இன்றைய சமையல் குறிப்பு!
மிகவும் சுவையான செட்டிநாடு சீனிப் பணியாரம் செய்வது எப்படி?
தமிழகத்தில் பண்டிகைக் கால பிரசித்திபெற்ற உணவு பலகாரங்களில் ஒன்று தான் இந்த செட்டிநாடு சீனி பணியாரம். இதை தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு தேவைப்படும் பொருட்கள்:
ஜவ்வரிசி – 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
ஏலக்காய் – 2,
உப்பு – 1 சிட்டிகை,
தண்ணீர் – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு அவசியமான அளவு.
இதனை செய்யும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதையடுத்து அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிகவும் மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்க கூடாது . இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும். பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.
மாவானது தோவை மாவு பதத்தில் இருக்க வேண்டும். இதையடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு போதுமான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். அதையடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின்னர் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றிவிடுங்கள். இதில் பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொவென்று மாறும் போது எடுத்து விடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், டேஸ்ட்டான செட்டிநாடு சீனி பணியாரம் ரெடி .
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
No comments:
Post a Comment