன்று திவ்யதேசங்கள் இங்கு வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
🌺🌺 தலபெருமை :-
இந்த உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்யதேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோவிலுக்குள்ளேயே நான்கு திவ்யதேசங்கள் உள்ளது.
இதேபோல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும், பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.
இந்தநான்கு பெருமாளையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
🌺🌺 மங்களாசாசனம் :-
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வாவைவத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுள் திருவடியே பேணினேனே".
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 சிறப்புகள் :-
ஒரே பிரகாரத்தில் நான்கு திவ்யதேசங்களைக் கொண்டுள்ள திருத்தலம்.
இறைவன் நீரகத்தான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்ற திருத்தலம்.
திருமங்கையாழ்வாரால் ஒரு பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
🌺🌺 வழித்தடம் :-
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் இந்த நீரகத்தான் சன்னிதி உள்ளது. காஞ்சிபுரம் பேருந்தோ நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ளது இத்திருக்கோவில். நடந்தே செல்லலாம் இந்த திவ்யதேசத்திற்கு.
அருள்மிகு நிலமங்கைவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு பாண்டவதூதர் பெருமாள் - திருப்பாடகம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment