Saturday, November 7, 2020

மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள்- பகுதி 1

 மராட்டிய மண்ணின் மிரட்டும் நினைவுகள்...

            பகுதி 1


நாக்பூர்

2019  அக்டோபர். 

தனியே டூர் செல்வதில் உள்ள ப்ரச்னைகளால் ஆபரேட்டர்களை தேடிப்போய்  கேசவன்,ப்ரஸ்டிஜ் என அடுக்கடுக்காக ஏமாந்ததில் முருகன் ட்ராவல்ஸில்  எங்காவது போய் வரலாமென்றால் அவர்கள் ஏற்கனவே பார்த்த காசி ,கயா, பத்ரி என பார்த்த இடங்களுக்கே போகிறார்கள். 

எனவே மீண்டும் தனியே அட்வெஞ்சர் டூர்தான் நமக்கு லாயக்கு என முடிவு செய்து எங்கு போகலாம் என கூகுள், இந்தியா மேப், மற்றும் நந்தனம் சுற்றுலா பொருட்காட்சியில் வாங்கி வந்த Pamphlet ,களை அலசி ஆராய்ந்து பல இடங்களுக்கு போக ஆசையாயிருந்தாலும் அந்த ஊருக்கு டிக்கட்  அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்காது என தெரிந்து கொண்டேன்..

வேறு வழியின்றி எந்த ஊருக்கு டிக்கட் கிடைக்கிறதோ 🤪 அந்த ஊருக்கு டூர் என முடிவு செய்ததில் ரொம்ப கிட்டமும் இன்றி ரொம்ப தூரமும் இன்றி நாக்பூர் முடிவாயிற்று. 

ஏன் நாக்பூர்?  மராட்டியத்தில் அஜந்தா போக ஆசை. ஆனால் அதன் அருகில் உள்ள ஊருக்கு டிக்கட் இல்லை. ம.பியில் சித்ரகூட் போகலாம் என்றால்  அதற்கு அருகிலும் உள்ள ஊருக்கும்  டிக்கட் இல்லை.

எனவே இரண்டு ஊர்களுக்கும் 500 கிமீ தூரத்தில் உள்ள நாக்பூர் போக முடிவு செய்த பின் திரும்பும் போது போன ஊரிலிருந்தே திரும்ப எனக்கு பிடிக்காது என்பதால் 😳ஊர் ஊராக பார்த்துக்கொண்டே

(அலைந்து?)

சென்று வேறு ஊரிலிருந்து திரும்ப முடிவு செய்தேன்..இதன்படி நாக்பூரிலிருந்து 150 கிமீல்  சந்த்ரபூரில் கோயில், கோட்டை காடுகள் இருப்பது தெரிந்து ஒரு வாரம் கழித்து திரும்பி வர டிக்கட் புக் செய்தேன்.. 

டிக்கட் கிடைத்தவுடன் நாக்பூர்,இதன் அருகில் உள ள ஊர்கள்,

ஒரு வாரத்தில் எவ்வளவு தூரம் போக முடியும் தங்க இடம் உண்டா, என்பதையெல்லாம் பற்றிய ஆராய்ச்சியில் அடுத்த ஒரு வாரம் போயிற்று. 

எப்படி திட்டம் போட்டாலும் நான் ஆசைப்பட்ட அஜந்தாவோ சித்ரகூட்டோ போக நிறைய பஸ் ட்ராவல் செய்ய வேண்டும் என்பதால் அதைவிட காந்திஜி தங்கிய வார்தா போன்ற ஊர்களை பார்வையிட்டு கிராமங்கள் வழியாக  மராட்டிய மண்ணின் கலாசாரத்தை அறியலாம் என்று முடிவு செய்து சுஜாதாவிடம் சொல்ல (பெரிய வரலாற்று அறிஞர் என்ற உங்கள் mind voice கேட்கிறது😝)அவளும் வழக்கப்படி தலையாட்டினாள்...

2019 அக்டோபர்14 

இரவு ட்ரெய்னில் ஏறி அமர்கிறோம் இலக்கற்ற பயணத்தை தொடங்க…

படம் 

விஷ்ணு கோயில் பண்டரி புரம்

சிவன் கோயில் சந்த்ராபூர்

புத்தர் கோயில் வார்தா

ஜைனர் கோயில் பத்ராவதி






No comments:

Post a Comment