#தீபாவளி_லேகியம்
" ஆரோக்கியம் தரும் அருமருந்து "
தீபாவளி என்றால் லேகியத்திற்கும் முக்கிய இடம் உண்டு.....
"தீபாவளி லேகியம் "என்றே புகழ் பெற்றது.
எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்ததும் முதலில் சாப்பிடுவது லேகியம் தான்!
பொதுவாக தீபாவளி என்றவுடன்
" தீபாவளி பக்ஷணம்" தான் முதலில் நினைவிற்கு வரும்.......
கொஞ்சம் மழை காலம் என்பதால்
(ஆசையில் போகவர உள்ளே தள்ளுவோம்......) அனைத்தும் ஜீரணிக்க வேண்டுமே!
அதற்காகவே அருமருந்தாய் ஒரு லேகியம்.
என் அம்மா வழி பாட்டி மதுரை என்பதால் 34 தினுசு மருந்து சாமான்களுடன் வீட்டிலேயே தயாரிக்கும் பொடியில் தான் லேகியம் செய்வார்கள்.....
வழிவழியாக அதை நானும் விடாமல் கடைபிடிக்கிறேன்.......
தீபாவளி சமயம் மட்டும் இல்லாமல் வருடம் பூராவுமே இந்த லேகியம் செய்து விரத நாட்கள் தவிர விடிகாலை ஒரு உருண்டை நிச்சயம் உண்பேன் .
என் ஆரோக்கியத்தின் ரகசியம் இதுவும்கூட.......
என் பேத்திகள் பிறந்த பொழுது, இந்த லேகியம் செய்யும் பொழுது நிறைய பூண்டை நெய்யில் வதக்கி அதை மசித்து இந்த லேகியத்தில் சேர்த்து கிளறி பிள்ளை பெற்ற மருந்தாய் உபயோகித்தேன்.......
அந்த மருந்து சாமான் லிஸ்ட், செய்முறையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் எவருக்காவது உதவுமானால் சந்தோஷம்........
கொஞ்சம் நீளமான list.
ஒருமுறை சாமான்
வாங்கி உடனே காயவைத்து
மஞ்சள் பொடி அரைக்கும் மில்லில் கொடுத்து அரைத்து அதே காற்று புகாமல் நன்றாக கிடைத்து வைத்துவிட்டால் ஒரு வருடம் அப்படியே இருக்கும்......
இலுப்பசட்டியில் லேசாக சூடு வர பெறட்டி கொஞ்சமானால் மிக்சியிலேயே அறைத்து சலிக்கனும்.
எல்லாம் க்ராம் கணக்கு.
2. ஓமம். 150
3. மல்லி 150
4. மிளகு. 100
5. அரிசி திப்பிலி 50
6 ஜீரகம் 25
7 கண்டதிப்பிலி 25
8.சித்தரத்தை 25
9 தாளிச்சபத்ரி 25
10 வாயுவிளங்கம் 25
11 லவங்கபட்டை. 25
12 சோம்பு 25
13கசகசா 25
14தேசாவரம் 15
15அதிமதுரம். 15
16அதிவிடயம் 10
17கருஞ்சீரகம். 10
18ஜடாமஞ்சி. 10
19 வெள்ளை மிளகு 10
20 சிறுநாகப்பூ 10
21கோவிட்டம். 10
22அக்ரா. 10
23சதகுப்பை. 10
24வால்மிளகு. 10
25பரங்கிபட்டை. 10
26இந்துப்பூ. 10
27ஏலரிசி. 10
28ஜாதிக்காய் 10
29பசுமஞ்சள் 10
30கஸ்தூரி மஞ்சள் 10
31நெல்லிமுல்லி. 10
32ஜாதிபத்ரி. 10
33க்ராம்பு. 5
34விளாமிச்சவேர். 5
இப்படி சாமான் அறைத்த பொடியில் ,
ஒரு கப் பொடி, 3கப் வெல்லம் ,100க்ராம் இஞ்சி,4 எலுமிச்சை,1/3கப் பசுநெய்,1/4கப் தேன்.
முதலில் இஞ்சியை கழுவி சீவி மிக்ஸியில்கொஞ்சமா ஜலம் சேர்த்து அறைத்து வடிகட்டி 1/2 மணி க்குபிறகு தெளிந்ததும் மேலாக லேகியம் செய்யும் இலுப்பசட்டியில் விட்டு ( அடியில் லேசா படியும் சுண்ணாம்பை கொட்டிடலாம் ) எலுமிச்சையை பிழிந்து , வெல்லத்தை போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி (மண் இல்லாமல் ) அதிரச பாகு பதத்திற்கு வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பொடியை போட்டு கிளறி நெய், தேன் சேர்த்து ( பகவானை நெனச்சுண்டே துளி நாக்கில் ருசி பார்த்து வேண்டுமானால் துளி பொடி orதேன் சேர்த்துக்கலாம். ) ஒன்றாக கிளறி அடுப்பை அணைத்துவிட்டும் கிளறலாம். தானாகவே கெட்டியாகிவிடும்......தினம் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
நிறைய தேன், நெய் சேர்த்து தித்திப்பதால் ரொம்ப சின்ன குழந்தைக்கும் கொடுத்து பழக்கப்படுத்தலாம்.
சென்னையில் தம்புசெட்டி தெருவில் பொடி கிடைப்பதாக கேட்ருக்கேன்.
இத்தனை வகை சாமான் சேர்க்க மாட்டார்கள்.
அத்துடன் சில பொடிகளை சேர்த்தும் இதேபோல செய்யலாம். எத்தனை நாளானாலும் கை, ஜலம் படாமலிருந்தால் கெடாது. ப்ரிஜ்இல் வைக்க அவச்யமில்லை.
ச்ரமம் பாராமல் செய்பவர் பலனடைவர்.
அனுராதாவிஸ்வேசன்.
( நேற்று என்னை வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி........🙏🙏🙏🙏🙏
பலருக்கும் அதில் பதில் தெரிவிக்க முடியவில்லை மார்க் எச்சரிக்கையால்.........உங்கள் அனைவரின் அன்பு வாழ்த்துக்களில் என் பணி தொடரும்......🙏🙏🙏🙏)
No comments:
Post a Comment