Wednesday, November 18, 2020

மராட்டிய மண்ணின் ஆன்மீக நினைவுகள்- பகுதி 18

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹18🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மராட்டிய மண்ணில்...பண்டரிபுரம்

(வெங்கடேசன் 6381369319)        பகுதி 18

இனி அவள் பார்வையில்

அப்பாவோட தேஞ்சு போன  பட்டன் phone அ எடுத்துண்டு போன அக்கா அங்க பெரிய க்யூ நிக்கறத பார்த்துட்டு செருப்பு பார்த்துக்கறவன்ட கொடுத்துட்டு வந்தேன்கறா..அப்பா டென்ஷனாகி அதுல நெறைய பேரோட போன் நம்பர் போட்டு வச்சிருக்கேன்னு சண்டை போடறா..சமாதானப்படுத்தி ஒரு வழியா உள்ள அழைச்சிண்டு போறோம். வழியெல்லாம் அப்பாவோட திருமண் பார்துட்டு ஏக மரியாதை பண்ணி வழி விடறா..சில பேர் பாண்டு ரங்கனையே பார்த்த மாதிரி குழந்தையை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கறா..இந்த மாப்பிள்ளைகள் இத பாத்தா மூஞ்சியை திருப்பிப்பா...

தோமாலை சேவை, விஸ்வரூப தரிசனம், பூலங்கி சேவை என்றெல்லாம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு விசேஷ தரிசனம் இருப்பது போலவே இந்த விட்டலனின் கோயிலிலும் ஒரு விசேஷ தரிசனம் இருக்கு. அது மிகவும் வித்தியாசமானது.  இந்த தரிசனத்திற்கு ‘பாத ஸ்பரிச தரிசனம்’ என்று பெயர். பக்தர்கள் இந்த கோயிலில் மட்டும்தான் கருவறைக்குள் அனுமதிக்கப்படறா..


விட்டலனின் கருவறைக்குள், விக்கிரகம் நிற்கும் மேடை அருகில் பக்தர்கள் போகலாம். சாதி, இன, பேதம், ஏற்றத் தாழ்வு ஏதும் கிடையாது. பாமர ரஞ்சகனான விட்டலனின் சந்நதியில் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. விட்டலனை நெருங்கி நின்றுதரிசிக்கலாம். மேடையடியில் குனிந்து, அவனுடைய திருவடிகளில் தலைபடும்படி வைத்து நமஸ்கரித்துத் தொழவேண்டும். விட்டலனுடைய பாதஸ்பரிசம் பக்தர்களுக்கு தரப்படுகிறது. இதுவே ‘பாத ஸ்பரிச தரிசனம்’.

இந்த தரிசனத்திற்குப் போகிறவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நீங்கள் தலைதாழ்த்த தயங்கினாலோ, பின் வாங்கினாலோ பக்கத்தில் உள்ள பண்டாக்கள் விடமாட்டார்கள் ‘ஆ... ஊ...’ என்று கத்தி உங்களை பலவந்தமாக இழுத்து, தலையை சுவாமியின் திருவடிகளில் அழுத்திவிடுவார்கள். அவர்கள் இழுப்பதும் தள்ளுவதும் முரட்டுத்தனமாக இருக்கும். பலருக்கு மண்டை உடையும் பாக்கியமும் உண்டு! 

நானும் அக்காவும் அப்பாவ பத்திரமா பிடித்து பாத ஸ்பரிசம் பண்ணி வைக்கறோம். பண்டா அப்பாக்கு பாண்டுரங்கனோட ஸ்பெஷல் மாலை ஒன்னு போடறா...

(இப்படி விட்டலனை தரிசிக்க யாருக்கும் உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் விட்டலனின் திருவடியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் இங்கிருக்கும் பண்டாக்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதையெதையோ செய்வதாகவும், செய்ததாகவும் சொல்லிப் பலவழிகளிலும் பணத்தைப் பிடுங்க முயற்சிப்பார்கள்.)

சன்னதியிலிருந்து வெளியே வரோம். அப்பா கழுத்துல பெருமாள் மாலையோட தேஜஸோட வரத பார்த்து மாப்பிள்ளைகள் ரெண்டு பேரும் உங்களை எங்கள்ளாம் தேடறது? இது என்ன கோலம் ?னு மாலைய கழட்ட சொல்றா…

எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு சன்னதியா சேவிச்சிண்டு வரோம். 

ஒரு காலத்தில் மிகச் சிறிய சந்நதியாக இருந்த விட்டலன் மற்றும் ருக்மாயி சந்நதிகள் பெரிய கோயிலாக மாறியதற்கு காரணமானவர் நிஜாம் மன்னரின் அமைச்சரான சந்துலால். 

சபாமண்டபத்தை அடுத்து ருக்குமாயியின் சயன அறை உள்ளது. மூன்றடி உயரமுள்ள ருக்குமாயி, வெள்ளிப்பூச்சு கொண்ட பிராவளியோடு காட்சியளிக்கிறார். கர்நாடக பாணியில் அமைந்த அன்னைக்கு ஆடை ஆபரணங்கள மராத்திய மரபை ஒட்டி அணிவிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் சத்தியபாமாவிற்கும் ராதாவிற்கும் தனிக் கோயில்கள் உள்ளன. பாண்டுரங்கனின் கோயிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் ஒரு பிரமாண்டமான மரம் நிற்கிறது. 

பச்சைப் பசேலென்ற அம்மரத்தின் இலைகள் சூரிய ஒளியில் பளபளக்கின்றன. பண்டரிபுரம் கோயிலுக்கு வருகிற ஒவ்வொரு மராட்டியரும் இந்த மரத்தைப் புனிதமாகக் கருதி தொட்டு தரிசித்து, நமஸ்கரித்து கண்ணில் ஒற்றிக் கொள்ளாமல் போவதில்லை. அதன் இலைகள் அக்கோயில் பிரசாதமாகவே போற்றப்படுகின்றன. கானா பத்ரை என்ற விட்டலனின் பக்தைதான் இப்படி வளர்ந்து இங்கே நிழல் தந்து கொண்டிருக்கிறாள் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் இதை வழிபடுகிறார்கள். பண்டரிநாதன் கோயில் எப்போதும் தூய்மையாகவும் தெய்வ சாந்நித்யத்துடனும் விளங்குகிறது. ஆலய பிராகாரத்திலே அடிக்கடி கதாகாலட்சேபங்கள் நடைபெறுகின்றன. ஏராளமான பக்தர்கள் மெய்மறந்து அதைக் கேட்கிறார்கள்.

இப்போது பக்தர்கள் விட்டலனின் கோயிலிலுக்குள் ‘நாமதேவ் பயாரி’ வாசல் வழியாக உள்ளே நுழைந்து ‘பச்சிம் துவார்’ எனப்படும். மேற்கு வாசல் வழியாக வெளியே வருகிறார்கள். ஒவ்வொருவரும் இப்படித்தான் தரிசனம் செய்ய வேண்டுமாம். இந்த விட்டலனின் கோயிலுக்குள் அழகிய சந்நதிகள் கொண்ட 26 சிறிய கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் முதலில் இருப்பது ‘நாமதேவ் பயாரி’. 

அதன்பிறகு வரிசையாக கணேஷ் மந்திர், தத்தா மந்திர், கருட மந்திர், மாருதி மந்திர், சௌரங்கி தேவி மந்திர், கருடகும்பம், நரசிம்ம மந்திர், ஏகமுக தத்தாத்ரேயர் மந்திர், ராமேஸ்வர லிங்க மந்திர், காலபைரவ மந்திர், லட்சுமி-நாராயணர் மந்திர், காசி விஸ்வநாதர் மந்திர், கணபதி மந்திர், சத்யபாமா மந்திர், ராதிகா மந்திர், சித்தி விநாயகர் மந்திர், மகாலட்சுமி மந்திர், வேங்கடேஸ்வரர் மந்திர், கானாபத்ரா மந்திர், அம்பாபாய் மந்திர், சனிதேவ் மந்திர், நாகநாத் மந்திர், குப்தலில் மந்திர், கண்டோபா மந்திர், கணநாதர் மந்திர் ஆகியன உள்ளன. ருக்மணி-சத்ய பாமா கோயிலிலிருந்து வெளியே வரும்போது விட்டலனின் கருவறைக் கோபுரத்தின் அழகைக் கண்டுகளிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில், நிரந்தரமாக பண்டரிபுரத்தில் குடியிருக்க வேண்டிய இந்த விட்டலன் அடிக்கடி இடம் மாறியதாக தெரிகிறது. 

ஒருமுறை விஜய நகரத்து அரசர் கிருஷ்ண தேவராயர், விட்டலன் விக்கிரகத்தை தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். ஏகநாத் என்ற மகானின் கொள்ளுப் பாட்டனாரான பானுதாஸ் என்ற பக்தர் தனது பக்தியின் சக்தியால் விட்டலனைத் திரும்பவும் பண்டரிபுரத்துக்குக் கொண்டு வந்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. விட்டல் பண்டரிபுரம் திரும்பிய இந்த வைபவத்தை இன்றும் ஒவ்வொரு ஏகாதசியன்றும் பண்டரிபுரத்தில் விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். 

‘’பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரைப் பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம்.

படங்கள். கோயில் உட்புறம்.


No comments:

Post a Comment