Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 3

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள் - பகுதி 3

(சுஜாதா& வெங்கடேசன்)      6381369319

என் பார்வையில்....

நாக்பூர்... காலையில் பக்கத்து டீ கடையில் ஐந்து ரூபாய் டீ இரண்டு கப் சாப்பிட்டு அவளுக்கும் இரண்டு கப்...ப்ளாஸ்கில் வாங்கித்தர்றேன். குளித்து முடித்து மீதம் உள்ள புளியோதரையை காலி செய்து  அன்றைய பொழுதுக்கு பிளான் செய்யறேன்..

40 வருடம் முன்பு அத்திம்பேர் நாக்பூரில் வேலை செய்த போது அக்கா பெண்(2 வயது) நாக்பூர் ஜூவில் பீகாக்,லயன், மட்டுமின்றி புத்தகத்தில் உள்ள அனைத்து மிருகங்களையும் தான் பார்த்ததாக கதை விட்டதை நம்பி முதலில் ஜூ பின்னர் கூகுளில் தேடி கிடைத்த தீக்‌ஷா பூமி,ராமன் அறிவியல் சென்டர் மாலை சுவாமி நாராயணன் என ப்ளான் போடுகிறேன்...

ஆட்டோவும் இல்லாமல் ரிக்‌ஷாவாகவும் இல்லாமல் ஒரு மோட்டார் வைத்த வண்டிதான் அங்கு ட்ரான்ஸ் போர்ட்...அதில் ஏறி ஜூ போகிறோம்…

வாசலில்

Maharajbagh zoo is the central zoo of Nagpur, India. The zoo is located in the heart of the city and has been built on the garden of the Bhonsle and Maratha rulers of the city. The zoo comes under the Central Zoo Authority of India and is maintained by the Panjabrao Deshmukh Krishi Vidyapeeth of Nagpur. என எழுதியிருக்கிறது…

உள்ளே நாலைந்து மிருகங்கள், கொஞ்சம் மரங்கள், மிருகம் பொம்மைகள், என்று டிபிகல் ஜூ...நடந்து கால் வலிக்க 40 வயது அக்கா பெண்ணுக்கு போன் செய்து அந்தக்காலத்தில் ஏன் இப்படி கதைவிட்டாய் என்று சண்டை போடுகிறேன்...அவள் பொம்மைகளை சொல்லியிருப்பேன் என்று மழுப்புகிறாள்...

மறுபடியும் ஆட்டோ ஏறி தீக்‌ஷா பூமி வருகிறோம்....

நாக்பூர் அம்பேத்கர் பிறந்த ஊர் ...

நாக்பூர் பகுதியில் உள்ள புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு தீக்‌ஷா பூமி ஒரு புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு 120 அடி நீளமுள்ள புத்த ஸ்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுடன் பல நூற்றுக்கணக்கான தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறிய சம்பவத்தின் நினைவுச்சின்ன இடமாக கருதப்படுகிறது. அந்த நாள் அஷோக் விஜய தசமி என்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த புண்ணிய ஸ்தலத்தில் ஒரே சமயம் 5000 பேர் கூடும் அளவுக்கு இடவசதி உள்ளது. கம்பீரமான இந்த நினைவுச்சின்னம் வரலாற்றின் குறிப்பிடத்தக்க அம்சமாகவும் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும் பெயர் பெற்று விளங்குகிறது.வாசலில் போட்டோக்ராபரிடம் பெரிதாக ஒரு போட்டோ எடுத்து அதை சுருட்டி கையில் தரான்..

பின்னர் மறுபடியும் ஆட்டோ ஏறி இராமன்  அறிவியல் பூங்கா போகிறோம். அதற்குள் புளியோதரை ஜீரணமாகி பசி...கான்டீனில் ஐஸ்க்ரீம்.யோகர்ட் சாப்பிட்டு அறிவியல் அரங்கில் நுழைகிறோம்..

வழக்கமான அறிவியல் கண்காட்சி போல மிகப்பெரிதான அரங்கில் அறிவியலின் கூறுகளை விளக்கும் வண்ணம் அமைந்து இருக்கிறது…பூதம் போல உருவம் காட்டும் கண்ணாடியிலும் எங்கள் கழுத்தை வெட்டி பழத்தட்டில் வைத்த மாஜிக் பெட்டியிலும் போட்டோ எடுத்துக்கொள்கிறோம்.  

இந்த மையம் நாக்பூரின் மையத்தில் காந்தி சாகர் ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது

வெளியே வந்து காந்தி சாகர் ஏரி வழியே நடந்தே போக முடியுமா என கூகுளை  கேட்கிறேன்...இரண்டு கிமீதான் வெயில்ல நடக்க முடிஞ்சா போகலாம்கறது கூகுள்..ஆனா கிராண்ட் ஓட்டல் டைரக்‌ஷன் சரியா காட்டாம குழப்பறது.  

ஒரு ரிக்‌ஷால ஏறி கிராண்ட் ஓட்டல் கே ஸாத் போஜன் கேலியே மதராஸி ஓட்டல் என்று எதோ சொல்லி ஸாட் ருப்யா பேசி மீன் கடை கிட்ட ரிக்‌ஷா போறது...

சுஜாதா அவசரமா புடைவை தலைப்பை எடுத்து மூக்கை மூடுகிறாள். சுருட்டி எடுத்து வந்த தீக்‌ஷா பூமி போட்டோ க்ராபர் தந்த போட்டோ, அறிவியல் கண்காட்சியில்  நாங்கள் மாறி மாறி கையில் வைத்திருந்தது மச்சா(மீன்) பூமியில் அவள் கையில் இருந்து நழுவியதை இருவரும் பார்க்காமல் ஆட்டோ நின்ற ஒரு ஓட்டலில் சாப்பிட நுழைகிறோம்...

கிராண்ட் ஓட்டல் திரும்பும் போது 70  ரூபா போச்சே மீன் கடை அருகில் போய் தேடலாமென்கிறேன்..

இவள் முறைக்கிறாள்...

           தொடர்வது அக்‌ஷர் தாம்

 படங்கள் ஜூ,தீக்‌ஷா பூமி,இராமன் அறிவியல்





No comments:

Post a Comment