Wednesday, November 18, 2020

சமையலில் கீரைகள்

 ➖➖➖➖🆎9️⃣🆎➖➖➖➖

சமையலில் கீரைகள்!

➖➖➖➖➖➖➖

🌿 முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும் போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறினால் கட்டியாக இல்லாமல் கீரை உதிரியாக இருக்கும்.

🌿 கீரையை வேகவைக்கும் போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமை நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்.

🌿 கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது, தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

🌿 புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனை தக்காளி சு+ப்புடன் சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

🌿 கீரை மசியல் செய்யும்போது புளிக்கு பதிலாக பொடியாக அரிந்த மாங்காயைச் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

🌿 கீரையை சமைக்கும் போது சர்க்கரையை சேர்த்தால் சத்து போகாது.

🌿 பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

🌿 பச்சை கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

🌿 கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்து பொடியாக வைத்துக் கொண்டு குழம்பு, ரசம் ஆகியவற்றில் போட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

🌿 கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் டீஸ்பூன்  சர்க்கரையை சேர்த்து கடைய கீரை தனிசுவையுடன் இருக்கும்.

🌿 கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாகவும், ருசியாகவும் இருக்கும்.

🌿 கீரையை புளி ஊற்றிக் கடையும்போது, அத்துடன் நான்கைந்து மோர் மிளகாய் வற்றல்களையும் வறுத்துப் போட்டுக் கடைந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

🌿 கீரை சமைக்கும்போது, ஒரு மிளகு அளவிலான வெற்றிலை பாக்குக்கு போடும் சுண்ணாம்பை கலந்துவிட்டால், கீரை வெந்த பிறகும் நிறம் மாறாமல் பச்சையாக இருக்கும்.

No comments:

Post a Comment