மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 8
வார்தா காந்தி ஆஸ்ரமம்.
வாசலில் கதர் துணிகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
பாபு குடி (Bapu Kutti) என்றழைக்கப்படும் காந்தியடிகளினால் துவங்கப்பட்ட ஆசிரமமானது சுதந்திர போராட்ட வேள்வியில் முக்கிய பங்காற்றியது. இன்றும் சிறப்பான பொலிவுடன் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாய் பாபு குடி விளங்குகின்றது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்த காந்தியடிகள், பல அமைப்புகளை தொடங்கி வைத்தார். இன்றும், அவையெல்லாம் வர்தாவில் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
வராற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, 1930- ம் வருடம் மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்யாகிரகத்தை பாதயாத்திரை மூலமாக தொடர்ந்த போது, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தராமல் சாபர்மதி ஆசிரமுக்கு வருவதில்லை என முடிவெடித்திருந்தார். இடையில் இரண்டு ஆண்டுகாலம் பிரிட்டிஷ் அரசினால் காந்தியடிகள் சிறைப்படுத்தப் பட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டவர், இரண்டு வருடங்கள் பிரயாணத்தில் செலவழித்தார். அதன் பிறகு, காந்தியடிகள் மத்திய இந்தியாவில் தன் தலமை அலுவகத்தை இயக்க விரும்பினார். அதன்படி, காந்தியடிகளின் அபிமானியான ஜம்னாலால் பஜாஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று 1934- ம் வருடம் தன் 67 -வது வயதில்
காந்தியடிகள் ஒரு கிராமத்தில் தங்கி, கிராம மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பி, வர்தாவில் இருந்து எட்டு கிலோமீட்டரில் இருந்த ஷேகாவ் ( Shegaon) கிராமத்தை தேர்ந்தெடுத்தார்.
உள்ளூர் பொருட்களை கொண்டே, ஆசிரமம் கட்டவேண்டும் என்றும், கட்டச் செலவு ரூயாய் 100 க்கு மேல் போகக் கூடாதென்றும் உத்தவிட்டார்.
தன் மனைவி கஸ்தூரி பா மற்றும் சில நண்பர்களுடன் காந்தியடிகள் அங்கு தங்கினார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு இடங்களின் பெயர்கள் ஷேகாவ் என்றிருந்ததால் வர்தா மாவட்டத்தில் இருந்த ஷேகாவிற்கு சேவாகிராம் ( சேவையின் கிராமம்) என்று மாற்றப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராடத்தில் பல முக்கிய முடிவுகளை காந்தியடிகள் சேவாகிராம் ஆசிரமத்தில் இருந்துதான் எடுத்ததாக பல புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றும் கூரை வேய்ப்பாடு, மூங்கிலால் ஆன தூண்கள், மண் தரை, மண் சுவர்கள் என உள்ள ஆதி நிவாஸ் (காந்தியடிகள் முதலில் தங்கியது), பாபு குடி, பா (Ba) குடி, ‘ லாஸ்ட் ரெஸிடென்ஸ்) முதலியவை அருமையாய் இன்றும் பராமரிக்கப் படுகிறது.
கூழாங்கல்லினால் அமைக்கப்பட்ட பாதையும், சுத்தமான சுற்றுப்புறமும், நெடிய மரங்களும் ஆசிரமத்தின் அழகை மெருகூட்டுகின்றன..
அவரது குடிலில் சமையல் கட்டு டாய்லட் போன்றவை இன்றும் அதே தரத்தில் பாதுகாக்கப்படுகிறது.
காந்தி நினைவாக அங்கிருந்து ஒரு ஓட்டாம் சில்லியை பொறுக்கி வந்தோம்.
பாபு குடியில் காலையும், மாலையும் சர்வதர்ம பிரார்த்தனை தினமும் நடைபெறுகிறது.
ஆசிரமத்தில் உள்ளோர் காந்தி ராட்டையில் பருத்தியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டே பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
காந்தி மிகவும் எளிமையானவர்தான். ஆனால் அவர் எளிமைக்காக பல ஆயிரம் செலவழிக்கப்பட்டது என எங்கோ படித்தது நினைவு வருகிறது.
இவளிடம்” பார் கஸ்தூரிபா எப்படியெல்லாம் காந்தி சொல்படி கேட்டு இந்த குடிசையில் தங்கி இருக்கிறார்” நீயும் தங்கறதுக்கு ஃபைவ் ஸ்டார் (?) ஓட்டல் கேட்கிறாயே என்கிறேன்.
காந்திய சிந்தனைகளுடன்(?) ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வருகிறோம்..வாசலில் கதர் ஷர்ட், கதர் குல்லா வாங்குகிறேன்..இவள் கதர் புடைவையை புரட்டிப்பார்த்து விட்டு வேண்டாமென்று(காந்திய எளிமை) பெண்ணுக்கு சுடிதார் வாங்கிக்கொள்கிறாள்..
எதிரே ஆஸ்ரமத்தின் உணவகம்..வித்யாசமான இருக்கைகளுடன்...இரண்டு தாலி ஆர்டர் செய்தோம்....இவளுக்கு பிடித்த மோர் நிறைய....மொறு மொறுவென வறுத்த சீரகம்...அள்ளி வாயிலும், கொஞ்சம் பொட்டலமாகவும்,(காந்தி நினைவாக?)கட்டிக்கொள்கிறேன்...
ஒரு ஆட்டோ பிடித்து ரூம் வந்து கன்றாவி லாட்ஜை சந்தோஷமாய் காலி செய்து ரோடு வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தினோம்..காலையில் வந்த அதே இளைஞன்...தமிழ் ஆட்கள் என்றவுடன் ,ஸ்டைலாக ரஜினி அண்ணன் என்று முடியை கோதி எங்களை 20 ரூக்கு பஸ்ஸ்டாண்ட் சேர்க்கிறான்…
அடுத்து பத்ராவதி
படங்கள் ஆஸ்ரம காட்சிகள்.
No comments:
Post a Comment