மராட்டிய மண்ணில்*... பண்டரிபுரம் பகுதி 16
இனி இவள் பார்வையில்...
ராத்திரி முடிந்து கார்த்தால சோலாப்பூர் ஸ்டேஷன்ல இறங்குகிறோம். இங்கிருந்து 40 கிமீ பண்டரிபுரம். பஸ்ஸ்டாண்ட் அருகில் ஒரு ஓட்டலில் காலை டிஃபன் முடித்தபின் பஸ் குறித்து விஜாரிக்கிறார். ஒரு கார் காரன் 400 ரூக்கு பந்தர் பூர் கஜானன் சத்திரத்திலேயே கொண்டு விடறான். . இவரும் அப்பாவும் ஏற்கனவே இந்த சத்ரத்துல வந்து தங்கினதா சொல்றா...
ரெண்டு அருமையான ரூம்கள் 350/-வீதம் கிடைக்கிறது. அருமையான வசதியான ரூம் மற்றும் புல் வெளியுடன் கூடிய பிரமாண்டமான வளாகம் ..காண்டீனும் இருக்கு ..சிலசமயம் ரூம் கிடைக்காது. ரூம் ஆன்லைனில் புக் செய்யலாமாம். . இடமிருந்தால் ஆதார் கார்ட் காண்பித்தும் பெறலாம். இதைத்தவிர சத்திரங்களும் ஓட்டல்களும் உண்டு.
சிரம பரிகாரம் பண்ணின்டு சாப்பிட கிளம்பறோம். கான்டீன் கொஞ்ச தூரம் நடக்கணும். அப்பா அங்க இருக்கற சக்கர நாற்காலி பாத்துட்டு அதுல தள்ளிண்டு போங்கோங்கறார். நல்லாதானே நடக்கறேள். ஏன் இந்த ட்ராமான்னு ரண்டு மாப்பிள்ளைகளும் சத்தம் போடறா..பொண்கள் நாங்க தள்ளிண்டு வரோம் ..நீங்க ஒன்னும் செய்யாண்டாம்னு தள்ளிண்டு வரோம். வழில்லாம் நந்தவனம் ,பூ பூத்திருக்கு..அப்பா ஸ்டைலா கூலிங் க்ளாஸ் மாட்டிண்டு தள்ளு வண்டில உக்காந்து வரார்..
கார்த்தால டிபனா போஹா,வடை,இருக்கு. ரொம்ப சீப்.
போஹான்னா என்ன?எப்படி பண்ணனும்னு அப்பா விஜாரிக்கிறார்..அவங்க மராட்டில சொன்னது புரிஞ்ச மாதிரி அப்பா தலையாட்டினாலும் எனக்கு ஓரளவு புரியறது…
உ.கிழங்கு போஹா
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம், கேரட், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உருளைகிழங்கு, கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் பிசிறிய அவலை போட்டு (உதிர்த்து போட்டு) கலக்கவும்.
நன்கு சூடானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கினால்…. சூப்பரான ஆலு போஹா தயார்.
குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி தொட்டும் சாப்பிடலாம்
போஹாவும் வடையும் சாப்பட்டுட்டு வாசல் வரைக்கும் அப்பாவை தள்ளிண்டு (வண்டிலதான்)வரோம்.
கோயில் கிட்டதான்.இது சத்ரத்து தள்ளு வண்டி..இத தெருவுல தள்ளிண்டு வர முடியாது. . தள்ளுவண்டிலேர்ந்து எறங்குங்கோன்னு மாப்ளைகள் சொல்றா..அப்பா குதிரை வண்டியில போலாம்கிறார்.
பெரிய சாரட் மாதிரி வண்டி வச்சிண்டு குதிரைக்காரா நிக்கறா..இவர் ஆத்தங்கரைக்கு பேரம் பேசி ஒன்னு ஏற்பாடு பண்றார்.அப்பா குதிரை மேல ஏறிண்டு வரேனேங்கறார். எதிர்க்கடைல குதிரையோட கொண்டைல இருக்கற பூவுக்கு மேட்சா ஒரு மாலையை வாங்கி கழுத்துல போட்டுக்கறா...அத்திம்பேர் இப்படி அழிச்சாட்டியம் பண்ணாதேள்..வண்டில ஏறுங்கோங்கறார். ஒரு ஜம்ப் பண்ணி அப்பா வண்டில ஏறிட்றார். எங்களாலதான் ஏற முடியல…
(பாத்தியா இவ்ளோ நேரம் நம்மள தள்ள வச்சுட்டு என்னமா ஜம்ப்னு மாப்பிள்ளைகள் மைன்ட் வாய்ஸ்)
குதிரை பண்டரிபுரம் வீதிகள்ல கம்பீரமா வண்டியை இழுத்துண்டு ஓடறது. அப்பா குதிரைக்காரன்ட தூய தமிழில் பேச அவன் மராட்டியில் எதோ சொல்ல, அப்பாக்கு நன்னா பொழுது போறது...கோயில் எதிரே சந்த்ரபாகா ஆத்தங்கரைல வண்டி நிக்கறது.
எக்கச்சக்கமா படி எறங்கி போறது. மராட்டி பிச்சைக்காரங்க ரெண்டு பக்கமும்...கரையில குட்டி குட்டியா கோயில்கள்…
இந்த நதி பண்டரிபுரத்தைச் சுத்திண்டு அர்த்தசந்திர வடிவில் போவதால் இதனை சந்திரபாகாநதி என்றும் அழைக்கின்றனர். நதியைக் கடக்க பாலம் ஒன்றும் கட்டியிருக்கா... தெளிந்த தண்ணிர் ஓடுவதை கண்டால் அங்கு ஒரு முழுக்குப் போடலாம் என்றும் தோன்றும். அதிலும் பாண்டுரங்கன் கோயிலுக்கு செல்லும் நாம், நன்றாகக் குளித்து விட்டே செல்லலாம்தானே. -
சரீன்னு தீர்த்தமாடறோம்..ஆத்துல தண்ணிய பாத்துட்டு அப்பா நீச்சலடிக்கறா..அப்பாவோட நிதானமான நீச்சல பாத்து மறுபடி மாப்பிள்ளைகள் கடுப்ஸ்…
சீக்ரம் கிளம்பி வரலேன்னா விட்டுட்டு போயிடுவோம்கறா...அவசரமா துணி மாத்திண்டு அப்பாவையும் கையப்புடிச்சி இழுத்து ட்ரெஸ் மாத்திக்க சொல்லி கெளம்பறோம்…ட்ரஸ் மாத்திண்டதுக்கப்பறம் திருமட்டிய தெறந்து அரை மணி நேரம் திருமண் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கறா..ஒரு வழியா படியில அப்பாவ ஏத்தறதுக்குள்ள பிச்சைக்காரா அப்பாவ பெரிய தர்ம ப்ரபுன்னு நெனச்சிசூழ்ந்துக்கறா.. அப்பா bag உள்ள கைய விட்டு அரை மணி தேடி ஒரே ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா போடறார். மத்த பிச்சைக்காராளும் மாப்பிள்ளைகளும் கடுப்போ கடுப்பு.
மாப்பிள்ளைகள் இப்ப க்யூ உள்ள நுழையலேன்னா பூஜைக்கு ஒரு மணி நேரம் காத்திருக்கணும்..நீங்க அப்பாவ அழைச்சிண்டு மெதுவா வாங்கோன்னு விறுவிறுன்னு க்யூவுக்கு போயிடறா...நானும் அக்காவும் அப்பாவ ஆளுக்கு ஒரு கைய பிடிச்சி தரதரன்னு அவா பின்னாடி ஓடறோம்.அப்பா எல்லாரும் தலைல போட்டு இருக்கற மராட்டி குல்லா தானும் போட்டுக்கனும்னு குல்லா கடைக்கு கூப்பிடறார்.
குல்லாவ விலை பேசி வாங்கினப்பறம் மணி பத்து என்பதால் வெயில் ஏற ஆரம்பிக்க தன் செருப்பை பெங்களூர் ஸ்டேஷனில் தண்டவாளத்தில் விட்டது அப்பா நினைவுக்கு வந்து செருப்பு கடைக்கு கூப்பிடறார்.பக்கத்துல தான் கோயில் வரும்போது வாங்கலாம் என சொல்லி அழைத்து செல்கிறோம்.
தெரு முழுக்க ஜனங்கள் நெரிசல்..இதுல இவாள தேடி கண்டுபிடிப்பதா? அப்பாவின் அடாவடி ஆசைகளை, தீர்த்து வைப்பதா?.பூஜைகள் ஆரம்ப மாகிவிட்டதன் அறிகுறியாய் கோயில் மணி கோயிலுக்குள்ளிருந்து ஒலிக்கிறது. ஜனக்கூட்டத்தின் கடைசியில் சேருகிறோம் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு கோயில் வாசலில் மெடல் டிடக்டர் சோதனையில் அப்பா இடுப்பு பர்ஸில் வைத்திருந்த பட்டன் போன் சிக்கி மறுபடியும் வெளியே போய் எங்கயோ டெபாசிட் செய்து விட்டு வர சொல்கிறார்கள். அப்பாவிற்கு துணையாய் நான் இருக்க அக்கா வெளியே போகிறாள்….
படங்கள்.1) அப்பா தள்ளுவண்டியில் 2)அப்பா ,அத்திம்பேர் வாக்குவாதம்3)வண்டிலேர்ந்து எறங்கறார். 4)பாண்டுரங்கன் கோயில். ஆற்றங்கரை
No comments:
Post a Comment