🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 53 🌹🌹🌹
அருள்மிகு கார்வானர் பெருமாள் திருக்கோவில்:-
மூலவர்: கார்வானர்
தாயார்: கமலவல்லி
உற்சவர்: கார்வானர்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: வடக்கு
விமானம்: புஷ்கல விமானம்
தீர்த்தம்: கௌரி தடாகம், தராதர தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ கள்வன் ஸ்ரீவாமிநே நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்
🌺🌺 தலவரலாறு:-
"திருக்கார்வானம்" என்பது காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே இரு தேவியருடன் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.
இத்தலத்திற்கு திருக்கார்வானம் என்று பெயர் வந்ததன் காரணத்தை அறிய முடியவில்லை. திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டகத்தில் நீரகத்தாய் என்று ஒரே சொல்லில் மங்களாசாசனம் செய்திருப்பதால் தெளிவான வரலாறு கிடைக்கப் பெறவில்லை.
ஆனால் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கூறியுள்ள 108 திருப்பதி அந்தாதியை ஆராய்ந்து பார்க்கையில், விருத்த மாமுனிவர்கள் செய்த தவத்தின் பயனாக கரிய மேகங்களிலிருந்து பெருமாள் தோன்றியதாகத் தெரிகிறது.
கரிய மேகங்களிலிருந்து தோன்றிய பெருமாள் என்பதால் இத்தல இறைவனுக்கு "கார்வானர்" என்பது திருநாமம்.
🌺🌺 சிறப்புகள்:-
திருமகள், பூமிதேவியோடு பெருமாள் வடக்கு முகமாகக் காட்சி தந்து அருளும் திருத்தலம்.
உலகளந்த பெருமாள் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.
திருமங்கையாழ்வார் பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 மங்களாசாசனம்:-
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வாவைவத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுள் திருவடியே பேணினேனே!!!"
என திருமங்கையாழ்வார் நான்கு பெருமாளையும் சேர்த்து ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
அது என்ன நான்கு பெருமாள்??? நீரகத்தான் - நீரகத்து பெருமாள், காரகத்தான் - கருணாகரப் பெருமாள், ஊரகத்தான் - உலகளந்த பெருமாள், கார்வானர் - கார்வானர் பெருமாள். இந்த நான்கு பெருமாளைத்தான் ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
🌺🌺 வழித்தடம்:-
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது இத்திருக்கோவில். நடந்து சென்றே திருக்கோவிலை அடையலாம்.
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு கள்வர் பெருமாள் திருக்கோவில் - திருக்கள்வனூர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment